Home /News /spiritual /

வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 16, 2022) பொருளாதார நிலை மேம்படும்.!

வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 16, 2022) பொருளாதார நிலை மேம்படும்.!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 16) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மிகவும் சிறப்பான நாளாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குறிப்பாக பெரியவர்களின் அன்பும், குழந்தைகளின் பாசமும் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்று புதிய தொழில் தொடங்குவது பற்றி யோசிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 3
பரிகாரம்: பறவைக்கு தானியம் கொடுங்கள்.

ரிஷபம்:

புதிய வேலைகள் மற்றும் புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. வேலையை விரைவாக முடிக்க, சரியான திட்டமிடலுடன் தொடங்குங்கள். ஸ்மார்ட் ஒர்க் செய்ய கற்றுக்கொண்டால், அன்றாடப் பணிகளை முடிப்பதில் எந்தத் தடையும் இருக்காது. பணியிடத்தில் புதிய சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பிரச்சனைகளை பேசி தீர்க்க சரியான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 8
பரிகாரம்: கருப்பு நாய்க்கு ஏதாவது இனிப்பு பொருளை சாப்பிட கொடுங்கள்.

மிதுனம்:

தற்போதைய திட்டங்கள் மற்றும் பணிகளில் தடைகள் இருக்கலாம். எந்தவிதமான வாக்குவாதம் அல்லது மோதலைத் தவிர்க்கவும். முதலீட்டை தள்ளிப் போடுவது நல்லது. சொத்து சம்பந்தமான ஆவணங்களில் கையெழுத்து போடும் முன்பு, நன்றாக பரிசோதித்து முடிவெடுங்கள். இல்லையெனில், நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 8
பரிகாரம்: உடல் ஊனமுற்ற நபருக்கு சேவை செய்யுங்கள்.

கடகம்:

இன்றைய தினம் ஏற்ற - இறக்கம் என இரண்டும் கலந்த நாளாக இருக்கும். எந்த ஒரு பெரிய வேலையையும் தொடங்கும் முன் கண்டிப்பாக அந்த துறை சார்ந்தவர்களின் கருத்தை கேட்க வேண்டும். இன்று வியாபாரத்தில் லாபம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மொத்த வியாபாரம் செய்பவர்களின் வேலை எந்த பிரச்சனையும் இன்றி நன்றாக நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 3
பரிகாரம்- மாவில் சர்க்கரை கலந்து எறும்புகளுக்கு வைக்கவும்.

சிம்மம்:

வியாபாரம் தொடர்பாக புதிய திட்டங்களை செயல்படுத்த சிறந்த நாள். குடும்பத்தின் கணவன் - மனைவிக்குள் ஒத்துழைப்பு அதிகரிப்பது மகிழ்ச்சி தரும். காதலர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாள். நினைத்த காரியம் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
பரிகாரம்: மாலையில் அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்.

கன்னி:

இன்று கல்வியில் பெறும் வெற்றி மூலமாக, உங்களுடைய பெயரும் புகழும் அதிகரிக்கும். நல்ல ஆரோக்கியத்துடனும், வழக்கத்தை விட அதிகமான நம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். தொழில் துறையில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
பரிகாரம்: சிவப்பு நிற பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்.

துலாம்:

இன்று அளவுக்கு அதிகமாக பேசுவதை சற்று குறைத்துக் கொண்டாலே போதும், இந்த நாள் இனி நாளாக அமையும். ஏனெனில் வாயில் இருந்து வரக்கூடிய ஒரு தவறான வார்த்தை உங்களை பெரும் சிக்கலில் சிக்கவைக்கக்கூடும் என்பதால், கவனம் தேவை. இன்று வீட்டிற்கு வர உள்ள உறவினரை இன்முகத்துடன் வரவேற்று, நன்றாக உபசரித்து அனுப்ப வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: தங்கம்
அதிர்ஷ்ட எண்: 10
பரிகாரம் - சரஸ்வதி தேவிக்கு வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

விருச்சிகம்:

பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். இன்று சிக்கலான விஷயங்களைக் கூட சமரசம் பேசி சரி செய்ய முடியும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கி வந்து சேரலாம். கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை நீலம்
அதிர்ஷ்ட எண்: 3
பரிகாரம்: ராமர் கோவிலில் கொடி காணிக்கை செலுத்தவும்.

தனுசு:

பிசினஸ் பார்ட்டனர் அல்லது நெருங்கிய நண்பருடன் பிரச்சனை வரக்கூடும். தொழில் சம்பந்தமான பயணங்கள் எதிர்பார்த்த பலனைத் தராது. புதிய பணியிடத்தில் சேர்வதற்கு அல்லது புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகளைத் தொடங்குவதற்கு இன்றைய தினம் சாதகமாக இல்லை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1
பரிகாரம்: அனுமன் கோவிலில் நெய் தீபம் ஏற்றவும்.

மகரம்:

தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது பணம் மற்றும் புதிய வாய்ப்புகளை கைநழுவிச் செல்ல காரணமாக அமையலாம். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். பொருளாதார நிலை மேம்பட வாய்ப்புள்ளது. அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்.

அதிர்ஷ்ட எண்.6
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
பரிகாரம்: சிவபெருமானை நீர் வைத்து வழிபடவும்.

கும்பம்:

அன்றாட தேவைகளுக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது கவலை தரும். இதனால் உடல் உபாதைகள் அதிகரிக்கலாம். தனிப்பட்ட பிரச்சனைகளால் வேலை பாதிக்கப்படுவது மன உளைச்சலை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
பரிகாரம்: பைரவர் கோவிலுக்கு தேங்காய் தானம் செய்யுங்கள்.

மீனம்:

தினசரி செலவுகள் அதிகரிக்கூடும். ‘காலத்தே பயிர் செய்’ என்பது போல், நடக்க வேண்டிய காரியங்களை சரியான நேரத்தில் செய்து முடிக்காவிட்டால், எதிர்காலத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். பழிவாங்கும் உணர்வை கைவிடுவது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
பரிகாரம்: சூரியனை நீர் வைத்து வழிபடவும்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி