Home /News /spiritual /

திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 12, 2022) வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும்..!

திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 12, 2022) வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும்..!

money

money

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 12) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

பணியிடத்தில் இன்று உங்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். பொருளாதார நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை முறையை மேம்படுத்த இன்று நீங்கள் கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். எந்த விஷயத்தையும் புதிய கோணத்தில் பார்க்கும் புரிதல் அதிகரிக்கும்.

ராசியான நிறம்: நீலம், ராசியான எண்: 8

பரிகாரம்: எறும்புக்கு சர்க்கரை கலந்த மாவை வைக்கவும்

ரிஷபம்:

யாருடைய தூண்டுதலின் பேரிலும் நிதி விஷயங்களில் நீங்கள் இன்று முடிவெடுக்க வேண்டாம். அப்படி செய்தீர்கள் என்றால் இழப்பு ஏற்படும். உறவினர்களிடையே உங்களுக்கான மரியாதை கூடும். கலாச்சாரத்தை ஊக்குவிக்கும். அன்புக்குரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவும்.

ராசியான நிறம்: பிங்க், ராசியான எண்: 6

பரிகாரம்: மீன்களுக்கு உணவளிக்கவும்

மிதுனம்:

பொருளாதார ரீதியாக இன்று உங்களுக்கு சிறந்த நாளாக அமையும். நீங்கள் மதிக்கும் நபரின் வழிகாட்டுதலுடன், உங்களது பாதை எளிதாகும். புதிய வழிகளில் லாபம் கிடைக்கும். சர்ச்சைக்குரிய விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.

ராசியான நிறம்: பச்சை, ராசியான எண்: 4

பரிகாரம்: பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெறுங்கள்

கடகம்:

வியாபாரிகளுக்கு இன்று எதிர்பாராத லாபம் கிடைக்கும். உங்களுக்கு கொடுக்கப்படும் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பும் புரிதலும் காணப்படும். நீங்கள் ஏதேனும் முக்கிய பணிகளில் ஈடுபட்டிருந்தால் வெற்றி பெறுவீர்கள்.

ராசியான நிறம்: நீலம், ராசியான எண்: 2

பரிகாரம்: பசு மாடுகளுக்கு பசுந்தீவனம் கொடுங்கள்

சிம்மம்:

நாள் சாதகமாக இருக்கும் என்பதால் இன்றைய வருமானம் நன்றாக இருக்கும், பண வரவும் கூடும். , நிலுவையில் இருந்த பல வேலைகள் இன்று எளிதாக முடிவடையும். பரஸ்பர நம்பிக்கை காரணமாக குடும்ப உறவுகள் வலுவடையும்.

ராசியான நிறம்: பிரவுன், ராசியான எண்: 8

பரிகாரம்: லட்சுமி தேவியை வழிபடவும்

கன்னி:

முன்னேற்றத்திற்கான புதிய வழிகளையும் விருப்பங்களையும் நீங்கள் இன்று கண்டறிவது அவசியம். இன்று செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். ப்ராப்பர்ட்டி டீலர்கள் இன்று அதிக லாபம் பெறுவார்கள்.

ராசியான நிறம்: வெளிர் மஞ்சள், ராசியான எண்: 3

பரிகாரம்: ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்

துலாம்:

இன்று பல நாட்களுக்கு முன் நீங்கள் பிறருக்குக் கொடுத்த பணத்தை திரும்ப பெறலாம். நன்றாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமாக மாற்றங்கள் ஏற்படலாம்.

ராசியான நிறம்: வான் நீலம், ராசியான எண்: 0

பரிகாரம்: வயதில் மூத்தவர்களின் ஆசியை பெறுங்கள்

விருச்சிகம்:

இன்று வியாபாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதுநாள் வரை இருந்த நிதி சிக்கல்கள் தீர்க்கப்பட்டு உங்கள் வருமானம் இன்று கூடும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் இன்று பொதுவாக மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

ராசியான நிறம்: ஆரஞ்சு, ராசியான எண்: 5

பரிகாரம்: வயதில் மூத்தவர்களின் ஆசியை பெறுங்கள்

தனுசு:

ஒருவர் மீது நீங்கள் வைக்கும் அதீத நம்பிக்கை நிதி இழப்பை ஏற்படுத்தும். உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் எழும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

ராசியான நிறம்: கோல்டன் கலர், ராசியான எண்: 9

பரிகாரம்: சிவ சாலிசா பாராயணம் செய்யவும்

மகரம்:

விரைவாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகதவறான திட்டங்களில் மூலதனத்தை முதலீடு செய்து விடாதீர்கள். முதலீடுகளில் கவனமாக இருப்பது முக்கியம். பணிகளில் உங்களது செயல்திறன் சிறப்பாக இருக்கும்.

ராசியான நிறம்: கருப்பு, ராசியான எண்: 7

பரிகாரம்: கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு தேவையான பொருட்களை தானம் செய்யுங்கள்

கும்பம்:

வருமானத்தை அதிகரித்து கொள்ள சில நல்ல வாய்ப்புகளை இன்று நீங்கள் பெறலாம். உங்கள் நேர்மறையான நடத்தை குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை உங்களுக்கு பெற்று தரும். வேலையிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

ராசியான நிறம்: வயலட், ராசியான எண்: 6

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் வைத்து படையுங்கள்

மீனம்:

வியாபாரரிகள் தங்கள் தொழிலில் ஏதேனும் மாற்றங்களை செய்ய நினைத்தால் நீங்கள்பெரியவர்களை கலந்தாலோசிக்க வேண்டும். இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம். மற்றபடி இன்று சிறந்த நாள். பணவரவு நன்றாக இருக்கும்.

ராசியான நிறம்: சிவப்பு, ராசியான எண்: 3

பரிகாரம்: சிவ சாலிசா பாராயணம் செய்யவும்
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி