Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 13, 2022) வேலையில் தலைமை ஏற்கும் வாய்ப்பு கிடைக்கும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 13, 2022) வேலையில் தலைமை ஏற்கும் வாய்ப்பு கிடைக்கும்..!

Deiviga Vaakku

Deiviga Vaakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

உங்களை மீண்டும் உடல் சோர்வு ஆட்கொள்ள தொடங்குகிறது. ஏனென்றால் தேவையற்ற வேலைகளை நீங்கள் சுமந்து வருகிறீர்கள். தோராயமான திட்டமிடாத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறீர்கள். ஆகவே ஒட்டுமொத்தமாக ஆற்றல் சிதறி விடுகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ப்ரிசம்.

ரிஷபம்:

சிறப்பு வாய்ந்த மற்றும் நெருக்கமான உறவுகள் அமைய வேண்டும் என்றால் தொடர்ச்சியாக முயற்சி செய்ய வேண்டும். உங்கள் பேச்சுக்கு வாழ்க்கை துணை செவிமடுப்பார். ஆனாலும் முயற்சிகள் தேவை. அதிகப்படியாக வேலை செய்ய வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காப்பர் பாட்டில்.

மிதுனம்:

உங்கள் வாழ்க்கையில் புதிதாக இணைகின்ற நபர் உங்கள் சுமைகளை எடுத்துக் கொள்வார். அது உங்களுக்கு நற்செய்தியாக அமையும். மன நிம்மதியை தரும். தடகள போட்டிகளில் பங்கேற்பது கூடுதல் ஆற்றலைக் கொடுக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீர்வீழ்ச்சி.

கடகம்:

பிசியான வாழ்க்கை சூழலுக்கு நடுவே குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது மனதுக்கு சீரான அமைதியை கொடுக்கும். ஆன்மீக விருப்பத்தின் அடிப்படையில் ஆரோக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். தலைமை ஏற்கும் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழமை வாய்ந்த கடிகாரம்.

சிம்மம்:

இதற்கு முன்பு நீங்கள் யாரையேனும் காயப்படுத்தி இருந்தீர்கள் என்றால் அவர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். மாற்றம் ஏற்படுவதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொள்ளவும். நண்பர்களுடன் குறுகிய பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிவான வானம்.

கன்னி:

பிரபலமான நபர் ஒருவர் உங்கள் பணியை கண்காணித்து, உங்களை அணுகக் கூடும். இதனால் நாம் சரியாக வேலை செய்யவில்லையோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும். ஆழ்மனம் சொல்வதை நம்புங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வரிசை மிகுந்த எண்கள்.

துலாம்:

அலுவலகத்தில் உள்ள அமைதியான பணி சூழல் கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது. கூடுதல் பணி சுமை ஏற்படக்கூடும். எதிர்பாராத விதமாக பழைய நண்பர் ஒருவர் உங்களை சந்திப்பார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டு தலைப்பாகை.

விருச்சிகம்:

பணியிடத்தில் சற்று கவனமுடன் இருக்கவும். இப்போது நீங்கள் செய்யும் வேலைக்கு பின்னால் பலன் கிடைக்கும். அருகாமையில் இருப்பவர்களால் தொந்தரவு ஏற்படக்கூடும். காதல் பந்தங்கள் வர இருக்கின்றன.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வலை.

தனுசு:

உங்களுக்கான நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய தினம் சற்று மந்தமாக இருக்கும். வெகு விரைவில் சோர்வடைந்து நீங்கள் தூங்கச் செல்வீர்கள். விவாதங்களில் இடைவெளியை கடைபிடிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மலர்கள்.

மகரம்:

உங்களுக்கான புதிய வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. உங்கள் முன்னால் இருக்கும் பாதை தெளிவாகவும், நேரானதாகவும் இருக்கலாம். ஆனால் அதில் எது சரியான இடம் என்பதை கண்டறியவும். சக ஊழியர் விதிமுறைகளை கடைப்பிடிக்க மாட்டார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காலணி.

கும்பம்:

உடல் சோர்வு ஏற்படுவது இயல்பானது தான். கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு செயலை செய்யும் முன்பாக உங்களுடைய முடிவுகள் சரியானதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீர்நிலை.

மீனம்:

உங்களின் நல்ல நண்பர் ஒருவர் குடும்ப விஷயங்கள் தொடர்பாக உதவி தேடி வரக்கூடும். நீங்கள் அதிகம் தெரிந்திடாத நபருக்காக ரிஸ்க் எடுக்க வேண்டாம். சேர்த்து வைத்த பணம் தற்போது உதவியாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செராமிக் பாத்திரம்.
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி