திருமணத் தடை நீங்கவும், கடன் தொல்லை தீரவும் வணங்க வேண்டிய அற்புத ஆலயம் எது தெரியுமா?

வயலூர் முருகன் கோவில்

வயலூர் முருகன் கோயிலில், குழந்தையை தத்துக்கொடுக்கும் பரிகாரம் ரொம்பவே விசேஷமானது.

  • Share this:
முருகப் பெருமானுக்குப் பிடித்தமான ஆலயங்கள் இரண்டு என்பார் அருணகிரிநாதர். ஒன்று திருச்செங்கோடு, மற்றொன்று திருச்சி வயலூர். திருச்சியில் இருந்து மேற்கே, 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். குமாரவயலூர் என்னும் வயலூர், வயல்கள் சூழ்ந்த இடம் என்பதால் இந்தப் பெயர் பெற்றது என்பர்.

வயலூர் முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால், இம்மையிலும் மறுமையிலும் எல்லாம் தந்தருள்வான் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து புத்தூர், உய்யகொண்டான் திருமலை வழியாக சுமார் 15 கி.மீ. பயணித்தால், வயலூர் திருத்தலத்தை அடையலாம்.



9ம் நூற்றாண்டின் திருக்கோயில் இது. உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் என்று கல்வெட்டுகளும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. இந்தத் தலத்தின் இறைவன் ஆதிநாத சுவாமி. அம்பாளின் திருநாமம் ஆதிநாயகி. இந்தத் தலத்தில், சக்தி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சர்ப்ப தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இங்கே உள்ள சிவானரையும் அம்பாளையும் முருகப் பெருமானையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், எதிர்ப்புகளெல்லாம் விலகும். முக்கியமாக திருமணதடை நீங்கும். கடன் தொல்லை தீரும்.இம்மையில், இந்தப் பிறவியில் எல்லா சத்விஷயங்களையும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். முருகனின் சிறந்த பக்தர்களில் ஒருவரான அருணகிரிநாதர் வழிபட்டு இறவா புகழைப் பெற்றார். இதுவே இந்த ஆலயத்தின் மகிமையை உணர்த்துவதாக உள்ளது.

வயலூர் முருகன்


குழந்தை தத்து கொடுக்கும் கோயில் :

வயலூர் முருகன் கோயிலில், குழந்தையை தத்துக்கொடுக்கும் பரிகாரம் ரொம்பவே விசேஷமானது. குழந்தைக்கு அடிக்கடி உடல்நலமில்லை, சரியாகச் சாப்பிடவில்லை, இரவில் பயந்து அழுதுகொண்டே இருக்கிறது என்பதான பிரச்சினைகள் இருந்தால், இங்கே வந்து, முருகனிடம் இனி இந்தக் குழந்தை உன் குழந்தை எனக் கூறி தத்துக்கொடுக்கும் பரிகாரம் செய்கிறார்கள். குழந்தையை தத்துக்கொடுத்துவிட்டு அழைத்துச் சென்றால், இனி குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்என்று என்கிறார்கள் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க... நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...   

ஆங்கிலேயர் கட்டிய கோவில்: போர்க்களத்தில் போரிட்ட சிவபெருமான்!

மேலும் இந்த கோயிலில் வைகாசியில் விசாகப் பெருந்திருவிழா, கந்தசஷ்டி விழா, பங்குனி உத்திரம், தைப்பூசம் முதலான விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.வயலூர் முருகப்பெருமானை செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் தரிசியுங்கள். சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vaijayanthi S
First published: