ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 30, 2022) வேலைக்கான அங்கீகாரம் வெகு விரைவில் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 30, 2022) வேலைக்கான அங்கீகாரம் வெகு விரைவில் கிடைக்கும்.!

Deiviga Vakku

Deiviga Vakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைய நாள் சிக்கல் நிறைந்ததாக தெரிகிறது. பல விஷயங்கள் உங்கள் மனதை குழப்பிக் கொண்டிருக்கும். எல்லாவற்றுக்கும் ஒரே சமயத்தில் தீர்வு காண வேண்டும் என எண்ணுகிறீர்கள். இருப்பினும் கொஞ்சம் அமைதியும், வழிகாட்டுதலும் உங்களுக்கு தேவை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அமைதியான இசை

ரிஷபம்:

உங்கள் கவனத்திற்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன. அவற்றை மனதில் ஏற்றிக் கொள்ளும் முன்பாக அதில் மறைந்துள்ள உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். கடந்த சில நாட்களாக மிக அதிகம் செலவு செய்துள்ள நிலையில், செலவு முறைகளை பரிசீலனை செய்யவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளிச்சங்கிலி

மிதுனம்:

ஒவ்வொரு இடமாக சிதறிக் கிடந்த விஷயங்கள் ஒன்றுகூடி வருவதை நீங்கள் உணரக் கூடும். அவற்றை உணர்ந்து கொள்ள உங்களுக்கு தெளிவான சிந்தனை தேவை. உங்கள் கண்ணோட்டத்தை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் உயர்ந்த இடத்திற்கு செல்லலாம். வாய்ப்பு உங்களைத் தேடி வருகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புத்தக கவர்

கடகம்:

ஒரு பயணம் செய்வதன் மூலமாக, நீங்கள் நீண்ட காலம் எதிர்பார்த்த புத்துணர்ச்சி உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை கொஞ்சம் சிக்கலுக்குரியதாக உள்ளது. புத்துணர்ச்சி அடையும் அதே வேளையில், வாழ்க்கையில் அடுத்த அத்தியாத்திற்கான பணிகளை தொடங்கி விடவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஸ் நிற படிகக்கல்

சிம்மம்:

இலக்குகள் உங்கள் உணர்வுகளை மிஞ்சியதாக இருக்கும். நீங்கள் மிகுந்த உணர்வோடு செய்யும் ஒரு விஷயத்தில், அதில் இருந்து விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் வேலைக்கான அங்கீகாரம் வெகு விரைவில் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீலமணிக்கல்

கன்னி:

உங்கள் சிந்தனைகளைக் காட்டிலும், கருத்துக்கள் வலுவானதாக இருக்கலாம். உங்கள் பேச்சு மற்றும் தோரணை ஆகியவற்றில் கவனமாக இருக்கவும். எதையும் மிகச் சரியாக செய்து முடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பதால் மற்றவர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தனி செயல்பாடு

துலாம்:

ஏதோ ஒரு விஷயத்தை நீங்கள் முக்கியமாக அணுகிக் கொண்டிருக்கும் சமயத்தில், மற்ற எண்ணங்கள் உங்களை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் நாட்களில் நிதி நிலைமை மேம்பாடு அடைய இருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் உணர்வுப்பூர்வமாக உங்களை சார்ந்துள்ளனர்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பெரிய ஜன்னல்

விருச்சிகம்:

நீங்கள் கொஞ்சம் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது உங்களுக்கு பலனை தராது. உங்கள் எண்ணங்களை ஒருங்கிணைத்து திடமான திட்டத்தை செயல்படுத்தவும். புதிய யோசனைகளை நம்பிக்கைக்கு உரிய நபர்களுடன் ஆலோசித்து, அதன்படி முன்னெடுத்துச் செல்லவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டென்னிஸ் வலை

தனுசு:

பழைய உணவுப் பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்து வருகிறீர்கள். வாழ்வியல் பழக்கங்களையும் மாற்ற நினைக்கிறீர்கள். ஆனால், அதில் உங்களால் வெற்றி பெற இயலவில்லை. இப்போது உங்கள் பழக்க, வழக்கங்கள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவைகள் குழு

மகரம்:

புதிய பாதை ஒன்றை நீங்கள் எதிர்பார்க்கும் பட்சத்தில் கையில் உள்ள வாய்ப்பை தவற விடுவீர்கள். இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தாலாமா, வேண்டாமா என்று நம்பிக்கையின்றி நீங்கள் இருக்கும் பட்சத்தில் உண்மையாகவே அது உங்கள் கையை விட்டு போய்விடும். ஆகவே, உறுதியோடு செயல்படவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழமையான கடிகாரம்

கும்பம்:

நீங்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர் மற்றும் இப்போது ஒரு திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்கிறீர்கள் என்றால், அதில் முன்னேற்றம் காணப்படும். உங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். ஆனாலும் அதை நீங்கள் சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மணி

மீனம்:

சில விஷயங்கள் குறித்து பேச வேண்டாம் என்று நீங்களும், உங்கள் பார்ட்னரும் கூட்டாக முடிவு செய்துள்ளீர்கள். ஆனால், அவற்றை பேசித் தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் அது வலி மிகுந்ததாக மாறிவிடும். எதையும் ஒத்திவைப்பதைக் காட்டிலும் அதற்கு தீர்வு காண முற்படவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விலை மதிப்புள்ள முத்து

First published:

Tags: Oracle Speaks