முகப்பு /செய்தி /ஆன்மிகம் / செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 20, 2022) முதலீடுகளில் லாபம் கிடைக்கும்.!

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 20, 2022) முதலீடுகளில் லாபம் கிடைக்கும்.!

money

money

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 20) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

நிதி நிலை பலவீனமாக வாய்ப்புள்ளது, இதனால் அத்தியாவசிய தேவைக்காக கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். எனவே செலவுகளை புத்திசாலித்தனமாக கையாளுங்கள். முதலீடுகளை செய்யும் முன்பு நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது, இல்லையென்றால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

பரிகாரம்: லட்சுமி தேவியை வழிபடவும்.

ரிஷபம்:

இன்றைய தினம் புதிய வேலைகளை தொடங்கத் சாதகமாக இல்லை, எனவே புதிதாக எதையும் தொடங்கினால் பேரிழப்பை சந்திக்க நேரிடலாம். அடுத்தடுத்து வருமானம் கிடைக்கும் என நம்பி, வந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

பரிகாரம்: பசுவிற்கு பச்சை புல் கொடுக்கவும்.

மிதுனம்:

தொழில் துறையில் வெற்றி கிடைக்கும். நீண்ட கால முதலீடு பலன் தரும். வசதிக்காக பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். தேவையான அளவு செலவு செய்யுங்கள்.

பரிகாரம்: பெற்றோரின் ஆசியைப் பெறுவது.

கடகம்:

நீங்கள் எடுக்கும் முடிவு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் தொடர்பு அதிகரிப்பதால் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. யாருக்காவது கடன் கொடுக்கும் முன் யோசியுங்கள்.

பரிகாரம்: மீன்களுக்கு உணவளிக்கவும்.

சிம்மம்:

இன்றைய தினம் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருப்பதால், பணியிடத்தில் பாராட்டுக்களும், முதலீடுகளில் லாபமும் கிடைக்க வாய்ப்புள்ளது. சொத்து சம்பந்தமான முடிவுகளில் பலமுறை சிந்தித்து புத்திசாலித்தனமான முடிவௌ எடுக்கவும்.

பரிகாரம்: எறும்பு சர்க்கரை கலந்து மாவு சேர்க்கவும்.

கன்னி:

இன்றைய தினம் செலவுகள் அதிகரிக்கும், குறிப்பாக தொண்டு மற்றும் சேவைக்காக பணத்தை செலவிட நேரிடலாம். பணிமாற்றத்திற்காக காத்திருப்போருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்: உடல் ஊனமுற்ற நபருக்கு உதவி செய்யுங்கள்.

துலாம்:

இன்று வருமானம் குறைவாகவும், செலவு அதிகமாகவும் இருக்கும். இதனால் மன உளைச்சல் அதிகரிக்கும். முதலீட்டில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது.

பரிகாரம்: கறுப்பு நாய்க்கு எண்ணெயில் செய்யப்பட்ட ஜிலேப்பியை ஊட்டவும்.

விருச்சிகம்:

இன்று ஒரு முக்கியமான வணிக ஒப்பந்தம் உங்களுக்கு சாதகமாக முடிவடையும், இது எதிர்காலத்திலும் நன்மை பயக்கும். நீண்ட கால முதலீட்டிற்கான சரியான வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: தாமரை மலரில் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

தனுசு:

இன்று செல்வம் பெருகும் நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் வசூலாகும். வீட்டில் செலவுகள் குறைவாலும் வருமானம் அதிகமாக இருப்பதாலும் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

பரிகாரம்: சூரியனை நீர் வைத்து வழிபடுங்கள்.

மகரம்:

இன்று உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் நிலம், சொத்து சம்பந்தமான பிரச்சனைகளும் தீரும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நன்மை தரும்.

பரிகாரம்: வாழை மரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்.

கும்பம்:

இன்று நல்ல பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வயதான பெண்மணியின் ஆசியால் முன்னேற்றத்திற்கான சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களுடன் நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பரிகாரம்: சிறுமிகளுக்கு பாயாசம் ஊட்டிவிடவும்.

மீனம்:

இன்று புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கூடிய நாள். உங்கள் ராசிக்கான நட்சத்திரம் மீண்டும் நல்ல பலன் தரக்கூடும். வியாபாரத்தில் அதிக பணம் முதலீடு செய்வது நன்மை தரும்.

பரிகாரம்: துர்கைக்கு சிவப்பு கலர் புடவை அணிவித்து ஆராத்தி எடுங்கள்.

First published:

Tags: Astrology, Money, Rasi Palan