சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு வரும், பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நேற்று மட்டும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்தனர். இதுவரை தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்தநிலையில் இன்று அதிகாலை மூன்று மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 4 மணிமுதல் காலை 9 மணி வரை மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதனிடையே பக்தர்களுக்கு கேரள அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சபரிமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also see... பைக், ஆட்டோ, சரக்கு வாகனங்களில் வரக்கூடாது : சபரிமலையில் புதிய கட்டுப்பாடு
பிளாஸ்டிக் இல்லாத சபரிமலை
1. சபரிமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
2. பக்தர்கள் தங்களது இருமுடிக்கட்டில் பிளாஸ்டிக்பொருட்களை (பாட்டில், கவர் போன்றவை) தவிர்க்க வேண்டும்.
3. பம்பையை அசுத்தமாக்க கூடாது. பம்பை நதியில் உடைகள் உள்பட பொருட்களை வீச வேண்டாம். புண்ணிய நதியான பம்பையை அசுத்தமாக்காமல் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு பக்தரின் பொறுப்பாகும்.
4. குப்பைகளை வீசாதீர்கள். குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் மட்டுமல்லாமல் வேறு எந்த இடத்திலும் வீசுவதை தவிர்க்க வேண்டும்.
5. பக்தர்கள் பொது இடங்களில் மலஜலம் கழிக்கக் கூடாது. மலஜலம் கழிப்பதற்கு கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும்.
6. பம்பை, சன்னிதானம் மற்றும் மலை ஏறும் வழிகளை தூய்மையாக பாதுகாக்கவேண்டும். மது, போதைப் பொருள் இல்லாத புனித பயணமாக இருக்க வேண்டும். பக்தர்கள் மது உள்பட போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
7. பம்பை, சன்னிதானம், வனப்பாதை உள்பட பலஇடங்களில் புகைபிடிக்கக்கூடாது. ஆயுதங்கள், பட்டாசுகள் உள்பட வெடிபொருட்களை கைவசம் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
8. தீ பற்ற வைக்கும் போது கவனம் தேவை. ஸ்டவ் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை சன்னிதானத்தில் பயன்படுத்த அனுமதி இல்லை. தீ பற்ற வைத்தால் தேவை முடிந்தவுடன் அதை அணைக்க வேண்டியது அவசியமாகும்.
Also see... இதையும் படிங்க: சபரிமலை மண்டல காலத்தில் தினசரி நடைபெறும் பூஜைகள்... முழுவிவரம் இதோ!
காவல்துறையை அழைக்கலாம்
1. பாதுகாப்பு பரிசோதனைகள் உள்ள இடங்களில் பக்தர்கள் தாங்கள் சுயமாக பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டும்.
2. பக்தர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளுக்கு காவல்துறையை தொடர்பு கொள்ளலாம். சந்தேகத்திற்கிடமான வகையில் ஏதாவது தென்பட்டால் உடனடியாக காவல்துறையிடம் விவரம் தெரிவிக்க வேண்டும்.
3. யாராவது வழி தவறி சென்றால் காவல் புறக்காவல் நிலையத்தின் உதவியை நாட வேண்டும்.
4. வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் சிறுமிகள் தங்களது கழுத்தில் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் கூடிய அடையாள அட்டையை அணிய வேண்டியது அவசியமாகும்.
நடமாடும் மருத்துவ மையங்கள்
1. ஆக்சிஜன் பார்லர்கள் மற்றும் மருத்துவ மையங்களின் சேவையைபக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பம்பையிலும், நிலக்கல் பகுதியிலும் அவசர சிகிச்சை வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவ மையங்கள் பக்தர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2. சன்னிதானத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஸ்டீல் பாட்டில்களில் குடிநீர் விநியோகம் தொடங்கியது.
3. சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கும் வகையில் சன்னிதானத்தில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு புதிதாக 500 ஸ்டீல் பாட்டில்களில் மருந்துவ குணம் கொண்ட தண்ணீர் விநியோகம் செய்ய தொடங்கியது.
இது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அட்வ. கே. ஆனந்த கோபன் கூறுகையில், “ சபரிமலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பெரிய நடைபாதையில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர் விநியோகம் ஸ்டீல் பாட்டில்கள் மூலம் வழங்குவதன் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்க்க முடியும்” என தேவசம்போர்டு தலைவர் தெரிவித்தார்.
Also see... Also see... சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு கேரள அரசின் முக்கிய அறிவிப்பு.!
பசுமை திட்டத்தை பின் பற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க ஸ்டீல் பாட்டில்கள் தேர்வு செய்யப்பட்டன. தண்ணீர் குடித்துவிட்டு, தண்ணீர் பாட்டில் உடனடியாக மற்ற பக்தர்களுக்குக் கொடுக்கப்பட்டு, காலியானவுடன் திருப்பித் தரப்படுகிறது. கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சன்னிதானம் செல்லும் வழியிலும், சபரிமலை சன்னிதானத்தின் பல்வேறு இடங்களிலும் மருத்துவக் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உதவிகளுக்கான தொலைபேசி எண்கள்
அவசர செயலாக்க மையம் 04735 202166
பம்பை 04735 203255
நிலக்கல் 04735 205002
பத்தனம்திட்டா மாவட்ட பேரிடர் நிவாரண அமைப்பு 0468 2322515
பம்பை காவல் நிலையம் 04735 203412
நிலக்கல் காவல் நிலையம் 04735 205207
சன்னிதானம் காவல் நிலையம் 04735 202014
பத்தனம்திட்டா மகளிர் காவல் நிலையம் 0468 2272100
பத்தனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 0468 2222636
அவசர மருத்துவ மைய கட்டுப்பாட்டு அறை 04735 203232
நிலக்கல் அரசு மருத்துவமனை 04735 205202
பத்தனம்திட்டா மாவட்ட மருத்துவமனை சபரிமலை வார்டு 9188746248
சன்னிதானம் அரசு மருத்துவமனை 04735 202101
சாலை பாதுகாப்பு மண்டல திட்டம் 9400044991, 9562318181, 0468 2222426 (அலுவலகம்)
சன்னிதானம் தீயணைப்பு நிலையம் 04735 202033
சன்னிதானம் வனத்துறை 04735 202074
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.