ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 28, 2022) பணம் சார்ந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 28, 2022) பணம் சார்ந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.!

Deiviga vakku

Deiviga vakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்களுக்கான பாதை தெளிவானதாக இருக்கிறது. நீங்கள் முன்னோக்கி செல்லலாம். கடந்த சில நாட்களாக நீங்கள் திட்டமிட்டு வரும் செயல்களை இப்போது செயல்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அழகிய ஆடை

ரிஷபம்:

இப்போது உங்கள் மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். உங்கள் கண் முன்னே உள்ள சவால் கடினம் மிகுந்ததாக உள்ளது என்றாலும், அது முடியாத ஒன்றல்ல. அதை நீங்கள் முயற்சி செய்யலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிராம்பு

மிதுனம்:

தற்போதைய சூழல்களை நீங்கள் எப்படி எதிர்கொள்ள இருக்கிறீர்கள் என்ற வரைபடத்தை நீங்கள் தயார் செய்வீர்கள். மனதில் ஒன்று இருந்தாலும், உண்மையான திட்டத்தில் கொஞ்சம் மாறுபாடு இருக்கும். உங்கள் பேச்சு பிறர் மனதை புண்படுத்தக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரூபி

கடகம்:

வெற்றிக்கு மிக கடுமையான முயற்சி தேவை என்பதை நீங்கள் கற்றுக் கொண்டு வருகிறீர்கள். ஏமாற்றம் என்னவென்றால் மிக கடுமையாக முயற்சித்தும் சிறிய அளவுதான் உங்களால் இலக்கை நோக்கி நகர முடிந்துள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்கம்

சிம்மம்:

யதார்த்தமாக இருக்கிறேன் என்ற பெயரில் சில சமயம் உங்கள் மனதில் உள்ள திமிர்த்தனம் வெளிப்படக் கூடும். பணம் சார்ந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய ஆவணங்களில் கையெழுத்திடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கைச்செயின்

கன்னி:

உங்களை மற்றவர்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதன்படியே நடக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆகவே, உங்களைப் பற்றி நீங்கள் தான் எளிமையாக எடுத்துரைக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தண்ணீர் பாட்டில்

துலாம்:

பிறருடன் நீங்கள் கொண்டிருக்கும் பந்தம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். தவறான தகவல் தொடர்பு காரணமாக கடும் பிரச்சனை ஏற்படக் கூடும். கெட்ட எண்ணம் கொண்டவர்களிடம் விலகி இருப்பது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பச்சை கல்

விருச்சிகம்:

தேவையற்ற இடையூறுகள் ஏதேனும் ஒரு வழியில் வந்தே தீரும். முடிந்தவரை அவற்றை தவிர்க்கவும். உங்களுக்கான புதிய பார்ட்னர்ஷிப் உருவாக இருக்கிறது. வேலையை விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை இப்போது செயல்படுத்தலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அணில்

தனுசு:

மனதில் உள்ளதை இன்று செயல்படுத்துவீர்கள். யாரோ சிலர் அவர்களது உணர்வுகளை உங்களிடம் வெளிப்படுத்தக் காத்துக் கொண்டிருக்கின்றனர். வரி சார்ந்த சில விஷயங்கள் எந்தவித காரணமும் இன்றி தடைபடக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புறா

மகரம்:

சில நபர்கள் குறித்து உங்களுக்கு மனக்குழப்பம் இருக்கக் கூடும். மற்றவர்களின் வார்த்தைகளில் கவிழ்ந்து விடாமல் இருக்கவும். நீங்கள் புதிதாக தொழில் தொடங்குபவர் அல்லது வணிகம் செய்பவர் என்றால் புதிய சவால்களை எதிர்கொள்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மிரேஜ்

கும்பம்:

வாழ்க்கையின் கடினமான சூழல் முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த அத்தியாயத்தை நோக்கி நகர இருக்கிறீர்கள். நிதி சார்ந்த விஷயங்களை மறு பரிசீலனை செய்யவும். எந்தவொரு விஷயமும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பனிச்சேறு

மீனம்:

நீண்ட காலமாக நீங்கள் முயற்சிக்கும் அங்கீகாரம் உங்களுக்கு இப்போது இறுதியாக கிடைக்க இருக்கிறது. இனி அது உங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது. ஆனால், சரியான நேரத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பித்தளை கிளாஸ்

First published:

Tags: Oracle Speaks