Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்றைய நாள் மிகவும் உற்சாகமான நாளாக இருக்கும்... (மார்ச் 23, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்றைய நாள் மிகவும் உற்சாகமான நாளாக இருக்கும்... (மார்ச் 23, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan | நீங்கள் பல நாட்களாக ஆவலுடன் காத்திருந்த காரியங்கள் கைகூடும் நாள் இது.

மேஷம்:

இதுவரை நீங்கள் வெளிப்படுத்த முடியாமல் உள்ளேயே வைத்து திணறி கொண்டிருந்த திறமையை வெளிப்படுத்த இன்று சிறப்பானதொரு நாளாக அமையும். இதன் மூலம் உங்களுக்கென்று சில ரசிகர்கள் அல்லது பார்வையாளர்களை உருவாக்கி கொள்வீர்கள். இன்று நீங்கள் நீண்ட கால முதலீட்டை திட்டமிடலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஆலமரம்

ரிஷபம்:

ஏற்கனவே உங்கள் மீதான பிம்பம் இது தான் என்று முத்திரை குத்தப்பட்ட இடத்தில் நீங்கள் வேற மாறி என்ற புதிய பிம்பத்தை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் இன்றைய நாளில் நீங்கள் செய்யும் முயற்சிகள் உங்களது வேறு பரிணாமத்தை பிறருக்கு காட்ட உதவ கூடும். இந்த நாளில் நீங்கள் மிகவும் உத்வேகத்துடன் இருப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சமையலுக்கு பயன்டுத்தப்படும் மஞ்சள்

மிதுனம்:

பணியிடத்தில் உங்களை பற்றிய ஒரு மாயை உருவாக கூடும். அலுவலகத்தில் அனைவரின் நம்பிக்கையையும் பெற நீங்கள் இன்னும் முயற்சி செய்ய வேண்டும். உடல்நலப் பிரச்சினைகள் வரலாம் என்பதால் இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிலிக்கான் மோல்டு

கடகம்:

இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் உற்சகமான நாளாக அமைய போகிறது. உங்கள் எனர்ஜி மற்றும் உற்சாகம் காரணமாக உங்களைச் சந்திக்கும் பெரும்பாலானவர்களை மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீங்கள் யாரிடமாவது எதையாவது மறைக்க முயற்சிக்க நினைக்கும் ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. உங்களது நீண்ட நாள் பிரச்சனைக்கு புதிய தீர்வு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கார்னிலியன் கிரிஸ்டல்

சிம்மம்:

இன்றைய நாளில் செழிப்பாக இருபத்திற்கான நல்ல அறிகுறிகள் உங்களைச் சுற்றி இருக்கும். இதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள். உங்கள் அருகில் இல்லாத நபர்களை பற்றிய வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். ஆன்மீக உணர்வு அதிகரித்து காணப்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முத்துச்சரம்

கன்னி:

இன்று நீங்கள் அடிக்கடி குழப்பமடைவீர்கள். தெளிவாக முடிவெடுக்க முடியாமல் திணறக்கூடும். குழப்பமான விவகாரங்களில் சரியான விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பது உங்களது வாழ்வின் நீண்ட கால முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும் என்பதால் கவனமுடன் முடிவெடுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய கேஜெட்

துலாம்:

நீண்ட கால பிரச்சனைக்ளுக்கு தீர்வு வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதிரடியாக செயல்பட ஏதுவான நாள். குறிப்பாக இன்று குடும்ப உறுப்பினர்கள் ஏதவது அறிவுரை சொன்னால் அதை காத்து கொடுத்து கேட்டு அதன் படி நடக்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் உங்களுக்கு நம்பிக்கையான ஆட்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் அறிவுரை இன்று மதிப்பு வாய்ந்ததாக இருக்க போகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிம்னி

விருச்சிகம்:

உங்களுக்கு அதிக வேலைப்பளு இருக்கும் என்பதால் இன்று உங்களுக்கு ஒரு பிஸியான நாளாக அமையும். உங்கள் மீதான எதிர்பார்ப்புகள் கூடும். உடல்நலத்தை பொறுத்தவரை செரிமான கோளாறு ஏற்படலாம் என்பதால் சாப்பிடும் உணவில் கவனமுடன் இருங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய ஸ்டோரி

தனுசு:

இன்று வேறொருவரின் இழப்பு உங்களுக்கு வாய்ப்பாக அமைய கூடும். எனவே வரும் வாய்ப்பை நழுவ விடாமல் கெட்டியாக பிடித்து கொள்ள பாருங்கள். சமீபத்தில் உங்களுக்கு கிடைத்த நட்பு இன்றைய நாளில் மிகவும் பலனளிக்கும் உறவாக மாறும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்க கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விஷன் போர்டு

மகரம்:

நீங்கள் எடுக்க போகும் எமோஷனல் முடிவுகளை விட ப்ராக்டிக்கல் முடிவுகள் இன்று உங்களுக்கு அதிக பலனளிக்கும். நீங்கள் கடை உரிமையாளராகவோ அல்லது சிறு வணிகத் தொழில்முனைவோராக இருந்தால், உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த சில புதுமையான யோசனைகளை பெறுவீர்கள். ஏதேனும் தேர்வெழுதி அதன் ரிசல்ட் இன்று வந்தால் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான முடிவை பெறுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டிஜிட்டல் கையெழுத்து

கும்பம்:

உங்களது லட்சிய கனவை நீங்கள் அடைந்து விட்டீர்கள் என்பதற்காக அதையே நினைத்து பெருமிதம் கொண்டிருக்காமல், அடுத்த கட்டத்தை நோக்கி நகர உங்களுக்கு முன்னால் உள்ள செயல்கள் மீது ஈடுபாடு காட்டுவது சிறந்தது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு லிமிட்டட் எடிஷன் ஆர்டிகிள்

மீனம்:

நீங்கள் பல நாட்களாக ஆவலுடன் காத்திருந்த காரியங்கள் கைகூடும் நாள் இது. காலம் கடந்து கிடைக்கும் வாய்ப்பு என்றாலும் நீங்கள் அந்த வாய்ப்பை புதிதாக தொடங்கி, சரியாக செய்து முடித்தால் நல்ல பலன்களை பெறலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தங்க சங்கிலி
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி