Home /News /spiritual /

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 13, 2022) தொழிலில் கூடுதல் வருமானம் கிடைக்கும்..!

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 13, 2022) தொழிலில் கூடுதல் வருமானம் கிடைக்கும்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 13) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

உங்களுடைய படைப்பாற்றல் மற்றும் உணர்திறன் மேம்பட்டுள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று நீங்கள் வாழ்க்கையின் புதிய பரிமாணத்தை அனுபவிப்பீர்கள். நம்பிக்கையை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
பரிகாரம்- ஏழைக்குசிவப்பு நிற பழங்களை தானம் செய்யுங்கள்.

ரிஷபம்:

இன்று நீங்கள் முழு நம்பிக்கையுடனும், வேலைகளை சீராக முடிக்ககூடிய நபராகவும் இருப்பீர்கள். இன்றைய தினம் மிகவும் நன்றாக இருப்பதால், உங்களுக்கு அதிக மரியாதை கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: தங்கம்
அதிர்ஷ்ட எண்: 1
பரிகாரம் - ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள்.

மிதுனம்:

ஆன்மீகத்தில் ஈடுபடுவது இன்றைய நாளையே மாற்றிக்காட்டும். எந்த ஒரு மதம் சார்ந்த ஆன்மீக பயணம் அல்லது நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கலாம். உங்கள் உணர்வுகளை குடும்பத்தினர் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை தரக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1
பரிகாரம் - நீராடி சிவபெருமானை வழிபடுங்கள்.

கடகம்:

இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைகக்கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருப்பதால் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
பரிகாரம் - அனுமனை தீப ஆராத்தி செய்து வழிபடவும்

சிம்மம்:

கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது, உங்கள் உரிமைகளை சரியாகப் புரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டும். வீட்டின் பெரியவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 9
பரிகாரம் - ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.

கன்னி:

வாழ்க்கையில் உங்களுக்கான பொறுப்புகளை சிறப்பாக கையாள வேண்டிய நேரம் இது. கன்னி ராசிக்காரர்கள் சிலருக்கு வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அல்லது குருவின் ஆசிர்வாதம் கிடைக்கக்கூடும். கல்வி விஷயத்தில் மாணவர்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 3
பரிகாரம் - பசுவிற்கு ரொட்டியை சாப்பிடக் கொடுக்கவும்.

துலாம்:

கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும், இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவக்கூடும். இன்றைய நாள் இளைஞர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பிரிந்து சென்ற உறவுகள் ஒன்று கூட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 4
பரிகாரம் - ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள்.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு குழப்பமான நாள். வேலையில் தடைகள் ஏற்படக்கூடும், இருப்பினும் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புடன் தொடர்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
பரிகாரம்- சிவப்பு நிற பழங்களை ஏழைக்கு தானம் செய்யுங்கள்.

தனுசு:

இன்று நீங்கள் வழக்கத்தை விட வலிமையாகவும், மன உறுதியுடனும் இருப்பது போல் உணருவீர்கள். நாளை தொடங்கும் முன்பு ஏதாவது ஒரு அம்மனை வழிபடுவது நல்லது. குடும்பம் மற்றும் வேலை இரண்டிற்குமான சமநிலையை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 3
பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

மகரம்:

இன்றைய நாள் எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும், மூத்தவர்கள் மற்றும் குருவிடம் ஆலோசனை பெறுவது நல்லது. குறுகிய வட்டத்திற்குள் அடைந்துவிடாமல், புதிய நண்பர்களை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 7
பரிகாரம்- சிவப்பு நிற பழங்களை ஏழைக்கு தானம் செய்யுங்கள்.

கும்பம்:

இன்றைய தினம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருப்பதால், தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். இன்று உங்கள் ராசி பலன் அபரிமிதமாக மேம்படும். இன்று சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், எனவே உங்கள் திறனை விட அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1
பரிகாரம் - ஹனுமானை ஆரத்தி எடுத்து வழிபடுங்கள்.

மீனம்:

இன்று உங்களின் பழைய படைப்புகளை மதிப்பாய்வு செய்ய வேண்டிய நாள். ஒரு முடிவை எடுக்கும் முன்பு அனைத்து விதமான சாதக, பாதகங்களையும் அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள். செய்த வேலைக்கான பாராட்டு கிடைக்காமல் போவது ஏமாற்றத்தையும், வேதனையையும் கொடுக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பாதாமி
அதிர்ஷ்ட எண்: 10
பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி