• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • திருப்பதி போக பிளானா? இது உங்களுக்கான செய்தி

திருப்பதி போக பிளானா? இது உங்களுக்கான செய்தி

திருப்பதி

திருப்பதி

வரும் 17 மற்றும் 18 தேதிகளில் புயுல் காரணமாக திருமலைக்கு செல்லும் நடைபாதை தற்காலிகமாக மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    திருப்பதி ஏழுமலையானை தரிசக்க பக்தர்களுக்கு வழங்கப்படும் அனுமதியை அதிகரிக்க தேவஸ்தானம் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் வரும் 17 மற்றும் 18 தேதிகளில் புயுல் காரணமாக திருமலைக்கு செல்லும் நடைபாதை தற்காலிகமாக மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு திருப்பதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச டோக்கன் ஆன்லைனில் விநியோகம் செய்யப்பட்டுள வருகிறது. ஒவ்வொரு மாதம் தொடங்கும் முன் தேவஸ்தானத்தின் அதிகராப்பூர்வ https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட்கள் அனைத்தும் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் விற்று தீர்ந்துவிட்டன. ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அதிக அளவிலான அனுமதி வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் பேசிய போது, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. திருப்பதியில் பக்தர்களை அதிக அளவில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே விரைவில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதில் வரும் 30-ம் தேதி வரை ஆன்லைன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் அதற்கான டிக்கெட் எவ்வாறு வழங்குவது என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தரிசன டிக்கெட்களை நேரடியாக திருப்பதியில் வழங்குவதா அல்லது ஆன்லைன் மூலம் வெளியிடுவதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

    இதனிடையே புயல் காரணமாக 17, 18 ஆகிய தேதிகளில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் அலிபிரி வழி நடைபாதை மற்றும் சீனிவாசமங்காபுரம் வழியாக செல்லும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை ஆகியவற்றை தற்காலிகமாக மூட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்தர்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவும் வாகனங்கள் மூலம் மட்டுமே 17, 18 ஆகிய தேதிகளில் திருப்பதி மலைக்கு வரவும் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: