Home /News /spiritual /

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 8, 2022) தொழில் ரீதியாக சிறப்பான நாளாக இருக்கும்..!

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 8, 2022) தொழில் ரீதியாக சிறப்பான நாளாக இருக்கும்..!

money

money

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 8) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

கல்வி தொடர்பான எல்லா வேலைகளும் சாதகமாக இருக்கும். யாருடனாவது கருத்து வேறுபாடு ஏற்படலாம். பேசும் போது கண்ணியம் இருப்பது அவசியம். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பணம் ஈட்ட விசேஷ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ராசியான எண்: 1, ராசியான நிறம்: சிவப்பு

பரிகாரம் – ஆஞ்சநேயருக்கு ஆரத்தி எடுக்கவும்.

ரிஷபம்:

வேலையில் முழு ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். அலுவலகத்தில் வெற்றி கிடைக்கும். நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். முக்கிய முடிவு எடுப்பதென்றால், தாமதம் செய்யாதீர்கள். இல்லையென்றால், நீங்கள் பெரிய லாபத்தை இழப்பீர்கள்.

ராசியான எண்: 10 ராசியான நிறம்: மெரூன்

பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

மிதுனம்:

இன்று தொழில் ரீதியாக சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் காத்திருக்கும் சிறப்பு ஒப்பந்தம் நிறைவடையும். இது பணம் ஈட்ட நல்ல வாய்ப்பைத் தரும். காதலனுக்கும் காதலிக்கும் இடையே உணர்வுப்பூர்வமான பிணைப்பு மேலும் வலுப்படும். உங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

ராசியான எண்: 5 ராசியான நிறம்: கிரீம்

பரிகாரம் - பசுவிற்கு புல் அல்லது கீரையை கொடுக்கவும்.

கடகம்:

எதிர்காலத்துக்கு பயனளிக்கக் கூடிய புதிய திட்டங்களில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். சட்ட ரீதியான பிரச்சனைகளில் நீங்கள் வெற்றி பெறலாம். திருமண உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும்.

ராசியான எண்: 8 ராசியான நிறம்: ஊதா

பரிகாரம்: துர்க்கை கோயிலில் நெய் தீபம் ஏற்றவும்.

சிம்மம்:

இன்று குடும்பத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். உங்கள் பெற்றோருடன் சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். காதலிப்பவர்களுக்கு இன்று சாதகமான நாள். சம்பளம் வாங்கும் ஊழியர்கள் கடின உழைப்பால் மேலதிகாரிகளை திருப்திப்படுத்துவீர்கள்.

ராசியான எண்: 8 ராசியான நிறம்: பச்சை

பரிகாரம்: ஒரு ஏழைக்கு வெள்ளை நிறப் பொருட்களை தானம் செய்யுங்கள்.

கன்னி:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக பெரியவர்கள் உங்கள் மீது வைத்துள்ள அன்பு என்றும் நிலைத்திருக்கும். குழந்தைகளும் உங்களுடன் இருக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பார்கள். இன்று புதிய தொழில் தொடங்குவது பற்றி யோசிப்பீர்கள்.

ராசியான நிறம்: வெள்ளை, ராசியான எண்: 3

பரிகாரம்: பறவைக்கு தானியம் கொடுங்கள்.

துலாம்:

புதிய வேலைகள் மற்றும் வணிக ஒப்பந்தங்கள் பற்றி முடிவு செய்யலாம். இன்று பிரச்சனைகளை எளிதாக சமாளிக்க முடியும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உங்கள் வேலையை புத்திசாலித்தனமாக தொடங்கினால், விரைவில் முடிக்க முடியும். அன்றாடப் வேலைகளை முடிப்பதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

ராசியான நிறம்: நீலம் ராசியான எண்: 8

பரிகாரம்: கருப்பு நாய்க்கு இனிப்பு கொடுங்கள்.

விருச்சிகம்:

தற்போதைய திட்டங்கள் மற்றும் பணிகளில் தடைகள் ஏற்படலாம். வாக்குவாதம் அல்லது சண்டைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். முதலீடு செய்ய வேண்டும் என்று திட்டங்கள் இருந்தால், அதைத் தள்ளிப் போடுவது நல்லது. சொத்து சார்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பு அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படிக்கவும். இல்லையெனில், நஷ்டம் ஏற்படலாம்.

ராசியான நிறம்: சாம்பல், ராசியான எண்: 8

பரிகாரம்: உடல் ஊனமுற்ற நபருக்கு சேவை செய்யுங்கள்.

தனுசு:

இன்றைய நாள் நன்மையும் தீமையும் கலந்த நாளாக இருக்கும். எந்த ஒரு பெரிய வேலையையும் தொடங்கும் முன்பும், கண்டிப்பாக அந்தத் துறை சார்ந்தவர்களின் ஆலோசனையை கேட்க வேண்டும். இன்று வியாபாரத்தில் லாபம் குறையும். ஆனால், மொத்த வியாபாரம் செய்பவர்களின் பணி சீராக இருக்கும்.

ராசியான நிறம்: வெளிர் பச்சை ராசியான எண்: 3

பரிகாரம்- அரிசி மாவில் சர்க்கரை சேர்த்து எறும்புக்கு கொடுக்கவும்.

மகரம்:

வியாபாரத்தில் ஒரு சில புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான வேலைகளை இன்று தொடங்கலாம். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியைத் தரும். காதலிப்பவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இன்று நினைத்த காரியம் நிறைவேறும்.

ராசியான நிறம்: நீலம் ராசியான எண்: 2

பரிகாரம்: மாலையில் அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்.

கும்பம்:

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். தன்னம்பிக்கையின் அளவும் கணிசமாக அதிகரிக்கும். தொழில் துறையில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.

ராசியான நிறம்: வெள்ளை ராசியான எண்: 10

பரிகாரம்: சிவப்பு நிறப் பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்.

மீனம்:

இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் பேச்சை மட்டும் கட்டுப்படுத்தினால் போதும். நீங்கள் ஒரே ஒரு தவறான வார்த்தை கூறினால் கூட, அது உங்களை சிக்கலில் மாட்டிவிடும். வீட்டுக்கு வருகை தரும் உறவினர்களுடன் முரண்பாடாக நடந்து கொள்ள வேண்டாம்.

ராசியான நிறம்: தங்கம் ராசியான எண்: 10

பரிகாரம் - சரஸ்வதி தேவிக்கு வெள்ளை நிறப்பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி