ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரத்தின் சிறப்புகள்!

திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு சாற்றிய மஞ்சளை வாங்கி தினசரி தேய்த்து குளித்து வருவதன் மூலமாக கண்டிப்பாக திருமண தடைகள் விலகும்.  சுபகாரியங்கள் நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரத்தின் சிறப்புகள்!
ஆண்டாள்
  • News18
  • Last Updated: August 2, 2019, 3:24 PM IST
  • Share this:
ஆடி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மார்கழி மாதம் இறுதி நாள் வரைக்கும் தக்ஷிணாயனம் என்று அழைக்கப்படும். இந்த தக்ஷிணாயன புண்ணிய காலத்திலே ஆடிப்பூரம் மிக மிக விசேஷமான ஒரு தினமாகும்.

ஜோதிடரீதியாக சூரியனும் சந்திரனும் சரியான பாதையில் பரிவர்த்தனை பெறும் நாள். ஆடிப் பூரம் அன்று சூரியன் வீட்டில் சந்திரனும் சந்திரன் வீட்டில் சூரியனும் சரியானபடி இருக்கக்கூடிய நாள். இந்த நாளில் அம்பாளைத் தரிசிப்பதும் வழிபடுவதும் சகல நன்மைகளையும் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். இந்த வருடம் ஆடிப்பூரம் ஆடிப்பெருக்கு அன்று வருகிறது. 3 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமையான நாளைதான் இந்த ஆடிப்பூரம் வருகிறது. பூரம் என்றால் பெருகுவது என்று பொருள்.

இது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளாக்கம் தருகிறார், பெருங்குளம் ஜோதிடர் ராமகிருஷ்ணன்


ஆடிப்பூரத்தின் சிறப்புகள் குறித்து கேட்ட கேள்விக்கு,                    “ஆடிபூரம் மஹாலக்ஷ்மி அம்சமான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினம். ”அரங்கனுக்கே ஆளாவேன்” என்று பிறந்த ஆண்டாள் நாச்சியார் பிறந்த தினமானது, பார்வதி தேவி ருதுவான நாள். சரஸ்வதி தேவி வீணை பெற்ற தினம். இதனால் இந்த ஆடிப்பூரம் ஆனது முப்பெரும் தேவியருக்கும் மிகப்பெரிய ஒரு முக்கியமான நாளாக அமைந்திருக்கிறது” என்றார்.

இந்த ஆடி மாதத்தில் அம்பாளுக்கு நடத்தப்படும் வளைகாப்பு குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர்,” இந்த நாளில் நம்மை காக்கும் அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் செய்வது நாம் நமது அம்மைக்கு ஒரு நன்றிக் கடன்  செலுத்துவது ஒரு ஐதீகம். நம்மை காக்கும் தாய்க்கு இந்த நாளிலே சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகள் செய்து மஞ்சளால் செய்த மாலை சாற்றி அம்பாளுடைய கைகளுக்கு வளையல்கள் அணிவித்து வணங்குவது மிகப்பெரிய ஒரு பரிகாரம்” என்றார்.

ஆடிபூரத்தில் அம்ம்பளை வணங்கினால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்ற கேள்விக்கு,”  குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அம்பாளுக்கு சாத்த்ப்படும் அந்த வளையல்களை பெற்றுக் கொள்வதன் மூலமாக குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் அம்பாளுக்கு அம்பாளுடைய வயிற்றிலே பச்சை பயிறு, முளை கட்டிய பச்சைப் பயிறு வைத்து பூஜை செய்திருப்பார்கள். அதனை நாட்டு சர்க்கரையுடன் கலந்து சாப்பிடுவதன் மூலமாகவும் நமக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்” என்றார்.இதயும் படிங்க...ஆடி மாதத்தின் சிறப்புகளும் விரதங்களும்!

திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்குமா என்று கேட்ட கேள்விக்கு,” திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு சாற்றிய மஞ்சளை வாங்கி தினசரி தேய்த்து குளித்து வருவதன் மூலமாக கண்டிப்பாக திருமண தடைகள் விலகும். சுபகாரியங்கள் நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை” என்று கூறினார்.

மேலும் அம்பாளை வழிபட்டு அளப்பரிய நன்மைகளைப் பெற்று மகிழ்வோம். அம்பாள் வழிபாடு செய்வது மிகப் பெரிய நல்ல காரியம் இதன் மூலம் நம்முடைய பரிபூரண கடாக்ஷம் என்பது கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார்.

 -பெருங்குளம் ஜோதிடர் ராமகிருஷ்ணன்

Watch Also: நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர்
First published: August 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading