Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 14, 2022) புதிய வேலைகளை தொடங்க ஏற்ற நாள்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 14, 2022) புதிய வேலைகளை தொடங்க ஏற்ற நாள்..!

Deiviga Vakku

Deiviga Vakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

நிறுத்தி வைத்திருந்த வேலைகளை மீண்டும் தொடரவும், பழைய கடன் பாக்கிகளை செட்டில் செய்யவும் ஏற்ற நாள். உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால், லேசான தொற்று அல்லது தலைவலி ஏற்பட்டாலும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தோட்டம்

ரிஷபம்

இன்றைய தினம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சக்தி வாய்ந்ததாகவும், சாதகமானதாகவும் உள்ளது. எனவே புதிய வேலைகளை தொடங்க ஏற்ற நாள். யாராவது கடன் கேட்டால், பொறுமையாக இல்லை எனக்கூறி மறுத்துவிடுங்கள். நடைபயிற்சி அல்லது வேறு ஏதேனும் உடல் பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - இறகு

மிதுனம் :

வெளியில் இருந்து பார்க்க நீங்கள் மனதளவில் வலிமை மிக்கவராக தோன்றினாலும், உள்ளுக்குள் உணர்ச்சிகரமான நபர். அதனை அறிந்த சிலர் உங்கள் உணர்ச்சியை தூண்டிவிட்டு ஆதாயம் தேட முயற்சிக்கலாம். எந்த விஷயத்தையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது சிறந்தது. உண்மையாகவே உதவித் தேவைப்படும் ஒரு சக ஊழியர்கள் உங்களை நாட வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கூழாங்கற்கள்

கடகம்:

பழைய நட்பு மீண்டும் இணைய வாய்ப்புள்ளது. இன்றைய வானிலை மோசமாக உள்ளதால் வெளிப்புற சந்திப்புகளை தவிர்க்கவும். ஏதாவது ஒரு விஷயத்தை ஆதரிக்கத் திட்டமிட்டிருந்தால், அதற்கு இப்போது ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - காகிதம்

சிம்மம்:

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீர் விருந்தினர்கள் வீட்டிற்கு வரலாம். இருப்பினும் இதனால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். உங்களிடம் ஊழியர் ஒருவர் பிரச்சனையைக் கொண்டு வந்தால், அதற்கு முன்னுரிமை கொடுத்து தீர்த்து வையுங்கள். நீண்ட நாளாக காத்திருந்த நல்ல விஷயங்கள் நடந்தேறும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - முத்து சரம்

கன்னி:

வேலையில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக தயங்கிக்கொண்டிருந்த விஷயம் குறித்து பேச ஆரம்பிக்கலாம். வீட்டிலும் அலுவலகத்திலும் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - திடமான வாசனை

துலாம்:

அடுத்தவர் மீது அக்கறை செலுத்துவது பலவீனம் அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். புதிய விஷயங்களை முயற்சித்து பார்க்க ஏற்ற நாள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சிவப்பு நிற தண்டு

விருச்சிகம்:

கனவுகள் எப்போதும் ஆழ் மனதின் பய உணர்வு மட்டுமே என்பதால் கெட்ட கனவு பற்றிய அச்சத்தை கைவிடுங்கள். எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம். பழைய நண்பருடன் நாளை செலவிட திட்டமிடலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - செங்கல் சுவர்

தனுசு:

உங்களை நேசிக்கும் ஒருவர் நீங்கள் உடன் இல்லாததை நினைத்து வருத்தப்படலாம். எனவே அன்புக்குரியவர்களுடன் இன்றைய தினத்தை செலவிட திட்டமிடுங்கள். மாலையில் திடீரென வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரலாம். ரெகுலர் ஹெல்த் செக்அப் செய்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நியான் ஹைலைட்டர்

மகரம்:

இன்றைய நாளை பழைய நினைவுகள் ஆக்கிரமிக்கக்கூடும். பெற்றோர் உங்களுடன் கூடுதலாக நேரம் செலவிட விரும்பலாம். பழைய அணுகுமுறைக்கு பதிலாக புதிய திட்டத்தை உருவாக்கவும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கண்ணாடி பாட்டில்

கும்பம்:

கெட்ட கனவுகள் பற்றிய பயத்தை பின்னுக்குத் தள்ளுங்கள். கூடுதல் பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களாக வாழ்க்கையில் அரங்கேறிய நல்ல விஷயங்களை எண்ணி கடவுளுக்கு நன்றி சொல்வீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஆலமரம்

மீனம்:

உங்கள் குடும்பத்தினர் உங்களுடன் கூடுதலாக நேரம் செலவிட நினைக்கிறார்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. மருத்துவ நிபுணர்களுக்கு வழக்கத்தை விட பணிச்சுமை கூடுதலாக இருக்கும். அரசு அதிகாரிகளுக்கு வேலையில் சில இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மூன்று பறவைகள்
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி