ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

நாளை புரட்டாசி 4வது சனிக்கிழமை : திருப்பதியில் குவிந்த பக்தர்கள்... இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருப்பு!

நாளை புரட்டாசி 4வது சனிக்கிழமை : திருப்பதியில் குவிந்த பக்தர்கள்... இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருப்பு!

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

Tirupati | நாளை புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

ஏழுமலையானுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் புண்ணியம் தரும். நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஏழுமலையானின் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம்.

குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஏழுமலையான் பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது சாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு வருகின்றனர். கடந்த மாதம் 27 -ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் தொடர் விடுமுறையால் ஏழுமலையான் கோயிலில் கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் அனைத்து அறைகளும் நிரம்பியுள்ள நிலையில், பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Also see... டி.வி விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சோகம்!

அதிலும் நாளை கடைசி சனிக்கிழமை என்பதால் இலவச தரிசனத்தில் 30 மணி நேரமும், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் 4 மணி நேரமும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  வியாழக்கிழமை 72216 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்த நிலையில், ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக  5 கோடியே 65 லட்ச ரூபாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

First published:

Tags: Tirumala Tirupati