Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய நாள்... ( பிப்ரவரி 10, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய நாள்... ( பிப்ரவரி 10, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | ஏதாவது ஒரு விஷயம் உங்கள் கவனத்தை திசை திருப்பலாம். ஒரு புதிய வருமான ஆதாரத்தை உருவாக்கும் யோசனையை உங்கள் மனைவி வழங்குவார்.

மேஷம்:

இன்று உங்களை வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய நாள். மேலும், புதிய விஷயங்களை பரிசோதிக்க வேண்டிய நாள். இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாள். தாயின் உடல்நிலையில் கொஞ்சம் கவனம் தேவை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விளக்கு

ரிஷபம்:

கடந்த காலத்தில் நடந்த ஒரு தருணத்தை நினைத்து பார்க்க இன்று உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் அதிக வேலைப்பளு இருக்கும். குடும்பத்தில் திருமண தொடர்பான பேச்சுவார்த்தை இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இறகு

மிதுனம்:

ஏதாவது ஒரு விஷயம் நடப்பதற்கு தாமதமானால் அது நடக்காது என்று அர்த்தமில்லை. நீங்கள் முயற்சி செய்து பொறுமையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சில விமர்சனங்களை நீங்கள் பெறலாம். ஏதேனும் பயணத்தைத் திட்டமிட்டால் அது தாமதமாகலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஹெலிகாப்டர்

கடகம்:

உங்கள் மீது சுமத்தப்படும் பொறுப்புகள் கடினமான காலக்கெடுவை உங்களுக்கு நினைவூட்டலாம். உங்கள் வேலையை நீங்கள் வேகப்படுத்த வேண்டியிருக்கும். ஒரு புதிய வாய்ப்பு, வேலை செய்வதற்கான புதிய ஆர்வத்தை உருவாக்கலாம். இருப்பினும் இன்று நீங்கள் ஓய்வு எடுப்பது முக்கியம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளை ரோஜா

சிம்மம்:

நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தை தடுக்க முயற்சிப்பதை விட அதனை விட்டுவிட வேண்டியது அவசியம். உங்கள் கோபத்தை அதிகமாக வெளிப்படுத்தினால் அது உங்கள் மன அமைதியை கெடுக்கும். ஒரு நட்பு உறவு சந்தோஷத்தை வழங்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நோட்பேட்

கன்னி:

இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் நீண்ட கால திட்டம் இப்போது செயல்படுத்தப்படும். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளைப் பற்றி நன்கு சிந்திப்பது அவசியம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஹாலோகிராம்

துலாம்:

ஏதாவது ஒரு விஷயம் உங்கள் கவனத்தை திசை திருப்பலாம். ஒரு புதிய வருமான ஆதாரத்தை உருவாக்கும் யோசனையை உங்கள் மனைவி வழங்குவார். நீங்கள் ஒரு பயணத்திற்கு திட்டமிட்டால், அது தற்போதைக்கு நிறைவேற்றப்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காலை சூரிய ஒளி

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட நாள். இன்று திட்டமிடப்பட்ட உங்களது அனைத்து பணிகளும் நிறைவேறும். பங்கு நிதிகளும் உங்களுக்கு சாதகமாக அமையும். இன்றைய நாள் உங்களுடையது ஆகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மெழுகுவர்த்தி

தனுசு:

ஏதேனும் சிந்தனை உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கலாம். மிக முக்கியமான ஒன்றைச் செய்ய உங்களுக்கு தைரியம் இல்லாமல் இருக்கும். இன்று ஒரு பரபரப்பான நாளாக இருக்கும். அதிலிருந்து நீங்கள் சீக்கிரம் வெளியேற முடியாமல் போகலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மண் பானை

மேலும் படிக்க... Astrology: காதலர்தினத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி வரும்

மகரம்:

வெவ்வேறு பரிமாணங்களில் ஆச்சரியங்கள் உங்களை வந்து சேரும். உங்கள் மனப்பான்மையால் யாராவது காயப்படக்கூடும் என்பதால் உங்கள் கோபத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியிருக்கலாம். உங்கள் பொருட்களை மிகுந்த கவனத்துடன் பாதுகாத்துக்கொள்ளவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி குடுவை

கும்பம்:

தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தபடி வராமல் போகலாம். ஒரு சிறிய சாதுர்யமும் ராஜதந்திரமும் உங்கள் வேலையை எளிதில் செய்ய உதவும். இது ஒரு சோர்வான நாளாக இருக்கலாம். ஆனால் நாளின் முடிவு நல்லவிதமாக இருக்கும். அவசரமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மிட்டாய் ஜாடி

மீனம்:

உங்களுக்கு நன்கு அறிமுகமானவர் மேல் உங்களுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்படலாம். எதையும் மனதிற்குள்ளே வைத்து சிந்தித்து கொண்டுருப்பது பயனுள்ளதாக இருக்காது. வேலையில் இருக்கும் ஒருவர் உங்கள் மீது குற்றம் சுமத்தலாம். இன்று உங்களுக்கு சற்று கடினமான நாளாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிவான வானம்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி