Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசிகாரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம்தான்... இன்றைய ராசிபலன் - ஜனவரி 04, 2022

தெய்வீக வாக்கு: இந்த ராசிகாரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம்தான்... இன்றைய ராசிபலன் - ஜனவரி 04, 2022

Today Rasi Palan | உங்களைச் சுற்றி இருப்பதை எளிமையாக்குங்கள். ஒரு புதிய பழக்கத்தை மேற்கொள்ளும் போது, கடினமாக உணரக்கூடும்.

Today Rasi Palan | உங்களைச் சுற்றி இருப்பதை எளிமையாக்குங்கள். ஒரு புதிய பழக்கத்தை மேற்கொள்ளும் போது, கடினமாக உணரக்கூடும்.

Today Rasi Palan | உங்களைச் சுற்றி இருப்பதை எளிமையாக்குங்கள். ஒரு புதிய பழக்கத்தை மேற்கொள்ளும் போது, கடினமாக உணரக்கூடும்.

மேஷம்

இன்று உங்களுக்கு மிகவும் பிசியான நாளாக இருக்கும். நீண்ட காலம் நிலுவையில் இருக்கும் வேலையை நிறைவேற்ற வேண்டும் என்று உங்கள் ஆற்றலும் கவனமும் இருக்கும். மாலையில், நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லக்கூடும். வேலை பளுவை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்குவீர்கள்.

அதிர்ஷ்டத்தின் அடையாளம்– சிவப்பு நிற மொபைல் கவர்

ரிஷபம் 

நீங்கள் யாரிடமாவது பேச வேண்டும் என்பதை தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தால், இன்று அதை செய்வதற்கு ஏற்ற நாளாகும். உடற்பயிற்சியை இனி வழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நல்லதொரு ஒரு வணிக வாய்ப்பு உங்களைத் தேடி வரும். அது உங்களுக்கு லாபகரமாக இருக்கும். உங்களுக்காகவும் கொஞ்சம் நேரம் செலவிடுங்கள்.

அதிர்ஷ்டத்தின் அடையாளம் – ஒரு சப்பாத்திக்கள்ளிச் செடி

மிதுனம்

இன்று உங்களுக்கு எல்லாமே சாதகமாக அமைந்திருப்பதால், இந்த நாளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய திட்டங்களை உருவாக்கி, அதை செயல்படுத்த முன்னேறுவீர்கள். குடும்ப விவகாரங்களில் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு உங்கள் உதவி தேவைப்படும்.

அதிர்ஷ்டத்தின் அடையாளம் – ஜோடிப்புறா

கடகம்

உங்களுக்குக் கிடைத்த புதிய நட்பு தற்காலிகமானது தான். உங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மூன்றாம் நபர்களின் தலையீடு உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். வேலையில் கூட்டுப் புராஜக்டை உருவாக்குங்கள்,

அதிர்ஷ்டத்தின் அடையாளம்– ஒரு ஸ்டாம்ப்

சிம்மம்

உங்களைச் சுற்றி இருகும் அனைத்தையும் எளிமையாக்குங்கள். ஒரு புதிய பழக்கத்தை மேற்கொள்ளும் போது, கடினமாக உணரக்கூடும். உங்கள் மேலதிகாரிகளிடம் இருந்து வெகுமதிகள் கிடைக்கும். நீங்கள் தினமும் செய்யும் வழக்கமான வேலைகளையே தொடர்ந்து செய்யுங்கள்.

அதிர்ஷ்டத்தின் அடையாளம் –ஒரு விசில்

கன்னி

உங்களுக்கு உதவியாளாராக பணிபுரிபவருக்கு உங்கள் உதவி தேவைப்படலாம். தவறான புரிதல் ஏதேனும் இருந்தால் அதை தெளிவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மனம் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போது, உங்களுக்கென்று நேரம் ஒதுக்கி மனம் விரும்பியதை செய்யுங்கள்.

அதிர்ஷ்டத்தின் அடையாளம் – ஒரு மீன் தொட்டி

துலாம்

வேலையில் இருக்கும் தீவிரமான பிரச்சனை மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அது கொஞ்சம் காலமாக கவனிக்கப்படாமல், தீர்க்கப்படாமல் இருக்கிறது. நாள் முழுவதும் ஓய்வில்லாமல் இருப்பது போல உணர்வைத் தவிர்க்க, இரவில் நன்றாக உறங்குங்கள். மாலையில் உங்களை உங்கள் நண்பர் யாரேனும் சந்திக்க வரலாம்.

அதிர்ஷ்டத்தின் அடையாளம் – ஒரு கேமரா

விருச்சிகம்

வீட்டில் வரப்போகும் ஒரு குடும்ப விழாவுக்கு இப்போதே தயார் செய்யத் தொடங்குங்கள். பகலில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளுக்கு முன்னுரிமை அளித்து, உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள். ஒரு புதிய பழக்கத்தை பின்பற்றுவதன் மிகவும் நல்ல மாற்றமாகும். நீண்டகாலமாக முடிவு எடுக்கப்படாமல் இருக்கும் ஒரு விஷயத்துக்கு ஆம் என்று சொல்வதற்கு சரியான நேரம் இது தான்.

அதிர்ஷ்டத்தின் அடையாளம் – ஒரு பழக்கூடை

தனுசு 

நீங்கள் அசௌகரியமாக உணர்வதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், விரைவிலேயே உங்களை நல்ல செய்தி வந்தடையும். உங்களுக்குள்ளேயே ஒரு புதிய நபரை அடையாளம் காணும் அளவுக்கு ஆற்றல் உள்ளது. உங்களுக்காக, உங்கள் குடும்பம் ஒரு முக்கியமான முடிவை எடுக்கும்.

அதிர்ஷ்டத்தின் அடையாளம் – ஒரு தொப்பி

மகரம்

நிறைய பயிற்சி பெற்றால், பின்னாளில் நிறைய நேரத்தை சேமிக்க முடியும். இது ஒரு திறனை கற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. உங்களின் இடத்தைப் பிடிக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். மதியம் வரை அதிக குழப்பமாக உணரக்கூடும்.

அதிர்ஷ்டத்தின் அடையாளம் – கேமொமில் டீ

கும்பம் 

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், சில காரணங்கள் தாமதங்கள் ஏற்படுத்தலாம். நீங்கள் ஆழமாக சிந்தித்தால், நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடிய விஷயம் ஆச்சரியமளிப்பதாக இருக்கும். நன்றாக சிந்தித்து எடுக்கக்கூடிய முடிவு, நீங்கள் முன்னேறிச் செல்ல உதவும். உங்கள் உடன் பிறந்தவர்களின் விசித்தரமான நடத்தை உங்களுக்கு அதிர்ச்சியைத் தரும்.

அதிர்ஷ்டத்தின் அடையாளம் – ஒரு நறுமண மெழுகுவர்த்தி

மீனம்

உங்களை நீங்கள் அழகாக வெளிப்படுத்திக் கொள்ள மிகச்சிறந்த நாள் இது. நீங்கள் ஆசைபப்டுவதை எழுதி வைக்கவும், அது விரைவில் உண்மையாகும். கடந்த ஆண்டு நீங்கள் சாதித்தவற்றைப் பற்றி பெருமை கொள்ளுங்கள். உங்களுக்கு இன்று கொஞ்சம் நெருக்கடியான நாள்., ஆனால் நேரமின்மை காரணமாக வேலையின் தரத்தை குறைத்துவிடாதீர்கள்.

அதிர்ஷ்டத்தின் அடையாளம் – ஒரு பெயிண்ட் செய்யப்பட்ட பைப்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி