Home /News /spiritual /

வடபழனி முருகன் கோவில் நடை திறப்பு, முடியும் நேரம் குறித்த தகவல்கள்...

வடபழனி முருகன் கோவில் நடை திறப்பு, முடியும் நேரம் குறித்த தகவல்கள்...

வடபழனி கோவில்

வடபழனி கோவில்

Vadapalani temple timings | வடபழநி முருகன் கோவில் என்பது சென்னைக்கு மேற்கே வடபழநியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும். இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜ கோபுரம் கட்டப்பட்டது.

    சென்னை வடபழனியில் அமைந்துள்ள அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் முருகன் கோவில்களில் மிகவும் பிரபலமானது. உள்ளூர் மட்டுமல்லாது, வெளி மாநிலங்கள், வெளி நாட்டு பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்காக வடபழனி முருகன் கோவிலுக்கு வருவது உண்டு. மேலும் இத்தலத்தில் அருள்பொழியும் முருகன், பாதத்தில் காலணிகள் அணிந்து இருப்பது சிறப்பான ஒன்று. இங்கு, அங்காரகன் அதாவது செவ்வாய் தனி சன்னதியில் குடிகொண்டிருப்பது, கூடுதல் சிறப்பு. இவர், முருகனுக்கு மிகவும் பிடித்தவர். இந்த ஆலயத்தில் முருகனுக்குத் தங்கத் தேர் உள்ளது.

    கோவில் நடை திறப்பு மற்றும் முடிவு நேரம்

    காலை - 09:00 பிற்பகல் முதல் 04:30 முற்பகல்
    மாலை - 08:00 முற்பகல் முதல் 01:00 பிற்பகல்

    வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் மாதந்தோறும் கிருத்திகை நாட்களில் மாலை 3 மணி அளவில் நடை திறக்கப்படும். கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா நாட்களில் எப்பொழுதும் நடை திறந்திருக்கும்.

    பூஜைகளும் அபிஷேகமும்

    இத்திருக்கோயிலில், மூலவருக்கு தினமும் நான்கு கால பூஜைகளும் பால் அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பாக நடந்து வருகிறது. இதற்கு, பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு, இதற்கான கட்டணத்தை செலுத்தி, பால் அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் நேரடியாக கலந்து கொண்டு முருகப்பெருமானைத் தரிசிக்கிறார்கள்.

    இந்தப் பாலாபிஷேகம் மூலவருக்கு மட்டுமல்லாது, விநாயகர், சொக்கநாதர், வள்ளி – தெய்வானை சுப்பிரமணியர், அங்காரகன், மீனாட்சியம்மன், ஆஞ்சநேயர், சண்முகர், மாகாளி, நாக சுப்ரமணியர் மற்றும் பைரவர் என அனைத்து சன்னதிகளிலும், அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கலந்து கொள்ள முடியாதவர்கள், வெளியூரில் இருப்பவர்கள் தங்களுக்கு உண்டான பிரார்த்தனைகளை கடவுளிடம் வேண்டிக் கொண்டு அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி பூஜைகளில் மானசீகமாக கலந்துகொண்டு பகவானின் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.



























    இன்றைய பூஜைகள்நேரம்
    திருப்பள்ளி எழுச்சி09:30 பிற்பகல்
    காலசாந்தி10:30 பிற்பகல்
    உச்சிகாலம்03:00 முற்பகல்
    சாயரட்ச்சை08:30 முற்பகல்
    அர்த்தசாமம்01:00 பிற்பகல்

    பூஜைக்கான கட்டணங்கள்

     

























































































    எண்சேவை விபரம்கட்டணம்(ரூ.)
    1பால் அபிஷேகம் தினசரி காலை 7 மணி மட்டும் (அனுமதி 2 நபர்கள் மட்டும்)250.00
    2பால் அபிஷேகம் அங்காரகன் காலை 8 மணி மட்டும் (அனுமதி 2 நபர்கள் மட்டும்)250.00
    3சந்தன காப்பு தினசரி காலை 11 மணி மற்றும் மாலை 4.30 மணி மட்டும் (அனுமதி 5 நபர்கள் மட்டும்)1,400.00
    4வடை மாலை (ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு) (தினசரி காலை 7 மணி மட்டும்)250.00
    5சங்கு அபிஷேகம் காலை 10 மணி (அனுமதி 5 நபர்கள் மட்டும்)2,500.00
    6திருக்கல்யாணம் மாலை 5 மணி (அனுமதி 5 நபர்கள் மட்டும்)3,000.00
    7தங்கரதம் கட்டணம் - ஒரு சுற்றுக்கு (அனுமதி 5 நபர்கள் மட்டும்)3,000.00
    8சர்க்கரை பொங்கல் (1 கிலோ பச்சரிசி திட்டம்)300.00
    9வெண் பொங்கல் (1 கிலோ பச்சரிசி திட்டம்)200.00
    10புளியோதரை (1 கிலோ பச்சரிசி திட்டம்)200.00
    11உச்சிகால நைவேத்யம் (நாள் ஒன்றுக்கு)1,500.00
    12அன்னதானம் (100 நபர்)2,500.00
    13அன்னதானம் (வருடத்தில் ஒரு நாள்) - வைப்புத் தொகை25,000.00
    14ஹோமத் திருமணம் பொருள்கள் உட்பட4,765.00
    15வள்ளி திருமண மண்டபம் ஒரு நாள் வாடகை (24 மணி நேரம்)140,000.00
    16வள்ளி திருமண மண்டபம் அரை நாள் வாடகை (12 மணி நேரம்)75,000.00

     

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Murugan temple

    அடுத்த செய்தி