ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (செப்டம்பர் 24, 2022) இந்த முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (செப்டம்பர் 24, 2022) இந்த முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு உங்களுடைய ஆதரவு தேவைப்படுகிறது. சில கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், இறுதியாக நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரத்தில் உள்ளவர்களை அணுகும்போது ஏமாற்றம் உண்டாகலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மணி பிளாண்ட்

ரிஷபம்:

இன்றைய நாள் மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும். ஒருவேளை நிகழ்ச்சிகளில் உங்களால் கலந்து கொள்ள முடியாமல் போனால், அது சலிப்பை உண்டாக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு அலங்காரம்

மிதுனம்:

பண வரவு அதிகரிப்பதன் காரணமாக நம்பிக்கை உயரும். ஏதோ ஒரு பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாக இருப்பின், அதில் இருந்து விடுபடுவதை உணர முடியும். இல்லத்தரசிகள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பொம்மை

கடகம்:

குழம்பிய மனநிலை காரணமாக தெளிவான முடிவுகளை யோசிக்க முடியாமல் திணறக் கூடும். உங்கள் ஆழ்மனதில் இருப்பதைக் கண்டறிய இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை. துணி உற்பத்தி தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிக்னல்

சிம்மம்:

அடுத்து என்ன பின்பற்ற வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு ஒரு யோசனை இருக்கலாம். ஆனால், அதை நீங்கள் 100 சதவீதம் உறுதியாக செய்ய விரும்பவில்லை. கடந்த கால செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பைக்

கன்னி:

நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் விஷயம் ஒன்றை தற்போது எடுத்துச் செய்வதற்கான காலம் கணிந்துள்ளது. ஒரு சின்ன விதைதான் செடியாகவும், மரமாகவும் வளருகிறது. பயணத்தின்போது உங்களை சந்திக்கும் நபர் காதலை வெளிப்படுத்தக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இறகு

துலாம்:

கூட்டு சந்திப்பு நடத்துவதற்கான வாய்ப்பு நெருங்கி வருகிறது. இன்றைய நாளின் இரண்டாம் பகுதி மிகவும் உற்சாகம் உடையதாக இருக்கும். காலையில் இருந்து மதியம் வரை சோம்பலாக உணரக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கரோகே

விருச்சிகம்:

உங்களுடைய திடமான முடிவுகள் குறித்து மற்றவர்களுக்கு பிரச்சினை இருக்கலாம். ஆனால், நீங்கள் அவர்களை சமரசம் செய்வீர்கள். சில மாதங்களுக்கு முன்பு வந்த நல்ல வாய்ப்பு தற்போது மீண்டும் வர இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய புத்தகம்

தனுசு:

நீண்ட காலத்திற்குப் பிறகு, உங்களைச் சுற்றியிலும் நடக்கும் விஷயம் குறித்து உங்களுக்கு தெளிவு கிடைக்கும். தற்போது மனதை ஒருங்கிணைத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். நீங்கள் கொடுத்த கடன் திரும்பி வர உள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பியானோ

மகரம்:

நீங்கள் வகிக்கும் பதவியை சிலர் தவறாகப் பயன்படுத்த எண்ணிக் கொண்டிருப்பதால் நீங்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். உங்கள் உள்விவகாரங்களில் யாரேனும் தலையிட நினைத்தால், அதனை வெறுப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்கொயர் பாக்ஸ்

கும்பம்:

உணர்ச்சிகரமான சிந்தனைகளை கடந்த, யதார்த்தம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தருணத்தில் நீங்கள் உள்ளீர்கள். உங்களை தேடி புதிய பொறுப்பு ஒன்று வரும். ஆனால், அதில் சில சமரசங்களை செய்ய வேண்டியிருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிஃப்ட் பாக்ஸ்

மீனம்:

அடுத்து என்ன நடந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள தயார் நிலையில் உள்ளீர்கள். ஆனால், உங்கள் மனம் அமைதியின்றி உள்ளது. உங்கள் அச்சத்தை கடந்து, அடுத்தகட்ட நகர்வை நோக்கி செல்லுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கடிகார கோபுரம்

Published by:Lakshmanan G
First published: