பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் உமா மகேஸ்வர விரதம்...

சிவன்

ஆவணி அல்லது புரட்டாசியில் வரும் பௌர்ணமி தினத்தில் வழிபடுவதே உமாமகேஸ்வர விரதம். இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.

 • Share this:
  சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு. சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமா மகேஸ்வர விரதம் என்பவைதான் அவை. இதில் உமா மகேஸ்வர விரதத்தை ஒருவர் முறைப்படி கடைபிடித்தால் மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டியதில்லை என்று காஞ்சி மஹா பெரியவர் கூறியுள்ளார்..

  சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை’ என்பார்கள். இரண்டும் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலே, உலகம் இயங்கும் என்பதை வலியுறுத்தும் தத்துவம் இது. அப்படி சிவனும், சக்தியும் இணைந்திருக்கும் வடிவமே, ‘உமா மகேஸ்வரர்’ வடிவம்.  சிவனின் அற்புத வடிவங்களில் உமா மகேஸ்வர வடிவமும் ஒன்று. இந்த வடிவத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் நினைத்து இருக்கும் விரதத்திற்கு ‘உமா மகேஸ்வர விரதம்’ என்று பெயர். பிரிந்த தம்பதியர் இணைவதற்கும், தம்பதியருக்குள் எப்போதும் ஒற்றுமை நிலவுவதற்கும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.இவர்களை ஒரு சேரத் தியானித்து ஆவணி அல்லது புரட்டாசியில் வரும் பௌர்ணமி தினத்தில் வழிபடுவதே உமாமகேஸ்வர விரதம்.

  இந்த விரதத்தைத் தொடங்கினால் தொடர்ந்து 16 வருடங்கள் வரை இருக்க வேண்டும். விரத நாளன்று காலையில் குளித்து முடித்து இறைவனை எண்ணி சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு கலசத்தில் உமா மகேஸ்வரரை ஆவாகனம் செய்து சோடச உபசார பூஜைகள் செய்ய வேண்டும். சிலர் உமா மகேஸ்வரர் சிலையை வைத்தும் வழிபடுவார்கள்.

  மேலும் படிக்க... நீங்கள் புதுமண தம்பதிகளா? அப்போ திருப்பதி ஏழுமலையானின் இந்த பிரசாதம் உங்களுக்குதான்...

  பூஜை முடிந்ததும் சிவனடியார்கள், விருந்தினர்களுக்கு உணவிட்டு பிறகே விரதமிருந்தவர்கள் உணவு எடுத்துக்கொள்ளலாம். இந்த விரதத்தின் முக்கிய நோக்கியமே உணவிடுவதுதான். எனவே, அதிதிகளுக்கும், ஏழைகளுக்கும் மலர்ந்த முகத்தோடு உணவிடுவது அவசியம். மகாலட்சுமியைப் பிரிந்த திருமால் கௌதம முனிவரின் ஆலோசனையை ஏற்று உமாமகேஸ்வர விரதம் இருந்துதான் திருமகளை அடைந்தார் என்பது புராணம் கூறும் தகவல். இன்றும் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் விரதமாகவே இது இருந்து வருகிறது.

  மேலும் படிக்க... புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் என்னென்ன?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: