Home /News /spiritual /

உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா... ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம்...

உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா... ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம்...

Trichy Vekkali Amman temple | பக்தர்கள் கொண்டு வரும் பூக்கள் யாவும் அம்மனுக்கு சாத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு கூடைகளில் பூக்களைக் கொண்டுவந்து சாத்தி வழிபாடு செய்தனர்.

    தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்தது, திருச்சி உறையூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வெக்காளியம்மன் ஆலயம். இது மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். மக்களின் குறைதீர்க்கும் விதமாக மேற்கூரையின்றி அருள்பாலித்துவரும், இவ்வாலயத்தின் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை, மற்றும் புத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    பிரசித்திபெற்ற இவ்வாலயத்தில் இன்று பூச்சொரிதல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் ஊழியர்கள், கிராமமக்கள் உள்ளிட்ட பெருந்திரளான பக்தர்கள் மேளதாளங்கள் முழங்கிட பூக்களை கூடைகளில் ஊர்வலமாக கொண்டு வந்து அம்மனுக்கு சாத்தினர். பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    மேலும் படிக்க... சித்திரைத் தேரோட்ட விழா: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

    அதனைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வரும் பூக்கள் யாவும் அம்மனுக்கு சாத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு கூடைகளில் பூக்களைக் கொண்டுவந்து சாத்தி வழிபாடு செய்தும், விளக்குகளை ஏற்றியும் வணங்கி சென்றனர். அதேநேரம் அம்மனுக்கு சாத்தபட்ட பூக்கள் யாவும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க்கது.

    செய்தியாளர்: கதிரவன், திருச்சி

    மேலும் படிக்க.. திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோவிலின் சிறப்புகள்!

    மேலும் படிக்க.. திருப்பதியில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடும் தேதி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Trichy

    அடுத்த செய்தி