Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு தவறவிட்ட வாய்ப்பு மீண்டும் கிடைக்கும்... (பிப்ரவரி 04,2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு தவறவிட்ட வாய்ப்பு மீண்டும் கிடைக்கும்... (பிப்ரவரி 04,2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan | இன்று உங்கள் நம்பிக்கைக்கு மாறாக எதையாவது செய்ய வேண்டி வரலாம். ஒரு சக ஊழியர் நல்ல நண்பராக மாறலாம்.

மேஷம்:

குடும்பம் அல்லது தனிப்பட்ட உறவுகளில் கவனம் செலுத்த வேண்டியது இப்போது அவசியம். கடந்த காலத்தில் முடியாத விஷயம் இப்போது ஒரு தீர்வை நோக்கி நகரலாம். புதிய சுறுசுறுப்புடன் வழக்கமான வேலைகளில் உங்களைத் ஈடுபடுத்த வேண்டிய நாள் இது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு படிக வளையல்

ரிஷபம்:

இந்த புதிய நாள் உங்களுக்கு ஒரு புதிய சவாலை முன்வைக்கின்றன. நீங்கள் இப்போதைக்கு வீட்டு விவகாரங்களில் ஈடுபடுவதை தவிர்க்க விரும்புவீர்கள். இன்று விசேஷமான ஒருவருடனான சந்திப்பு ஏற்படும் என்று உங்கள் நட்சத்திரங்கள் குறிப்பிடுகின்றன. நீங்கள் ஒரு திசையில் பயணிக்கிறீர்கள் என்றால் அதை நோக்கி செல்லுங்கள், திரும்பிப் பார்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நம்பர் பிளேட்

மிதுனம்:

ஒரு சிலர் உங்கள் பதவிக்கு வரவேண்டும் வேண்டும் என்று விரும்புகிறார்கள். மற்றவர்களுடன் உங்கள் திட்டத்தைப் பற்றி விவாதிக்கும் முன் நீங்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக பணியிடத்தில். தாயின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். அவர்களுக்கு மருத்துவ கவனிப்பு தேவை.

உங்களை ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இரண்டு சிட்டுக்குருவிகள்

கடகம்:

உங்கள் பயணம் ஒத்திவைக்கப்பட்டால், நீங்கள் அதை நல்லதுக்கே என கருத வேண்டும். ஒரு சில உறவினர்கள் திடீரென உங்கள் வீட்டிற்கு வருகை தரலாம். அலுவலக வேலை இன்று பரபரப்பாகவும் அதிக பளு கொண்டதாகவும் இருக்கும். உடல் செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புத்தம் புதிய வண்டி

சிம்மம்:

உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களை புண்படுத்த வேண்டி வரலாம். அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். ஒரு நல்ல நிதி இயக்கம் உங்களை எதிர்கால முதலீடு பற்றி சிந்திக்க வைக்கும். உங்களுக்கு தோல் பிரச்சனைகள் இருந்தால் அதை சரிசெய்ய வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புத்தர் சிலை

கன்னி:

உங்களின் புதிய வேலை பற்றிய தெளிவான அறிகுறிகள் இப்போது தெரியும். உங்களிடம் இருந்து ஏதாவது கடன் வாங்கியிருக்கும் உங்கள் நண்பர், அதை திரும்ப செலுத்துவது பற்றி இப்போது யோசிக்கலாம். இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணம் மகிழ்ச்சியானதாக அமையும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரிய அஸ்தமனம்

துலாம்:

பல எண்ணங்கள் உங்கள் மனதைக் இன்று குழப்பும். அந்த குழப்பத்தில் இருந்து மீண்டு தெளிவான முடிவெடுப்பது இன்று கடினமாக இருக்கலாம். எனவே எதிலும் பொறுமையாக யோசித்து முடிவெடுங்கள். நீங்கள் இன்று தாராளமாக உணரலாம் மற்றும் சுய, வீடு அல்லது குடும்பத்திற்காக நேரம், பணம் போன்றவற்றை செலவழிப்பதில் ஈடுபடலாம். ஒரு புதிய யோசனை உங்கள் நாளை பூர்த்தி செய்யும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தெளிவான படிகம்

விருச்சிகம்:

தவறவிட்ட வாய்ப்பு எப்படியாவது மீண்டும் உங்களுக்கே கிடைக்கும். கடந்த சில நாட்களாக இருந்த மனப் போராட்டத்திற்கு இன்று ஒரு விரிவான தீர்வைக் காணலாம். ஒரு முக்கியமான சந்திப்பு உங்களுக்கு வெற்றிகரமாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஜோடி காலணிகள்

தனுசு:

உங்களிடம் போலியாக பழகும் நபர்களிடமிருந்து சிறிது விலகி இருப்பது நல்லது. அவர்கள் உங்கள் முதுகுக்குப் பின்னால் பேசிக் கொண்டிருக்கலாம். உங்கள் கடந்தகால முயற்சிகளுக்கு நிர்வாகத்திடம் இருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீல கல்

மகரம்:

நீங்கள் உண்மையாக இருப்பது ஒருவரின் கவனத்தை ஈர்க்கலாம். புதிய பணிகள் உங்களுக்கு வழங்கப்படலாம். உங்களது பழைய நலம் விரும்பி உங்களை இன்று தொடர்புகொள்வார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஸ்டிக்கி நோட்

கும்பம்:

உங்கள் நட்சத்திரங்கள் இன்று உங்களுக்கு வெற்றியை தேடித்தரும். எனவே உங்கள் மனிதில் நினைத்த காரியத்தை திட்டமிட்டு செய்யுங்கள். படிப்படியான முன்னேற்றம் வெற்றிக்கு உதவும். நீங்கள் இழந்த ஒன்றைப் பற்றிய செய்தி உங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழுப்பு நிற பணப்பை

மீனம்:

இன்று உங்கள் நம்பிக்கைக்கு மாறாக எதையாவது செய்ய வேண்டி வரலாம். ஒரு சக ஊழியர் நல்ல நண்பராக மாறலாம். நீங்கள் ஒரு புதிய ஆரோக்கிய வழக்கத்தைத் திட்டமிட்டிருந்தால், இப்போது அதனை பின்பற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஆவணங்கள், பத்திரங்களில் கவனமாக கையொப்பமிடுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழ கூடை

மேலும் படிக்க...  Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 04)
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி