ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 27, 2022) திட்டமிட்ட வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 27, 2022) திட்டமிட்ட வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும்.!

Deiviga Vakku

Deiviga Vakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பலமும், வலிமையும் அதிகரிக்கும் நாளாக அமையும். எதையும் துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். நீங்கள் பணிபுரியும் இடங்களில் உங்களின் கடந்த கால செயல்திறன் மற்றும் சாதனைகளை மதிப்பாய்வு செய்வார்கள். எனவே கவனமுடன் இருங்கள். உங்களது வாழ்க்கையில் பணவரவு அதிகரிக்கும். தொழில் விரக்தி அடையும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரோஸ் குவார்ட்ஸ் கல் ( மன அமைதி மற்றும் மன்னிப்பின் கல்)

ரிஷபம்:

இந்த நாள் மிகவும் சிறப்பான நாளாக அமையும். வாழ்க்கையில் இலகுவான தருணங்களை நீங்கள் அனுபவிக்கலாம். உங்கள் உள்ளுணர்வு எதை சொல்கிறதோ? அதை புறக்கணிக்காதீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கையில் சில நேரங்களில் நல்லது நடக்கக்கூடும். மற்ற நாள்களைப் போல் இல்லாமல் உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குவதற்கு நேரம் கிடைக்கும் நாளாகவே அமையும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மர பெட்டி

மிதுனம்:

உங்களின் வெற்றிக்கான நாளாக இருக்கும். உங்களது வாழ்க்கையில் நீங்கள் எதை செய்ய திட்டமிருந்தாலும் வெற்றி நிச்சயம். தனியார் நிறுவன ஊழியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். திட்டமிட்ட வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமைந்து பண வரவு உங்களுக்கு கிடைக்கப் பெறும். குடும்பத்தில் இருந்து ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியம் உங்களுக்கு ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வண்ணமயமான பிரகாசமான டை ( A bride tie)

கடகம்:

இன்றைய நாளில் பணவரவு நிச்சயம். யாரோ ஒருவர் ஒத்துழைப்பை முன்மொழிந்து அல்லது இணைத்துக் கொள்ள உங்களை அணுகலாம். மனதை வாட்டிய கவலைகள் படிப்படியாக குறையலாம். தனியார் நிறுவன வேலையில் இருந்தால் பண வரவு ஏற்படும். நீங்கள் உங்களது வாழ்க்கையில் எடுக்கும் சமீபத்திய சில முடிவுகளை நீங்கள் மறு பரிசீலனை செய்யலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு நோட்.

சிம்மம்:

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உங்களால் வேறு ஒருவரும் மகிழ்ச்சியாக இருக்க நேரிடலாம். வாழ்க்கையில் எடுக்கும் முக்கிய முடிவுகளை வேண்டாம் என்றோ அல்லது சில முடிவுகளை எடுப்பதற்கான நேரத்தைத் தள்ளிப்போடலாம் கவலைப்படாதீர்கள். நிச்சயம் நல்லது நடக்கக்கூடும். வாழ்க்கையில் இழந்த பொருள் தற்செயலாக மீட்கப்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி தட்டு

கன்னி:

இன்றைய நாள் சிக்கலான நாளாகவே அமையும். கோபத்தைக் கட்டுக்குள் வைக்காவிடில் தேவையற்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்களுக்குத் தெரியாமல் ஏதாவது ஒரு முடிவை எடுப்பதாக இருந்தால் கவனமுடன் இருக்க வேண்டும். தற்போதைய பணியை விரிவுபடுத்தும் வகையில் புதிய வாய்ப்பு உங்களைத் தேடி வரக்கூடும். பணியில் புதிய ஆர்வம் வெளிப்பட ஆரம்பிக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெண்கலம்

துலாம்:

இன்றைக்கு எதிர்பாராத சந்தோஷத்தை தரக்கூடிய நாளாக அமையும். எதிர்ப்பார்த்ததை விட முன்னதாக அந்த கொண்டாட்டங்கள் அமையக்கூடும். குடும்பத்தில் உள்ள யாரும் வருத்தப்படாத வகையில் தெளிவாக பேசுவது நல்லது. அவசரப்பட்டு எந்தவொரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். இதனால் பின்விளைவுகள் ஏற்படக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷட அடையாளம் - ஒரு புதிய மெத்தை

விருச்சிகம்:

இன்றைய நாளில் கவனமுடன் இருக்க வேண்டும். உங்களின் நெருங்கிய நண்பருக்கு ஏற்படும் பிரச்சனைக்கு உங்களின் உதவி தேவைப்படலாம். உங்களின் ஆற்றல் குறைவாக இருப்பது போன்று உணரலாம் ஆனால் நிரந்தரமாக இருக்காது தற்காலிகமானது தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சர்க்கரை பாகு.

தனுசு:

குடும்பத்தில் சுப காரியங்களுக்கானச் செலவுகள் அதிகரிக்கும். ஏதாவது ஒரு காரணங்களுக்காக உணர்ச்சி வசப்பட நேரிடும். கொஞ்சம் நிதானம் தேவை. விரைவில் உங்களது பணியிடத்தில் தீடீர் முன்னேற்றம் ஏற்படும். உண்மையில் உங்களுடன் இருப்பவர்களில் யார் நல்லவர்கள் என்பதை நீங்கள் கவனித்து செயல்பட வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட் அடையாளம் – ஒரு சோலார் பேனல்.

மகரம்:

இன்றைய நாளில் சாதகமான அறிகுறிகளைப் பெறலாம். நீங்கள் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதும் சில நபர்கள் நம்பிக்கைக்குத் தகுதியற்றவர்களாக இருக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரிடமிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு மன உளைச்சலை உங்களுக்கு ஏற்படுத்தலாம். புதிய வியாபாரத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், நீங்கள் சாதகமான அறிகுறிகளைப் பெறலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிடித்த ஃபேஷன் லேபிள்

கும்பம்:

உங்களது வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பணியில் இருக்கும் உங்களின் சீனியர்கள் உங்களின் செயல்திறனைப் பாராட்டுவார்கள். பணியில் கூடுதல் பொறுப்பு உங்களுக்கு ஏற்படும் என்பதால் தெளிவாக எந்த வேலையும் செய்யவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு வண்ண கண்ணாடி

மீனம்:

நீங்கள் ஒரு பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான திறமையை நீங்கள் முன்னெடுத்துத் திட்டமிட வேண்டிய நாளாக அமையும். உங்கள் கனவு விரைவில் நிறைவேறக்கூடும். எனவே இன்றைய நாளில் உங்களது அன்புக்குரியவர்களிடம் ஆலோசனை கேட்பது நிச்சயம் சிறப்பாக அமையும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீல படிகம்

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks