ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு நீண்ட காலம் கிடைக்காமல் இருந்த பணம் இன்று (செப்டம்பர் 26, 2022) கிடைக்கும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு நீண்ட காலம் கிடைக்காமல் இருந்த பணம் இன்று (செப்டம்பர் 26, 2022) கிடைக்கும்..!

Deiviga Vakku

Deiviga Vakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

ஏதாவது ஒரு காரியத்தை மீண்டும் தொடங்க நினைத்தால், அது சிறந்த திட்டப்பணியாகவும், முயற்சியாகவும் இருப்பதோடு இன்றைய தினத்தின் ஆதரவையும் பெற்றிருக்கும். ஆனால் செயலை ஆரம்பிக்கும் முன்பு அதற்கான முன் திட்டமிடலை நன்றாக தயார் செய்து கொள்ள வேண்டும். பிறர் நினைப்பதை விட உங்களுடைய திறமை அதிகமானது என்பதை உறுதியாக நம்புங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கண்ணாடி படம்

ரிஷபம்:

இன்று வழக்கமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது உதவியாக இருக்கும். அடிப்படையான விஷயங்களை தீவிரமாக பயிற்சி செய்வது நல்ல முன்னேற்றமும், மனத்தெளிவும் கொடுக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வெள்ளி மெழுகுவர்த்தி

மிதுனம்:

தொழிலில் பார்ட்னர்ஷிப் அமைக்க சரியான நேரம், ஆனால் சாதக பாதகங்கள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். முக்கிய திட்டங்கள் மற்றும் அனைத்து விஷயங்களையும் பொது வெளியில் பலர் முன்னிலையில் பேசுவதை தவிர்க்கவும். ஏனெனில் இதனால் சிக்கல்கள் வரக்கூடும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ரத்தினம்

கடகம்:

நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு வேறொருவரைச் சார்ந்து இருக்கிறீர்கள், இது பரிந்துரைக்கப்படவில்லை. எனவே சுதந்திரமாக செயல்பட வேண்டியது அவசியம். உங்களிடம் புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்காட்ட வேண்டிய நாள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மஞ்சள் கல்

சிம்மம்:

நீண்ட காலத்திற்கு பிறகு சந்திக்கப்போகும் உறவினர் அல்லது நண்பரிடம் இருந்து அளவு கடந்த அன்பையும், வரவேற்பையும் பெறுவீர்கள். ஆடம்பர பொருட்கள் மீது ஆசை வரலாம். சிம்ம ராசிக்காரர்களில் சிலருக்கு வெளிநாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மெழுகுவர்த்தி

கன்னி:

உங்களை விட்டு விலகிச் சென்ற நபரை மறக்க முடியாமல் உணர்வு ரீதியாக காயப்படலாம். பணத்தை கையாள்வது தொடர்பான முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் பயனுள்ள தொடர்பை வேறொருவருக்கு வழங்காமல் இருக்க முயற்சிக்கவும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புத்தர் சிலை

துலாம்:

அலுவலகத்தில் அதிகரித்து வரும் உங்கள் ஆளுமை மற்றும் தலைமை பண்பிற்கு ஏற்ற வெகுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் புத்திசாலி என்பதை நிரூபிப்பது மதிப்பை அதிகரிக்கும். வீட்டிலிருந்து வரும் ஒரு நல்ல செய்தி உங்களை உற்சாகப்படுத்தும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - இன்டோர் பிளான்ட்

விருச்சிகம்:

உங்கள் வொர்க்கிங் ஸ்டைலை எதிர்த்தவர்களே, உங்களை பாராட்டும் அளவிற்கு வேலையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். நாம் சொல்வதை பிறர் எப்படி புரிந்து கொள்வார்கள் என்பதை புறந்தள்ளிவிட்டு, புரியும் படி சொல்வது எப்படி என முயற்சி செய்யுங்கள். பணவரவு உண்டு.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சேம்பர்

தனுசு:

இவ்வளவு குறைந்த நேரத்தில் உங்கள் மனத்திறன் மற்றும் சுறுசுறுப்பால் நீங்கள் உருவாக்கிய தாக்கம், கைதட்டலுக்கு உரியது. நீங்கள் ஒரு புதிய வணிக யோசனையை நினைத்திருந்தால் விரைவில் அது கைக்கூடக்கூடும். வீட்டில் பிரச்சனைகள் உருவாகலம், அமைதி சீர்குலைய வாய்ப்புண்டு.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மலையேறுபவர்

மகரம்:

இன்று எந்த ஒரு சவாலையும் கையாள்வதில் உற்சாகமான நபராக இன்று வலம் வருவீர்கள். நீங்கள் மிகவும் நெருக்கமாக நம்பும் ஒருவர் ரகசியங்களை வெளியே கசிய விடலாம் என்பதால், அவரை சந்திப்பதை தவிர்க்க வேண்டும். விரைவில் ஒரு ரோடு டிரிப் செல்ல வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பட்டாம்பூச்சி

கும்பம்:

இன்று, உங்கள் வேலையை முடிக்க விரிவான திட்டங்களை நீங்கள் செய்வீர்கள், ஆனால் அது மேலும் தள்ளிப் போகலாம். எனவே சரியான நேரத்திற்கு காத்திருக்கவும். குடும்பம் அல்லது மனைவியிடமிருந்து வரும் எந்த ஆலோசனையும் இப்போது உங்களுக்கு பொருத்தமானதாக இருக்காது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கேன்வாஸ்

மீனம்:

உங்களுக்காக காத்திருப்பவர்களுக்குப் பதிலளிப்பது கடினமாக இருக்கலாம். உங்கள் கடந்தகால செயல்கள் குறித்து தற்போது உங்களுக்கு நிறைய குற்ற உணர்வு உள்ளது. அதையே உங்கள் பார்ட்னரும் நினைவுப்படுத்தி காயப்படுத்தலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - இரண்டு இறகுகள்

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks