Home /News /spiritual /

திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் இதுவரை இல்லாத அளவுக்கு பக்தர்கள் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் இதுவரை இல்லாத அளவுக்கு பக்தர்கள் காணிக்கை

திருப்பதி

திருப்பதி

Tirupati | திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் இதுவரை இல்லாத அளவு கடந்த மே மாதம் அதிக அளவில் உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கமான ஒன்று தான். இந்தியாவிலேயே அதிகமாக உண்டியல் காணிக்கை வரும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    கொரோனா தொற்றின் போது பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது தொற்று குறைந்து உள்ளதால் பக்தர்களுக்கு அதிக அளவில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மே மாதம் கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்ததுள்ளது. ஏழுமலையானை தரிசிக்க 2 நாட்களுக்கு மேல் பக்தர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் இதுவரை இல்லாத அளவு உண்டியல் வசூலாக மே மாதம் 130.29 கோடி ரூபாய் காணிக்கையாக வந்துள்ளது என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மே மாதத்தில் ஏழுமலையானை 22,62,000 பேர் தரிசனம் செய்துள்ளனர். மே மாதத்தில் 1.86 லட்சம் லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 10,72,000 பேர் முடி காணிக்கை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read : எந்த ராசிக்கல்லுடன் எதை இணைத்து அணியக் கூடாது: பொருத்தமான ரத்தினக்கற்களை அணிவதன் முக்கியத்துவம்!

    கொரோனா பெருந்தொற்றுக்கு பின் திருமலையில் கடந்த மே மாதம் அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்துள்ளனர் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் அதிக பக்தர்கள் வருகை தந்து 2 நாட்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். திருமலை அறக்கட்டளைக்கு தமிழக பக்தர்கள் ரூ.10 கோடி நன்கொடை அளித்துள்ளனர். மேலும் சென்னையை சேர்ந்த சூர்ய நாராயணன் என்ற பக்தர் ரூ.2.45 கோடி மதிப்பில் 4 கிலோ தங்க மற்றும் வைர நகைகளை நன்கொடையாக வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Tirupati

    அடுத்த செய்தி