Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 12, 2022) செய்யும் நீண்ட கால முதலீடு நல்ல பலனைத் தரும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 12, 2022) செய்யும் நீண்ட கால முதலீடு நல்ல பலனைத் தரும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

இன்று நீங்கள் ஒரே நேரத்தில் பல விஷயங்களை கையாள நேரிடும். எனினும் விஷயங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அலுவலக பணிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும் என்பதால் சற்று நிம்மதியாக உணர்வீர்கள். ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கோல்டுஃபிஷ்

ரிஷபம்:

நீங்கள் சமீபத்தில் தவற விட்ட ஒரு வாய்ப்பு இன்று உங்களுக்கு மீண்டும் கிடைக்கும் சூழல் ஏற்படும். உங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ள ஒருவர் உங்கள் இமேஜை கெடுக்க முயற்சிக்கலாம். வெளிப்படையாக சுயவிமர்சனம் செய்வது சிறந்த விஷயம் அல்ல.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மிதக்கும் பொருள்

மிதுனம்:

பிறர் பேச்சை கேட்டு நடப்பதை இன்று நிச்சயம் தவிர்க்க வேண்டும். வழக்கமான வேலையை தவிர வேறு எதிலாவது நீங்கள் ஈடுபட்டால் இப்போதைக்கு ஒத்தி வைக்கவும். அப்படி செய்வது உங்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்தும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நைட்டிங்கேல்

கடகம்:

இன்று மாற்றத்திற்கான நேரமாக இருக்கும் குறிப்பாக வேலையில். இன்று பணப்புழக்கம் சீராக இருக்காது என்றாலும் இந்த நிலை தற்காலிகமானதே. உங்கள் உறவு வலுப்பெறலாம். இன்று பெற்றோரின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தோட்டம்

சிம்மம்:

உங்களுக்கு இன்று ஓய்வெடுக்கும் மனநிலை ஏற்படலாம், அப்படி தோன்றினால் ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் மௌனமான அணுகுமுறையால் உங்கள் மனைவி சங்கடமாக உணரலாம். எனவே எதுவாக இருந்தாலும் அவருடன் மனது விட்டு பேசி சிக்கலை தீர்த்து கொள்ளுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கூடு

கன்னி:

புதிய நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள, வெளியூர் பயணத்தை திட்டமிட இன்று நல்ல நாள். ஒரு திடீர் வேலை உங்கள் வழக்கமான வேலைகளை தள்ளி வைக்க வழிவகுக்கும். ஒரு புதிய நபர் மூலம் நீங்கள் சிறந்த வேலை வாய்ப்பு பெறலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - 2 சிட்டுக்குருவிகள்

துலாம்:

இது உங்களுக்கு சற்று கடினமான நாளாக இருக்கலாம். என்றாலும் ஒரு புதிய சிந்தனை உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். மாலை நேரம் உங்களுக்கு இனிமையானதாக இருக்கும் என்பதால் நிம்மதியாக இருப்பதை போல உணர்வீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மரப்பெட்டி

விருச்சிகம்:

நீண்ட காலமாக மறந்துவிட்ட அல்லது கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஒரு திட்டத்தைத் தொடங்க இன்று நீங்கள் முயற்சி செய்யலாம். இன்று செய்யும் முயற்சிகள் நிச்சயம் உங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். இன்று நீங்கள் செய்யும் நீண்ட கால முதலீடும் நல்ல பலனைத் தரும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு புதிய போன்

தனுசு:

இன்று நீங்கள் திட்டமிடும் சாதாரண ஒரு முதலீட்டு வாய்ப்பு எதிர்காலத்தில் நல்ல வருமானத்தை கொண்டு வரும். உறவினர் ஒருவரால் சில சிறிய தொல்லைகள் இருக்கலாம். இதுநாள் வரை நீங்கள் அறியாத ரகசியம் ஒன்றை உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மரத்தின் வேர்

மகரம்;

இன்று நிதானம் மற்றும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அவசர முடிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். உங்களுக்கு நெருக்கமானவர் சில நாட்களுக்கு முன் கூறிய ஆலோசனையை இன்று கடைப்பிடிக்க நேரலாம். இன்று ஓய்வெடுக்க விரும்பினாலும் முடியாதபடி பயணங்கள் அதிகமாக இருக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு செராமிக் ஜார்

கும்பம்:

உங்கள் வழக்கமான எண்ணங்களை தவிர்த்து வேறுபட்ட கண்ணோட்டம் உங்கள் பிரச்சினைகளை தீர்க்கலாம். மற்றவர்கள் உங்களை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதை பற்றி நீங்கள் ஒருபோதும் கவலைப்பட தேவையில்லை. இன்று உங்களுக்கு கிடைக்கும் புதிய நட்பு உங்கள் வாழ்வில் இன்மையை சேர்க்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நீல கலர் பாட்டில்

மீனம்:

ஒரே ஒரு வருமான ஆதாரத்தை மட்டுமே சார்ந்து இருப்பது நல்லதல்ல. எனவே உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்த வேறு சில வருமான ஆதாரங்களை இன்று திட்டமிட வேண்டும். நடந்த பழைய விஷயங்களை மட்டுமே நினைத்து ஒரே இடத்தில தேங்கி நிற்காமல் அடுத்தடுத்து பணிகளை செய்து முடிக்க வேண்டிய நாளாக இன்று இருக்கிறது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சில்வர் ஸ்பூன்
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி