Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 20, 2022) பயணம் செல்ல வாய்ப்புள்ளது.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 20, 2022) பயணம் செல்ல வாய்ப்புள்ளது.!

Deiviga Vakku

Deiviga Vakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

உங்கள் ஆழ்மன சிந்தனை, உணர்வுகள் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை நீங்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பணிச்சுமை காரணமாக சற்று கூடுதலான உடல்சோர்வு ஏற்படலாம். அதுகுறித்து கவலை கொள்ள வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஸ்

ரிஷபம்:

தேவையற்ற மன அழுத்தம் மற்றும் குழப்பம் காரணமாக தாமதம் ஏற்படக் கூடும். நீங்கள் எப்போதுமே திட்டமிடாத ஒன்றை செய்து முடிக்கும் சூழல் நிலவும். யாரோ ஒருவர் குறித்து அல்லது ஏதோ ஒன்று குறித்து பொதுப்படையான முடிவுக்கு வர வேண்டாம். உண்மைகளை ஆய்வு செய்யவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படிகக்கல்

மிதுனம்:

உங்களை தேடி வரக் கூடிய அதிர்ஷ்டம் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். நீண்ட கால இலக்கை நோக்கி பயணிக்க வைப்பதாகவும் அது அமையும். உங்களின் தகவல் தொடர்பு அனைத்தும் எளிமையாக மற்றும் தெளிவாக இருக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிறிஸ்டல்

கடகம்:

உங்களுக்கு கிடைக்கப்பெறும் ஆற்றல்களால் நம்பிக்கையாகவும், புத்துணர்ச்சியாகவும் உணருவீர்கள். உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் வாழ்க்கை துணையிடம் இருந்து ஆக்கப்பூர்வமான அறிவுரை கிடைக்கும். குழந்தைகள் விடுமுறையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ப்ளூ கிறிஸ்டல்

சிம்மம்:

உங்களுக்கான தைரியத்தை நீங்கள் வரவழைத்துக் கொண்டு, கடினமான சூழல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். குடும்பத்திற்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு ஒவ்வொன்றாக வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குவார்ட்ஸ்

கன்னி:

உங்கள் தினசரி வாழ்க்கையில் நீங்கள் சிந்தித்துப் பார்க்காத மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கலாம். மிகபலமான வாய்ப்பு உங்களை நெருங்கி வருகிறது. பணியிடத்தில் உங்களுக்கு புதிய பாதையை அது ஏற்படுத்திக் கொடுக்கும். அண்டை வீட்டாரின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - எமரால்டு

துலாம்:

உங்கள் செல்வாக்கு மற்றும் அதிகாரத்தை சிலர் தவறாகப் பயன்படுத்த முயற்சி செய்யக் கூடும். ஆகவே நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். சின்னதாக அல்லது பெரியதாக ஏதேனும் ஒரு மாற்றத்தை உண்டு செய்ய வேண்டும் என தீவிரமாக இருக்கிறீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ராசிக்கல்

விருச்சிகம்:

சில சமயம் சாதாரண விஷயங்களில் தான் நமக்கு சிறப்பான தீர்வுகள் கிடைக்கும். பாரம்பரியம் மிகுந்த நிறுவனத்தில் இருந்து உங்கள் பணிக்கான நல்ல வழிகாட்டி கிடைப்பார். இரண்டாம் வாய்ப்பு மூலமாக வருமானம் கிடைக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செவ்வந்தி

தனுசு:

உங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்துங்கள். உங்கள் முன்னுரிமைகளை தெளிவாக எடுத்துரைக்கவும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை கையில் எடுப்பீர்கள். உங்களுக்கான துணையை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அதற்கு தகுதியான ஒருவரை சந்திக்க உள்ளீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கடல் சிப்பி

மகரம்:

வாழ்க்கையின் பரிணாமங்கள் மாற்றம் அடைந்து வருகின்றன. ஒரு நகர்வில் நிலையாக இருக்க வேண்டும் என்றால் பூமியில் உங்கள் பாதங்களை கெட்டியாக நிறுத்த வேண்டும். பிறருக்கு கடன் கொடுப்பதை சில காலம் தவிர்க்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - லக்கி செடி

கும்பம்:

கடினம் மிகுந்த இடம் அல்லது சூழலில் உங்களுக்கான பாதையை நீங்கள் அமைத்துக் கொள்ள இருக்கிறீர்கள். ஆனால், தொடர்ந்து மாறி வரும் சூழல்களால் நீங்கள் வெறுப்பு அடைந்திருக்க கூடும். கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்கு

மீனம்:

வெளிநாடு செல்ல நீங்கள் திட்டமிட்டு வரும் நிலையில், அதற்கு சரியான தருணம் இது. பிரசித்தி பெற்ற பள்ளி ஒன்றில் அட்மிஷன் பெற முயற்சி செய்து வருபவர் என்றால், அதற்கான வாய்ப்பு குறைவு. உங்கள் தேவைகளை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மார்பிள் டேபிள்
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி