• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இன்று கந்த சஷ்டி கவசம் ஆரம்பம்... விரதம் இருக்கும் முறைகளும் அதன் பலன்களும்...

இன்று கந்த சஷ்டி கவசம் ஆரம்பம்... விரதம் இருக்கும் முறைகளும் அதன் பலன்களும்...

முருகன்

முருகன்

சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மண மாலை சூடும் வாய்ப்பு உருவாகும். மகப்பேறு உண்டாகும் வாய்ப்பும் வந்து சேரும்.

  • Share this:
    முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாட்களில், கந்தசஷ்டி மிகவும் முக்கியமன நாள். மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதிதான் ‘கந்தசஷ்டி’ விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரையான 6 நாட்கள், கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு கந்தசஷ்டி விரதம் 9.11.2021 அன்று வருகிறது. அதற்கான விரதம்தான் இன்று முதல் ஆரம்பமாகிறது.

    இன்றிலிருந்து 6வதுநாள் முருகப்பெருமான் ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். இந்த சஷ்டி விரதம் திருச்செந்தூர் கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளான 2வது படை வீட்டில்  சிறப்பாக டைபெறும். இந்த விரதம் இருப்பவர்கள் குழந்தை வரம் வேண்டி முருகனை நினைத்து விரதமிருக்க முருகனே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம்.

     

    சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

    இந்த சஷ்டி விரதம் வீட்டில் அல்லது கோயிலில் இருக்கலாம். முடிந்த வரை முருகன் கோயிலில் இருப்பது விசேஷமானது. அதுவும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

    வீட்டில் விரதம் இருப்பது எப்படி?

    வீட்டில் விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்து முடித்து முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலையத்திற்கு சென்று வரலாம். வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம் கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம்.

    ஒரு சிலர் ஆறு நாட்கள் விரதம் இருந்து, இந்த கந்தசஷ்டியை அனுஷ்டிப்பார்கள். ஆறு நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள், கந்தசஷ்டி தினத்தன்று ஒரு நாள் மட்டுமாவது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

    மேலும் படிக்க... வைகாசி விசாகம் 2021 : இந்த நாளின் சிறப்புகள் என்ன? முருகன் கடவுளை எப்படி வழிப்பட வேண்டும்?

    பலன்கள்

    இந்த விரதம் இருப்பதன் மூலம் நம்மிடம் இருக்கும் குறைகள் நீங்கி நன்மை சேரவும், நீங்கள் அடைய நினைக்கும் அத்தனை செல்வமும் வந்து சேர உதவும். சூரபதுமனை சம்ஹாரம் செய்து, முருகப்பெருமான் வெற்றிவாகை சூடிய தினமாக கந்தசஷ்டி பார்க்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் முருகனை வழிபட்டால், நாமும் வாழ்வில் வெற்றியைப் பெறலாம்.

    மேலும் படிக்க... கிருத்திகை என்றால் என்ன? கார்த்திகை விரதத்தின் பலன்கள் என்ன?

    சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால் பிள்ளைப் பேறு கிடைக்காதவர்களுக்கு ‘அகப்பை’ எனப்படும் ‘கருப்பை’யில் பிள்ளைப் பேறு உண்டாகும். குழந்தைச் செல்வத்தை வழங்கும் மகத்தான விரதங்களில், அதிமுக்கியத்துவம் வாய்ந்தது ‘கந்தசஷ்டிவிரதம்’ ஆகும். கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வதன் மூலம் பதினாறு வகையான செல்வங்களையும் பெற முடியும்.

    விரதத்தின் போது செய்ய வேண்டியவை:

    விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது. கந்த சஷ்டி கவசம் படித்தல், திருப்புகழ் படித்தல் மற்றும் இயலாதவர்களுக்கும் முதியோர்களுக்கும் உதவி செய்திடல் உள்ளிட்டவையால் முருகனின் அருளைப் பெறலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: