ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 29, 2022) லாபமும், பண வரவும் நிறைந்த நாள்...!

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 29, 2022) லாபமும், பண வரவும் நிறைந்த நாள்...!

Money Mantra

Money Mantra

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 29) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைய தினம் வரவு, செலவு என கலவையான பலனைத் தரக்கூடிய நாளாக இருக்கும். சில வேலைகள் தடைபடக்கூடும், ஆனால் அது உங்களை நிதி விஷயத்தில் பலப்படுத்தும். வேலை தேடும் நபர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

பரிகாரம்: ஊனமுற்ற நபருக்கு பயனுள்ள பொருளை தானம் கொடுங்கள்.

ரிஷபம்:

உத்தியோகம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் பதவி, கௌரவம் அதிகரிக்கும்.

பரிகாரம்: துர்க்கை கோவிலுக்கு சிவப்பு நிற புடவை தானம் செய்யுங்கள்

மிதுனம்:

வேலை சம்பந்தமான மிக முக்கியமான ஆவணத்தை இழக்க நேரிடும் என்பதால் கவனம் தேவை. தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பது நல்லது. ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க, முதலீடு செய்யும் முன்பு ஆலோசனை பெறுவது நல்லது.

பரிகாரம்: பைரவர் கோவிலுக்கு தேங்காய் உடைக்கவும்.

கடகம்:

வாழ்வாதாரத் துறையில் முன்னேற்றம் ஏற்படும். அரசின் கௌரவம் உயரும். அலுவலக வேலைக்காக வெளியூர் செல்ல நேரிடலாம், இந்த விஷயத்தில் நன்மை உண்டாகும். பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.

பரிகாரம்: சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் பூக்களை அர்ப்பணிக்கவும்.

சிம்மம்:

இன்று புதிய வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. பரபரப்பான நாள் மற்றும் அதிக வேலைப்பளு காரணமாக சோர்வு ஏற்படலாம். இன்று எதிரிகளின் முயற்சி பலனளிக்காது.

பரிகாரம்: சிவனை வழிபடவும்.

கன்னி:

இன்றைய தினம் அலுவலக பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள் என்பதால், மகிழ்ச்சி ஏற்படும். உத்யோகம், வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றி கிடைக்கும். சில நல்ல வேலைகளில் செலவு செய்வதால் மனம் மகிழ்ச்சியடையும்.

பரிகாரம்: ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.

துலாம்:

பணப்பரிவர்த்தனை தொடர்பாக நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்படும். தேவையான பணம் கைக்கு வந்து சேரும். எதிராளிகளின் எண்ணம் வெற்றியடையாது. தொலைதூர பயணங்களை மேற்கொள்ள ஏற்ற நாள்.

பரிகாரம்: அரச மரத்திற்கு நீர் ஊற்றவும்.

விருச்சிகம்:

இன்று லாபமும், பண வரவும் நிறைந்த நாள். பங்குச்சந்தை முதலீடுகள் லாபம் தர வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேணுவது, எதிர்காலத்தில் நல்ல பலனைக் கொடுக்கும்.

பரிகாரம்: விநாயகருக்கு துர்க்கை அர்ச்சனை செய்யவும்.

தனுசு:

இன்று பணியிடத்தில் உங்கள் எதிரிகளும் உங்களைப் புகழ்வார்கள். இன்று அரசு துறை சார்ந்த ஊழியர்கள் எந்த வேலையை செய்தாலும் வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடவும்.

மகரம்:

இன்று நீங்கள் நிதி விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். வாழ்வாதாரத் துறையில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் பலன் தரும். கீழ்நிலை ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: எறும்புகளுக்கு மாவுடன் சர்க்கரை கலந்த கலவையை வைக்கவும்.

கும்பம்:

இன்று நல்ல நாள் அல்ல. அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் வரலாம். முதலீடு என்ற பெயரில் மோசடி நடக்கலாம். கவனமாக இருங்கள். யாரையும் நம்பாதீர்கள்.

பரிகாரம்: நாய்க்கு ரொட்டி கொடுங்கள்.

மீனம்:

இன்றைய நாள் குழப்பமான நாளாக இருக்கலாம். இன்று யாருடனும் எந்த பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம், மீறினால் அவர்களுடனான உறவை கெடுக்துக்கொள்ளும் ஆபத்து உள்ளது.

பரிகாரம்: பஜ்ரங் பாண் ஓதவும் (அனுமன் பக்தி பாடல்கள்)

Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan