Home /News /spiritual /

வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 9, 2022) வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்..!

வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 9, 2022) வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்..!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 9) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். சமரசம் செய்யும் நோக்கத்திலும், பணிவாக இருந்தாலும் பிரச்சனைகள் தீரும். வழக்கமான வேலை செய்வதன் மூலமாகவே பணம் சம்பாதிக்கலாம். மனதை திடப்படுத்தி கடன் வாங்கலாம். உங்களுடைய பெரிய பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.

ராசியான நிறம்: வானம் நீலம் ராசியான எண்: 3

பரிகாரம்: ராமர் கோவிலில் கொடியை காணிக்கையாக செலுத்தவும்.

ரிஷபம்:

வணிகத்தில் பங்குதாரர் அல்லது கூட்டாளியுடன் ஏதாவது பிரச்சனை ஏற்படலாம். தொழில் சம்பந்தமான பயணங்கள் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் தராது. இன்றைய நாள் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். புதிய அலுவலகத்தில் சேர்வதற்கு, புதிய திட்டங்கள் தொடங்க, அல்லது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

ராசியான நிறம்: மஞ்சள், ராசியான எண்: 1

பரிகாரம்: அனுமன் கோவிலில் நெய் தீபம் ஏற்றவும்.

மிதுனம்:

நீங்கள் நேசிப்பவர்களுடன் உங்கள் உறவும் பிணைப்பும் அதிகரிக்கும். தேவையில்லாத விஷயங்களில் உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம், அவ்வாறு செய்தால் பணம் இழப்பதோடு, புதிய வாய்ப்புகளையும் இழக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார நிலையை மேம்படும்.

ராசியான எண்.6 ராசியான நிறம்: கருப்பு

பரிகாரம்: சிவபெருமானுக்கு தண்ணீர் வழங்கி வழிபடவும்.

கடகம்:

உடல் உபாதைகள் அதிகரிக்கலாம். கடன் பற்றிய கவலை இருக்கும். அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். இந்த வகையான பிரச்சனையால் உங்கள் வேலை பாதிக்கப்படலாம். மேலும், மன உளைச்சல் அதிகரிக்கும்.

ராசியான எண்: 3 ராசியான நிறம்: இளஞ்சிவப்பு

பரிகாரம்: பைரவர் கோவிலில் தேங்காய் உடைக்கவும்.

சிம்மம்:

அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் செலவு செய்ய நேரிடும். நேரத்துக்கு தகுந்தாற்போல் வேலைகளை திட்டமிட்டு செய்ய முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் எதிர்காலத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். பழிவாங்கும் உணர்வை எப்போதும் தலை தூக்க விடாதீர்கள்.

ராசியான எண்: 1, ராசியான நிறம்: சிவப்பு

பரிகாரம்: சூரியனுக்கு தண்ணீர் வழங்கி வழங்கவும்.

கன்னி:

கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கலாம். இதனால் வீட்டில் பதற்றமான சூழல் நிலவும். வீட்டில் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். வேளைகளில் ஏற்பட்ட தடைகள் பற்றி நிறைய கவலை இருக்கும், பெரிதாக கவலைப்பட வேண்டாம். விரைவில் மாறிவிடும்.

ராசியான எண்: 7, ராசியான நிறம்: தங்கம்

பரிகாரம்: பசுக்களுக்கு பசுந்தீவனம் கொடுங்கள்.

துலாம்:

அதிர்ஷ்டம் நல்ல வாய்ப்புகளைக் கொடுக்கும்; உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு நேரத்தை வீணாக்காதீர்கள். சில காரணங்களால் வாக்குவாதங்கள் அதிகரிக்கலாம். பணத்தை செலவழிக்கும் முன் பல முறை யோசிக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

ராசியான எண்: 9 ராசியான நிறம்: ஊதா

பரிகாரம்: சாப்பிடக்கூடிய மஞ்சள் நிறப் பொருளை தானம் செய்யுங்கள்.

விருச்சிகம்:

உடல் நலப் பிரச்சனையால் வேலை பாதிக்கப்படலாம். பெரியவர்களின் வார்த்தைகள் உங்களுக்கு பிடிக்காமல் போகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. திடீர் பண வரவு உண்டு.

ராசியான எண்: 7, ராசியான நிறம்: வான் நீலம்

பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலில் புல்லாங்குழல் அர்ச்சனை செய்யுங்கள்.

தனுசு:

பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், ஆனால் அதற்கான பலன் எதிர்காலத்தில் கிடைக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்; நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபடலாம்.

ராசியான எண்: 5 ராசியான நிறம்: மஞ்சள்

பரிகாரம்: ஹனுமன் சாலிசாவை பாராயணம் செய்யவும்.

மகரம்:

சிறப்பாக வேலை செய்து வெற்றியடைவது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணுவீர்கள். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்வில் ஆற்றல் அதிகரிக்கும்.

ராசியான எண்: 4 ராசியான நிறம்: பாதாமி

பரிகாரம்: சிவனுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யவும்.

கும்பம்:

வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தடை செய்யப்பட்ட பணம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களைச் செய்யாதீர்கள்.

ராசியான நிறம் ஃபிரோசி, ராசியான எண். 2

பரிகாரம்: வீட்டை விட்டு செல்லும் முன்பு பெரியவர்களின் ஆசிர்வாதம் பெறவும்.

மீனம்:

அன்புக்குரியவர்களின் வார்த்தைகள் மனதில் பதியும். உடல் உபாதைகள் அதிகரிக்கலாம். கடந்த சில நாட்களாக முடங்கிய வேலைகளைப் பற்றி கவலைப்படுவது இயல்பு, பொறுமையாக இருங்கள். பண இழக்க நேரிடலாம், கவனமாக இருக்க வேண்டும்.

ராசியான எண்: 8 ராசியான நிறம்: வெள்ளை

பரிகாரம்: ஓம் நம சிவாய என்று 108 முறை ஜபிக்கவும்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி