Home /News /spiritual /

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 6, 2022) பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்..!

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 6, 2022) பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்..!

money

money

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 6) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

இன்று உங்கள் நம்பிக்கை உச்சத்தில் இருக்கும். குடும்பத்தினர் எப்போதும் ஆதரவு தருவார்கள். எல்லா தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

ராசியான எண்: 9 ராசியான நிறம்: கருப்பு

பரிகாரம்: உடல் ஊனமுற்ற நபருக்கு உதவி செய்யுங்கள்.

ரிஷபம்:

புதிய வழியில் பார்க்கும் போது, தெளிவும் புரிதலும் அதிகரிக்கும். வாழ்க்கை முறை மேம்படும், அதே நேரத்தில் செலவும் அதிகரிக்கும். வேலையில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். அன்பானவர்களுடன் மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

ராசியான எண்: 8 ராசியான நிறம்: நீலம்

பரிகாரம்: அரிசி மாவில் சர்க்கரை சேர்த்து எறும்புக்கு கொடுக்கவும்.

மிதுனம்:

யாராவது உங்களைத் தூண்டலாம், எச்சரிக்கையாக இருக்கவும். இல்லை என்றால் எதையேனும் இழக்க நேரிடும். உறவினர்களிடம் மரியாதை கூடும். கலாச்சாரத்தை வளர்க்கும், ஊக்குவிக்கும் பாரம்பரிய வேலைகளில் ஈடுபடுவீர்கள். அன்புக்குரியவர்களின் ஆலோசனை கிடைக்கும்.

ராசியான எண்: 6 ராசியான நிறம்: இளஞ்சிவப்பு

பரிகாரம்: மீன்களுக்கு உணவளிக்கவும்.

கடகம்:

இன்று சிறந்த நாள். மரியாதைக்குரிய ஒரு நபரின் வழிகாட்டுதல், உங்கள் பாதையை சுலபமாக்கும். லாபம் ஈட்ட புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சின்ன சின்ன பிரச்சனைகளில் இருந்து விலகி இருங்கள், இல்லையெனில் ஏதாவது குற்றச்சாட்டில் சிக்கிக் கொள்ளலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ராசியான எண்: 4 ராசியான நிறம்: பச்சை

பரிகாரம்: பெற்றோரின் ஆசியைப் பெறுங்கள்.

சிம்மம்:

வீட்டில் அன்பும் புரிதலும் மேம்படும் . நீங்கள் பணியாற்றும் திட்டம் மற்றும் ஆய்வில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உங்கள் பொறுப்பை சரியான நேரத்தில் பூர்த்தி செய்வீர்கள்.

ராசியான எண்: 2 ராசியான நிறம்: நீலம்

பரிகாரம்: பசுவிற்கு பசுந்தீவனம் கொடுங்கள்.

கன்னி:

இந்த நாள் சாதகமாக இருக்கும். நீண்ட காலம் முடிக்காமல், நிலுவையில் இருந்த வேலைகள் இன்று சுலபமாக முடிவடையும். பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஆதரவால் குடும்ப உறவுகள் வலுவடையும். வருமானத்தில் குறைவு இருக்காது, பண வரவும் அதிகரிக்கும். வெற்றியை துரத்த வேண்டாம், நிதானமாக உங்கள் இலக்கை அடைய முயற்சி செய்யுங்கள்.

ராசியான எண்: 8 ராசியான நிறம்: பழுப்பு

பரிகாரம்: லட்சுமி தேவியை வழிபடவும்.

துலாம்:

இந்த நாள் அற்புதமானது. குடும்பத்தினரால் உங்கள் கௌரவம் உயர்ந்து மரியாதை அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வழிகளையும் வாய்ப்புகளையும் கண்டுபிடிப்பது அவசியம். ரியல் எஸ்டேட் வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டும் நாள். செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

ராசியான எண்: 3 ராசியான நிறம்: வெளிர் மஞ்சள்

பரிகாரம்: ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.

விருச்சிகம்:

அலுவலகம் செல்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பிறருக்குக் கொடுத்த பணம் திரும்பக்கிடைக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். பெரிய நிகழ்ச்சியில் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

ராசியான எண்: 0 ராசியான நிறம்: வானம் நீலம்

பரிகாரம்: குருக்கள் அல்லது மூத்தவர்களின் ஆசியைப் பெறுங்கள்.

தனுசு:

இன்று உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி விவகாரங்கள் சாதகமாகத் தீர்க்கப்பட்டு உங்கள் வருமானமும் கூடும்.

ராசியான எண்: 5 ராசியான நிறம் ஆரஞ்சு

பரிகாரம்: விநாயகருக்கு லட்டு படைக்கவும்.

மகரம்:

எந்தவிதமான அரசியலிலும் ஈடுபடாமல், உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சியில் ஆர்வமும் விருப்பமும் அதிகரிக்கும். யார் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டாம், பணம் இழக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

ராசியான எண்: 9 ராசியான நிறம்: தங்கம்

பரிகாரம்: சிவ சாலிசா பாராயணம் செய்யவும்.

கும்பம்:

உங்களின் தாராள மனப்பான்மை அனைவரையும் ஈர்க்கும். விரைவாகப் பணம் சம்பாதிக்க தவறான முதலீடுகளை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

ராசியான எண்: 7, ராசியான நிறம்: கருப்பு

பரிகாரம்: வெள்ளை நிறப் பொருளை தானம் செய்யுங்கள்.

மீனம்:

உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்க சில நல்ல வாய்ப்புகளையும் நீங்கள் பெறலாம். குடும்பத்தில் உங்கள் நேர்மறையான நடத்தை மக்களை ஈர்க்கும்.

ராசியான எண்: 6 ராசியான நிறம்: வயலட்

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டை படைக்கவும்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி