Home /News /spiritual /

பிரதோஷத்தின் வகைகளும்... அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் பலன்களும்...

பிரதோஷத்தின் வகைகளும்... அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் பலன்களும்...

பிரதோஷத்தின் பெயர்களும் அதற்கான விளக்கங்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

பிரதோஷத்தின் பெயர்களும் அதற்கான விளக்கங்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

பிரதோஷத்தின் பெயர்களும் அதற்கான விளக்கங்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷத்திற்கு ஒரு  பெயர்  உள்ளது. அதில் மிகவும் விஷேஷமான சிலை பிரதோஷ வகைகள் மற்றும் அதன் பலன்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... 

    நித்ய பிரதோஷம்:

    தினமும் மாலையில் சூரியன் மறைவதற்கு முந்திய 90 நிமிடம் (மாலை 4:30 – 6:00 மணி) நித்ய பிரதோஷம் எனப்படும். இந்த நேரத்தில் சிவனை தரிசிப்பது நல்லது. ஐந்து வருடம் தரிசிப்பவர்கள் சிவனருளால் பிறப்பற்ற நிலையை அடைவர்.

    பட்சப் பிரதோஷம் :

    அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறையில் 13வது திதியான திரயோதசி திதியன்று வருவது.

    மாதப் பிரதோஷம் :

    பவுர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறையில் 13வது திதியான திரயோதசி திதியன்று வருவது

    திவ்யப் பிரதோஷம் :

    துவாதசியுடன் திரயோதசி சேர்ந்து வருவது அல்லது திரயோதசியுடன் சதுர்த்தசி சேர்ந்து வருவது திவ்யப் பிரதோஷம். இந்நாளில் சிவனை தரிசித்தால் முன் ஜென்ம பாவம் தீரும்.

    தீபப் பிரதோஷம் :

    பிரதோஷ நாளில் விளக்கு தானம் செய்வது. இந்நாளில் சிவன் கோயிலில் தீபங்களை ஏற்றினால் சொந்த வீடு அமையும் யோகம் உண்டாகும்.

    சப்தரிஷி பிரதோஷம் :

    ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே சப்தரிஷி மண்டலம் ஆகும். பிரதோஷ வழிபாடு முடித்தபின் சப்தரிஷிகளை மனதில் நினைத்து வழிபட்டால் திருவருள், குருவருள் சேரும்.

    மகா பிரதோஷம் :

    சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருவது மகா பிரதோஷம். சிவன் விஷம் அருந்திய நாளான இதில் சுயம்பு லிங்கத்தை வழிபடுவது சிறப்பு.

    உத்தம மகா பிரதோஷம் :

    சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வளர்பிறையின் போது சனிக்கிழமையும், திரயோதசி திதியும் இணைவது உத்தம மகா பிரதோஷமாகும்.

    ஏகாட்சர பிரதோஷம்:

    வருடத்தில் ஒருமுறை மட்டுமே மகா பிரதோஷம் வருவது

    அர்த்தநாரி பிரதோஷம் :

    வருடத்தில் இரு முறை மகாபிரதோஷம் வருவது. இந்நாளில் சிவனை தரிசித்தால் திருமணத் தடை நீங்கும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும்.

    திரிகரண பிரதோஷம்:

    வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வருவது. இதை தரிசித்தால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும்.

    பிரம்ம பிரதோஷம் :

    வருடத்தில் நான்கு முறை மகாபிரதோஷம் வருவது. பிரம்மா தனக்கு ஏற்பட்ட சாபம் தீர திருவண்ணாமலையில் சிவதரிசனம் செய்ததால் இப்பெயர் வந்தது. முன்ஜென்மப் பாவத்தை இது போக்கும்.

    அட்சரப் பிரதோஷம் :

    வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வருவது. தாருகாவனத்தில் இருந்த ரிஷிகள் ஆணவத்தால் சிவனை எதிர்த்தனர். அதை அடக்க பிட்சாடனராகத் தோன்றி தக்க பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள் அட்சரப் பிரதோஷ விரதமிருந்து விமோசனம் பெற்றனர்.

    கந்தப் பிரதோஷம்:

    சனிக்கிழமையில் திரயோதசி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவது. சூரனை வதம் செய்வதற்கு முன் முருகப்பெருமான் இந்நாளில் வழிபட்டதால் இப்பெயர் வந்தது.

    சட்ஜ பிரபா பிரதோஷம் :

    ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வருவது. வசுதேவர், தேவகி தம்பதிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எட்டாவது குழந்தையான கண்ணன் கருவில் இருக்கும் போது தேவகி இந்த விரதம் மேற்கொண்டாள். இதைக் கடைபிடித்தால் அழகான, அறிவு மிக்க குழந்தைகள் பிறப்பர்.

    அஷ்ட திக் பிரதோஷம் :

    ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷம் வருவது இதில் தரிசித்தால் அஷ்டதிக்கு பாலகர்களின் அருளால் குறையாத செல்வம், புகழ் வரமாகக் கிடைக்கும்.

    நவகிரக பிரதோஷம் :

    ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வருவது. அரிதான இதை அனுஷ்டித்தால் சகல சவுபாக்கியம் கிடைக்கும்.

    துத்த பிரதோஷம் :

    ஒரு வருடத்தில் பத்து மகாபிரதோஷம் வருவது. இதை தரிசித்தவருக்கு சிவனின் திருவடியை அடையும் பேறு கிடைக்கும்.

    மேலும் படிக்க... இன்று கார்த்திகை மாத பிரதோஷம்... சிவனை வணங்கினால் கஷ்டங்கள் தீரும்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sivan

    அடுத்த செய்தி