ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 29, 2022) திடீர் பண வரவால் நிதி சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 29, 2022) திடீர் பண வரவால் நிதி சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.!

Deiviga Vakku

Deiviga Vakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்று நீங்கள் எடுக்கப்போகும் சில ப்ராக்டிகலான முடிவுகள் சிறப்பாக அமையும். பிரச்சனைகளை தீர்ப்பதில் இன்று நண்பர் ஒருவர் முக்கிய பங்காற்றலாம். தேவையில்லாமல் காலத்தை வீணடிக்க வேண்டாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கிளி

ரிஷபம்:

ஒவ்வொரு பிரச்சனையுடனும் உணர்வுபூர்வமாக தொடர்பு கொள்ளாமல் இருந்தால் சேதம் குறைவாக இருக்கும். பழைய பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகளை உருவாக்க முயற்சிக்கவும். ஆக்கபூர்வமான கருத்து உங்கள் அணுகுமுறையை மறுகட்டமைக்க உதவும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புதிய சைன்போர்டு

மிதுனம்:

நீங்கள் ஏதேனும் பிரச்சனையில் சிக்கி இருந்தால், இப்போது ஒரு சாத்தியமான தீர்வு கிடைக்கலாம். ஒரு புதிய நபர் ஒரு முற்போக்கான யோசனையுடன் களமிறங்கலாம், அதைக் கவனியுங்கள். குடும்ப விவகாரம் மற்ற திட்டங்களைத் தள்ளிப்போட தூண்டும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தண்டு

கடகம்:

நாள் தொடக்கத்தில் ஒரு நல்ல செய்தி நேர்மறை மற்றும் நம்பிக்கையை கொண்டு வரும். அற்ப விஷயங்களுக்கு நேரத்தை செலவிடாமல், முக்கியமானவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து வேலைகளை திட்டமிடுங்கள். உடன்பிறந்தவர் தற்காலிகமாக சில சிரமங்களை எதிர்கொள்ளவும், உங்களிடம் உதவி கோரவும் வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பளபளப்பான சைன்

சிம்மம்:

அண்டை வீட்டைச் சேர்ந்த ஒருவர் உங்கள் குடும்ப விஷயங்களில் அளவுக்கு அதிகமாக மூக்கை நுழைக்கலாம் என்பதால், அவரை தவிர்ப்பது நல்லது. சிறிய அளவிலான திருட்டு நடக்க வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். அரைமனதுடன் முயற்சி செய்தால் வாய்ப்புக்கள் கைகூட வாய்ப்பில்லை.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ப்ரிஸம்

கன்னி:

நிதனமாக சிந்திக்க ஏற்ற நாள், எனவே விஷயங்களின் பின்னணிகளை கவனிக்கவும், மெதுவாக அலசி ஆராயவும் நேரம் கிடைக்கும். தொலைபேசி உரையாடல் ஒரு புதிய மற்றும் சுவாரஸ்யமான புதிய முன்னோக்கை கொண்டு வரலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஆப்பிள்

துலாம்:

இலக்கு மிக தொலைவில் இருப்பதாக நினைப்பது உங்கள் முயற்சியை தடுக்கலாம். உறவுகளுக்குள் இருந்த விரிசல் சரி செய்யப்படும் போது பிரச்சனைக்கு பின்னால் மறைந்திருந்த உண்மை தெரிய வரும். இன்று பரபரப்பான நாள் மற்றும் திட்டமிடப்பட்ட பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்படும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நீல கல்

விருச்சிகம்:

நம்பிக்கை குறைந்து வருவது புதிய விஷயங்களை முயற்சி செய்வதில் இருந்து உங்களை தடுக்கலாம். எனவே உற்சாகத்தை அதிகரிக்க வேண்டிய நேரமிது. ஆன்மிகச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். திறன்களை மேம்படுத்த தேவையான மாற்றங்களை மேற்கொள்வது சிறப்பானதாக இருக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - உன்னதமான நாவல்

தனுசு:

அனைவரையும் போல் ஒரே மாதிரி யோசிக்காமல், அவுட் ஆப் தி பாக்ஸ் சிந்தனை மூலமாக உங்களுக்கு புது உத்வேகம் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர் ஒருவர் பாசாங்கு செய்கிறார், அதனை நீங்கள் ஊக்கப்படுத்த கூடாது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கேன்வாஸ் ஓவியம்

மகரம்:

அனுபவம் காரணமாக, முன்பை விட முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பது இப்போது சுலபமாக இருக்கலாம். சில பழைய விஷயங்களை விரைவில் சரிசெய்ய வேண்டியிருக்கும். திடீர் பண வரவு அல்லது வாராக்கடன் வசூல் ஆக வாய்ப்புள்ளது. இதனால் நிதி சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - எலும்பால் செய்யப்பட்ட சீன குவளை

கும்பம்:

மெதுவாக இருந்தாலும் சீரான, நல்ல முன்னேற்றத்தை அடைய வாய்ப்புள்ளது. புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் கடினமாக இருக்கலாம். நீங்கள் உங்களை நம்பினால், இந்த ஆரம்ப சிக்கல்களை நீங்கள் சமாளிக்கலாம். உங்கள் முயற்சியை தூரத்தில் இருந்தே பாராட்டுபவர்கள் இருக்கிறார்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - லோகோ

மீனம்:

உங்களுக்கு விரைவில் கிடைக்கூடிய ஒன்றைப் பற்றி கனவு கண்டுகொண்டிருக்கலாம். வேலை விஷயத்தில் எதிர்பாராத சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது பழைய உறவுடன் மீண்டும் இணைந்திருந்தால், சில புதிய அம்சங்கள் இப்போது வெளிப்படும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - அம்பர் கல்

First published:

Tags: Oracle Speaks