மேஷம்:
உங்கள் மனதில் சுமந்து வரும் பகையுணர்ச்சிகளுக்கு தீர்வு காண்பதற்கு உகந்த நாள் இது. உங்கள் அன்றாட பழக்கங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை செய்துள்ளீர்கள். நெருங்கிய நண்பரிடம் இருந்து வரும் செய்தி மனதுக்கு குதூகலம் தரும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளி
ரிஷபம்:
ஒடுக்கப்பட்ட உணர்ச்சிகள் சாந்தம் அடைவதற்கு சில காலம் தேவைப்படும். பிறருக்கான பொறுப்புகளை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்றால், அவற்றை ஒத்திவைக்க நேரிடலாம். மனதில் தோன்றும் வெறுப்புணர்ச்சி தற்காலிகமானதே.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இறகு
மிதுனம்:
நிலுவையில் உள்ள விஷயம் ஒன்று அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும். அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் தாமதம் நிலவுவதை உணருவீர்கள். வேலைப்பளுவில் இருந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். பணியில் கவனம் தேவை.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தையல் வேலை
கடகம்:
உங்கல் ப்ராகட்டின் தொடக்க நிலையில் சில தடைகள் ஏற்படக் கூடும். எதிர்பாராத இடங்களில் இருந்து ஆதரவு கிடைக்கும். உங்கள் கவலைகளில் இருந்து கொஞ்சம் விடுபடுவீர்கள். திட்டமிட்ட ஓய்வு தற்போது அவசியமாக தேவை.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஏலக்காய்
சிம்மம்:
பிறருடைய இழப்பு உங்களுக்கு லாபமாக அமையும். பழைய புத்துணர்ச்சி மீண்டும் கிடைத்திருப்பதாக உணருவீர்கள். இன்றைக்கு சிறப்பான பரிந்துரை உங்களை நோக்கி முன்வைக்கப்படும். உங்கள் தேவைகளை சுருக்கிக் கொள்ளவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரிய அஸ்தமனம்
கன்னி:
உங்களுக்கு சாதகமான லாப சூழ்நிலையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறீர்கள். தொலைதூரத்தில் உள்ள நண்பர் உங்களை தொடர்பு கொள்வார். அமைதியாக இருந்து, சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளை பலகை
துலாம்:
புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வந்தாலும், அவை பலன் தருவதற்கு சில காலம் தேவைப்படும். எந்தவொரு பிரச்சினையையும் மனதில் பூட்டி வைக்க வேண்டாம். அமைதிக்கான எளிமையான நடவடிக்கைகள் நல்ல தீர்வை தரும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கோபால்ட் ப்ளூ
விருச்சிகம்:
நேரடியாக தீர்வை தேடுவது தற்போதைய சூழலில் நல்லதல்ல. உங்கள் எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் மிகுந்த கவலைகள் உங்களை குடிகொண்டிருக்கும். சில விஷயங்களை இப்போது புறக்கணிப்பது நல்லது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ட்ரே
தனுசு:
புதிய விஷயங்கள் அணிவகுத்து நிற்பதால் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படலாம். பழைய விஷயங்களுக்கும், புதிய விஷயங்களுக்கும் தொடர்பு இல்லாமல் போகும். உங்களுக்கு சிலர் பரிசு அளிக்கக் கூடும். எந்தவொரு விஷயத்திலும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவைகள்
மகரம்:
சில நாட்கள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவையாக இருக்கும். அப்படியொரு நாள் இன்றைக்கு வந்துள்ளது. நீங்கள் அடைந்துள்ள உச்சத்தை எண்ணி மகிழ்ச்சி கொள்ளுங்கள். ஏதோ ஒரு பிரச்சினை உங்கள் மனதை பாதிக்கக் கூடும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உள்அரங்கு செடி
கும்பம்:
தற்காலிகமான பிரச்சினைகள் பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த திட்டத்தை நீங்கள் இப்போது செயல்படுத்தலாம். முன்னாள் காதல் உறவு ஒன்று உங்களை தொடர்பு கொள்ள முயலும். ஆனால், நீங்கள் இடம் கொடுக்க வேண்டாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நோட்
மீனம்:
நீங்கள் இப்போதே விழித்துக் கொள்ளாவிட்டால் எதிர்காலம் என்பது சிறப்பாக அமையாது. உலகம் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதை கவனித்து, புரிந்து கொள்ளவும். தற்காலிகமாக கவலைகள் வந்து போகும். பயணங்கள் சிறப்பாக அமையும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழைய புகைப்படம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks