Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்...

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்...

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்.

மேஷம்:

இன்று உங்களுக்கு எளிமையான பணிகள் கூட கடினமானதாக தோன்றலாம். அந்த பணிகளை செய்து முடிக்க உங்களை நீங்களே ஊக்கப்படுத்த வேண்டியிருக்கும். நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தால், விரைவில் நேர்மறையான போக்கு தோன்றக்கூடும். சிந்தித்து திட்டமிட வேண்டிய நாள் இது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கற்பூர டிஃப்பியூசர்

ரிஷபம்:

உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது ஒரு நல்ல உதவியைக் கண்டுபிடிப்பது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கான காலக்கெடு உங்களை நெருங்கலாம். சஸ்பென்ஸ் விஷயங்களால் சூழப்பட்ட அனைத்திற்கும் இன்று தெளிவான காணோட்டம் கிடைக்கும். உங்கள் எக்ஸுடன் மீண்டும் இணைவதை நீங்கள் தவிர்க்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கருப்பு படிகம்

மிதுனம்:

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஒரு சில விஷயங்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வழியில் நடக்க வேண்டும் என்றிருந்தால் அதனை மாற்ற முடியாது. வேலையில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக செயல்திறனை வழங்குவீர்கள். ஒரு குறிப்பிட்ட சலுகை உங்களை மறுபரிசீலனை செய்ய வைக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு துணி வலை

கடகம்:

நீங்கள் இன்று நடுநிலையாக இருக்க வேண்டியது அவசியம். இன்று மற்றவருக்கான வாய்ப்பு உங்கள் முடிவை பொறுத்து அமையும். சாலையில் செல்லும்போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. உங்கள் தவறை நீங்கள் ஒப்புக் கொள்வது அவசியம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி கம்பி

சிம்மம்:

நீங்கள் சில விஷயங்களுக்காக காத்திருக்கும் போது பொறுமையாக இருப்பது மிக அவசியம். பணியிடத்தில் உங்களது வேலை திறமை பற்றி மற்றவர்கள் விவாதிக்கலாம். ஒரு புதிய யோசனை இன்று உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். வீட்டில் சிலரின் எதிர்பாராத வருகை உங்களை உற்சாகப்படுத்தலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுக்கு பிடித்த விளையாட்டு

கன்னி:

நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், அதை இப்போது திருப்பித் தருவீர்கள். நெருங்கிய நண்பரின் நம்பிக்கையை தற்காலிகமாக இழக்க நேரிடும். திடீர் ஷாப்பிங் மூலம் உங்கள் நாள் பிரகாசமாகலாம். ஒரு புதிய வேலை உங்களை இன்று சுறுசுறுப்பாக வைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியான் அடையாளம்

துலாம்:

இழந்த வாய்ப்பு வேறு வடிவத்தில் உங்களுக்கே திரும்பிவரலாம். தேவைப்படும் சக ஊழியருக்கு உதவி செய்வது உங்களுக்கு அழுத்தமாக இருக்கலாம். நிலுவையில் உள்ள ஒரு பணி இன்று முடியும் தருவாயில் உள்ளது. வார இறுதி பயணம் தொடர்பான திட்டம் விரைவில் வரவுள்ளதாக உங்கள் நட்சத்திரங்கள் குறிப்பிடுகின்றன.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுடைய பழைய புகைப்படம்

விருச்சிகம்:

வடிவமைப்பது உங்கள் ஆர்வமாக இருந்தால், அதை இப்போதே தொடர்வது நல்லது. உங்களையே நீங்கள் மறக்கும் அளவுக்கு ஏதேனும் விஷயங்களில் ஈடுபடலாம். ஆனால் அது உங்களில் ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்தும். முடிவெடுக்கும் விஷயங்களில் உங்கள் உள்ளார்ந்த உள்ளுணர்வைப் பின்பற்றுவது சிறந்தது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு நிற ஹெட்ஃபோன்கள்

தனுசு:

அடுத்த வரவிருக்கும் வாய்ப்பிற்கு நீங்கள் பதிவு செய்ய நினைப்பது சரியான முடிவாக இருக்கும். நீங்கள் இப்போது மேம்பட்ட நிதி நிலையில் இருப்பதை உணரலாம். சில தடைப்பட்ட பணப் பிரச்சினைகள் இப்போது உங்களுக்குத் தீரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கட்டுரை

மகரம்:

நீங்கள் கண் சிமிட்டும் நேரம் கூட எதையாவது இழக்கலாம், விழிப்புடன் இருக்கவும். உங்களைச் சுற்றியுள்ள நிகழ்வுகளைப் நீங்கள் கண்திறந்து பார்ப்பது அவசியம். கடந்த காலத்தின் ஒரு சம்பவம் பற்றிய காரணம் குறித்து நீங்கள் தேடலாம். உங்கள் உடன்பிறந்த சகோதரருக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு லாவெண்டர் தூபம்

கும்பம்:

உங்கள் வாழ்க்கையின் முக்கிய நபர் ஒரு சில காரணங்களுக்காக உங்களிடம் இருந்து சற்று ஒதுங்கி இருக்கலாம். உங்களின் உத்வேக வார்த்தைகள் மற்றும் ஆதரவை தேடி உங்கள் நண்பர் உங்களை அணுகலாம். சில காரியங்களில் தைரியமாக நீங்கள் இறங்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு உப்பு விளக்கு

மீனம்:

உங்களைப் போற்றும் ஒருவர் தங்கள் பிரச்சினைகளுக்கு சில வழிகாட்டுதலை பெற உங்களை நாடுவார். நீங்கள் ஒரு பிணைப்பை உருவாக்க இது ஒரு நல்ல நேரம். ஆச்சர்யமான விஷயங்கள் உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சந்திரன்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி