Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது... (ஜனவரி 18, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது... (ஜனவரி 18, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இன்றைய ராசி பலன்

மேஷம்

சில எதிர்பார்க்காத பிரச்சனைகள் தோன்றலாம். அலுவலகத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக உணர்வீர்கள். புதிய மற்றும் வித்தியாசமான திட்டம் உங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வெளிர் ஊதா நிற கலைப்பொருள்

ரிஷபம் 

தீவிரமான விவாதங்கள் செய்வது எல்லா விஷயங்களையும் தாமதமாக்கும். எனவே, விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை அளிக்கும். தேவையில்லாமல் குழம்பிக்கொள்ள வேண்டாம். உங்கள் வேலையை எளிதாக்க உதவி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மரப்பெட்டி

மிதுனம் 

அலுவக வேலை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சீராகச் செல்லும். புதிய யோசனைகளை நன்றாக ஆலோசனை செய்து தொடங்கலாம். உங்கள் காதலன் / காதலியுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கண்ணாடி வேலைப்பாடு

கடகம்

ஒரே மாதிரியான செயல்கள் உங்களுக்கு சோர்வை அளிக்கலாம். உணவுப் பற்றிய விவாதங்கள் உங்கள் நாளை சுவாரஸ்யமாக்கும். இன்று திரைப்படம், புத்தக வாசிப்பு என்று உங்கள் நாளை ஓய்வாக செலவிடலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பச்சைக்கிளி

சிம்மம் 

அதிகப்படியான அழுத்தம் உங்கள் பொறுமையை சோதிக்கும். ஆனால், நல்ல செய்தி உங்களை மகிழ்ச்சியாக்கும். நண்பருடன் மனம் விட்டு பேசுவது நிறைவாக உணர வைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பழைய டைரி

கன்னி 

முக்கியமான வேலைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். எதிர்பாராத சில தடைகள் ஏற்படலாம். நீங்கள் கேட்பது எல்லாவற்றையும் நம்ப வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – உள்ளரங்கு விளையாட்டு

துலாம்

உங்கள் சுற்றுபுறத்தை சுத்தம் செய்து, ஒழுங்கு செய்து வைத்தால் கவனம் அதிகரிக்கும். வீடோ, அலுவலகமோ, இது மிகவும் முக்கியம். வயறு சம்மந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கண்ணாடி பாட்டில்

விருச்சிகம்

இடைவெளி எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு இடைவெளி கொடுக்கவும். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கு நீங்கள் அதிகமாகத் தேவைப்படுவீர்கள். அதே நேரத்தில், எங்கோ ஒரு தொலைவில் இருக்கும் ஒரு நபருக்கு உங்கள் உதவி தேவைப்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பென்சில் பாக்ஸ்

தனுசு 

நீங்கள் இழந்த ஏதேனும் ஒன்றை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. வெளியூருக்கு செல்ல விரும்பினால், உடனே சென்று வரலாம். விளையாட்டு மீது ஆர்வம் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சைக்கிள் மணி

மகரம் 

சரியான திசையில் மேற்கொள்ளப்படும் சிறிய முயற்சி கூட சாதகமாக இருக்கும். உங்கள் உள்ளுணர்வுகளை பின்பற்றி முடிவுகளை மேற்கொள்ளுங்கள். உடல் நலத்தின் மீது கூடுதல் அக்கறை செலுத்தலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய கட்லரி

கும்பம்

புதிய ஆடைகளை வாங்க ஷாப்பிங் திட்டமிடுவீர்கள். உங்களுக்கு வழங்கப்பட்ட எல்லா வேலைகளையும் முடிக்க முயற்சி செய்வீர்கள். நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – குடை

மீனம் 

நீங்கள் இது வரை தவறாக நினைத்துக் கொண்டிருந்த, உடன் வேலை செய்பவரின் நல்ல எண்ணம், உங்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். இயற்கையோடு ஒன்றியிருப்பது உங்களுக்கு அமைதியைத் தரும். குழந்தைகள் மீது கூடுதல் கவனம் தேவை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தொங்கும் செடிகள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி