Home /News /spiritual /

புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 7, 2022) பண வரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது..!

புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 7, 2022) பண வரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது..!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 7) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

வெற்றியைத் தரும் நாள். இன்றைய நாள் புதிய நம்பிக்கையுடன் தொடங்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் வேலையை அதிகரிக்கலாம். வியாபாரத்தில் ஏதாவது மாற்றங்களை செய்ய வேண்டி இருந்தால், பெரியவர்கள் அல்லது சீனியர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கவும், இல்லையெல் தேவையில்லாத நஷ்டத்தை சந்திக்கக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
பரிகாரம்: சிவ சாலிசா பாராயணம் செய்யவும்.

ரிஷபம்:

புதிய வேலைகளை தொடங்குவதற்கான மன உறுதி கிடைக்கும். மன அமைதி குலையாமல் இருக்க, நிதி சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் நடக்கவும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட , வழக்கத்தில் மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்கவும்.

அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
பரிகாரம்: சரஸ்வதி தேவியை வழிபடவும்.

மிதுனம்:

சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்படாமல், இன்று பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் வியாபாரம் செய்பவர்கள், வணிகத்தை அதிகரிக்க புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். நல்ல பலன் கிடைக்கக்கூடும் என்பதால், பாதியில் நின்று போன வேலைகளை மீண்டும் தொடங்க சரியான தருணம் இது.

அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
பரிகாரம்: வெள்ளை பொருட்களை தானம் செய்யுங்கள்.

கடகம்:

ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு சாதக, பாதகங்களை நன்றாக அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். கணவன் - மனைவிக்குள் உறவு சுமூகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
பரிகாரம்- சிவப்பு நிற பழங்களை ஏழைக்கு தானம் செய்யுங்கள்.

சிம்மம்:

பணம் சம்பாதிக்க முயற்சிகள் எடுக்க வேண்டி வரும். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். கல்வித் துறையில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கை துணையிடம் இருந்து ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு
பரிகாரம் - ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள்.

கன்னி:

குடும்ப சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். யாரிடம் பேசினாலும், வார்த்தையில் ஈகோ காட்டுவதை தவிர்க்கவும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு, அதன் மூல பொருளாதார ரீதியான பலனும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் - காவி
பரிகாரம் - சிவபெருமானை நீர் வைத்து வழிபடுங்கள்.

துலாம்:

தடையான காரியங்கள் நல்லபடியாக நிறைவடையும். குறுக்கு வழியை விட்டு, பணம் சம்பாதிக்க கடின உழைப்பை தேர்வு செய்யவும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். குடும்ப வாழ்க்கையில் சண்டை, சச்சரவுகள் தோன்றலாம்.

அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
பரிகாரம் - அனுமனுக்கு ஆரத்தி எடுத்து வழிபடவும்.

விருச்சிகம்:

திடீரென செலவுகள் அதிகரிப்பதால் நிதி நிலைமை மோசமடையலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உடல்நலனில் அக்கறை காட்ட ஆரம்பிப்பீர்கள். காதல் வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சியைக் காணலாம்.

அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்- சிவப்பு
பரிகாரம் - ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.

தனுசு:

நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக் கவலைகள் நீங்கும். முழு ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். சொத்து சம்பந்தமான விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்படுவது லாபம் தரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: பாதாமி
பரிகாரம் - பசுவிற்கு கோதுமை ரொட்டியை சாப்பிடத் தரவும்.

மகரம்:

சுபகாரியங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும், இதன் காரணமாக கடன் வாங்க வேண்டி வரும். முடிக்கப்படாத வேலைகள் முடிவடையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பணியிடத்தில் உயரதிகாரிகளால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். காதலில் இருப்பவர்கள் துணை மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
பரிகாரம் - ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள்.

கும்பம்:

இன்றைய தினம் பண வரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. துறை சார்ந்து எடுக்கும் புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது மன அமைதியை தரும். பணியிடத்தில் கோபத்தைக் காட்டுவது நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
பரிகாரம்- சிவப்பு நிற பழங்களை ஏழைக்கு தானம் செய்யுங்கள்.

மீனம்:

உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. மதப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நிலை சீராக இருக்கும். காதலர் தொடர்பாக மனதில் சில சந்தேகங்கள் எழலாம்.

அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி