Home /News /spiritual /

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 15, 2022) தொழில் ரீதியாக சிறந்த நாளாக இருக்கும்.!

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 15, 2022) தொழில் ரீதியாக சிறந்த நாளாக இருக்கும்.!

money

money

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 15) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

தடைபட்ட வேலைகள் நிறைவடையும். நன்றாக பணம் சம்பாதிக்க, கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் கொஞ்சம் போராட்டங்கள் இருக்கும்.

ராசியான எண்: 5 ராசியான நிறம் - ஆரஞ்சு

பரிகாரம் - அனுமனுக்கு ஆரத்தி எடுத்து வழிபடவும்.

ரிஷபம்:

திடீர் செலவுகள் அதிகரிக்கும், அதனால் நீங்கள் திட்டமிட்ட நிதி நிலைமையில் குழப்பம் அடையலாம். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். காதலிப்பவர்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள்.

ராசியான எண்: 9 நல்ல நிறம்- சிவப்பு

பரிகாரம் - ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.

மிதுனம்:

நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக் கவலைகள் நீங்கும். முழு ஆர்வத்துடன் வேலையில் ஈடுபடுவீர்கள். சொத்து சம்மந்தப்பட்ட முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும், அப்போதுதான் லாபம் கிடைக்கும்.

ராசியான எண்: 3 ராசியான நிறம்: பாதாமி

பரிகாரம் - பசுவிற்கு சப்பாத்தி கொடுக்கவும்.

கடகம்:

சுபகாரியங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். இதனால் கடன் வாங்கும் நிலை கூட ஏற்படலாம். தெரியாதவர்களை சந்திப்பீர்கள். நிறைவேறாமல் இருக்கும் வேலைகளை முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அலுவலகத்தில், உயரதிகாரிகளால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ராசியான எண்: 4 ராசியான நிறம்: வெள்ளை

பரிகாரம் - ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள்.

சிம்மம்:

பணம் ஈட்டுவதற்கான, லாபம் பெறுவதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் மரியாதை மேலும் அதிகரிக்கும். நீங்கள் வேலை செய்யும் துறையில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டால், மன அமைதி கிடைக்கும்.

ராசியான எண்: 10 ராசியான நிறம்: வெளிர் சிவப்பு

பரிகாரம் - சிவப்பு நிற பழங்களை ஏழைக்கு தானம் செய்யுங்கள்.

கன்னி:

அலுவலகப் பணியில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. மத ரீதியான பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும்.

ராசியான எண்: 3 ராசியான நிறம்: ஆரஞ்சு

பரிகாரம் - சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

துலாம்:

அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணம் பெற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். இடமாற்றம் சாதகமாக இருக்கும். உறவினர்களுடன் உறவு மேம்படும்.

ராசியான எண்: 7 ராசியான நிறம்: குங்குமப்பூ

பரிகாரம்- சிவப்பு நிற பழங்களை ஏழைக்கு தானம் செய்யுங்கள்.

விருச்சிகம்:

கல்வி தொடர்பான வேலைகள் சாதகமாக இருக்கும். யாருடனாவது கருத்து வேறுபாடு இருந்தால், உங்கள் பேச்சில் பணிவாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும். அவசரமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். பணம் ஈட்ட கூடுதல் முயற்சிகள் தேவை.

ராசியான எண்: 1 ராசியான நிறம்: செந்தூரம்

வண்ண பரிகாரம் – அனுமனுக்கு ஆரத்தி எடுத்து வழிபடுங்கள்.

தனுசு:

முழு ஆர்வத்துடன் வேலையில் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். எந்த ஒரு முக்கிய முடிவையும் உடனே எடுக்க வேண்டும். தாமதம் செய்தால், லாபம் பெற முடியாது.

ராசியான எண்: 10 ராசியான நிறம்: மெரூன்

பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

மகரம்:

இன்று தொழில் ரீதியாக சிறந்த நாளாக இருக்கும். எந்தவொரு சிறப்பு ஒப்பந்தத்திலும் இன்று கையெழுத்திடலாம். இது உங்களுக்கு லாபம் ஈட்டும். காதலனுக்கும் காதலிக்கும் இடையே உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை.

ராசியான எண்: 5 ராசியான நிறம்: கிரீம்

பரிகாரம் - பசுவிற்கு புல் அல்லது கீரையை கொடுக்கவும்.

கும்பம்:

உங்கள் புதிய திட்டங்கள் இன்று கவனிக்கப்படும், இது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். இன்று நீங்கள் சட்ட ரீதியான பிரச்சனைகளில் வெற்றி பெறுவீர்கள். திருமண உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும்.

ராசியான எண்: 8 ராசியான நிறம்: வயலட்

பரிகாரம்: துர்க்கை கோயிலில் நெய் தீபம் ஏற்றவும்.

மீனம்:

இன்று குடும்ப வாழ்க்கையில் நிலையற்ற தன்மை காணப்படும். உங்கள் பெற்றோருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். காதலிப்பவர்களுக்கு சாதகமான நாள். சம்பளம் வாங்குபவர்கள் கடின உழைப்பால் மேலதிகாரிகளை திருப்திப்படுத்தலாம்.

ராசியான எண்: 8 ராசியான நிறம்: பச்சை

பரிகாரம்: ஒரு ஏழைக்கு வெள்ளை நிறப் பொருட்களை தானம் செய்யுங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி