Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு உங்கள் பணிச்சுமை குறையும்...(மார்ச்19,2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு உங்கள் பணிச்சுமை குறையும்...(மார்ச்19,2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan | ஒரு நல்ல நண்பருக்கு குடும்ப விஷயங்களில் உதவி தேவைப்படலாம்.


  மேஷம் 


  சோம்பல் உணர்வு மீண்டும் வந்துவிட்டதால், தேவையில்லாமல் வேலையை முடிக்காமல் நீடிக்கலாம். நீங்கள் முறையற்ற ஷாப்பிங் அல்லது விண்டோ ஷாப்பிங்கிலும் நிறையே நேரம் செலவிடலாம். ஒட்டுமொத்தமாக, உங்கள் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை, விலகுவதைத் உணர்வீர்கள்.


  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ப்ரிசம்


  ரிஷபம்


  ஸ்பெஷலான மற்றும் நெருங்கிய உறவுகளுக்கு நீங்கள் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். உங்கள் கணவன்/மனைவி அந்த முயற்சிகளை அடிக்கடி கேட்கவும் பார்க்கவும் வேண்டியிருக்கலாம். சில நேரங்களில் நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு எதிராக இருந்தால், அதிலிருந்து விலகி இருப்பது நல்லது. வேலை நேரத்தை அதிகம் பயன்படுத்த முயற்சிக்கவும்.


  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பச்சை நிற பாட்டில்


  மிதுனம்


  ஒரு புதிய நபரின் வரவு உங்கள் பணிச்சுமையைக் குறைக்கலாம். இது ஒரு நல்ல செய்தி, ஏனென்றால் இது வேகத்துடன் உங்களுக்கான இடத்தையும் தருகிறது. சரியான நேரத்தில் உங்களுக்கான நினைவூட்டலைத் திட்டமிடுவது, உங்களை கூடுதல் வேலையிலிருந்து காப்பாற்றும். விளையாட்டாக சில நடவடிக்கைகளை மேற்கொள்வது அதிக ஆற்றலைக் கொண்டு வரலாம்.


  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீரூற்று


  கடகம்


  மிகவும் பரபரப்பான நேரங்களிலும் உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பது சமநிலையைக் கொண்டு வந்து உங்களை நிலைப்படுத்தும். ஆரோக்கிய சம்மந்தப்பட்ட ஒரு நடவடிக்கை, ஆன்மீகத்தில் உங்களுடைய ஆர்வத்தை விவரிக்கும். தலைமை ஏற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பு விரைவில் வரும்.


  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஆன்டிக் கடிகாரம்


  சிம்மம்


  நீங்கள் முன்பு யாரையாவது புண்படுத்தியிருந்தால், அவர்கள் உங்களை அல்லது உங்கள் செயல்களை மன்னித்திருக்க மாட்டார்கள். மாற்றங்களை ஏற்படுத்த கூடுதல் முயற்சி தேவை. இப்போது சமரசம் செய்வது இது ஒரு நல்ல நேரமாக இருக்கலாம். நெருங்கிய நண்பர்களுடன் ஒரு சிறிய பயணத்தைத் திட்டமிடலாம்.


  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தெளிவான வானம்


  கன்னி


  உங்கள் வேலையில் உங்களுடைய திறனை கவனித்து, பிரபலமான ஒருவர் உங்களை அணுகலாம். அது ஒரு குறிப்பு மூலம் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் வேலையைப் பற்றி நீங்கள் சந்தேகப்படத் தொடங்கிய ஒரு கட்டத்தில் இருந்தே இது தொடர்ந்து வருகிறது. நீங்கள் உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்.


  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வரிசையில் உள்ள நம்பர்கள்


  துலாம்


  ஒரு சிறிய சூழ்நிலையை நீங்கள் சரியாக நிர்வகிக்காததால், பணியிடத்தில் அமைதியான சூழல் பாதிக்கப்படலாம். இதைத் தவிர, நீங்கள் கூடுதல் வேலையை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். பொழுதுபோக்கிற்கான புதிய விஷயம் ஒன்றில் உங்கள் கவனம் திசை திரும்பும். உங்களின் பழைய நண்பர் அறிவிப்பு இல்லாமல் உங்களை சந்திக்க வருவார் என்று எதிர்பார்க்கலாம்.


  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பட்டு ஸ்கார்ஃப்


  விருச்சிகம்


  வேலையில் இப்போது உருவாகும் சூழ்நிலையை கவனத்தில் கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய ஈடுபாடு பின்னாளில் பயனுள்ளதாக இருக்கும். அக்கம்பக்கத்தனரால் உங்களுக்கு குழப்பம் இடையூறுகளை ஏற்படலாம். காதல் விஷயங்களில் முன்னேற்றம் காணுவீர்கள்.


  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு வலை


  தனுசு


  உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. தொடக்கத்தில் மெதுவான மற்றும் சலிப்பான நாளாக இருந்து, விரைவில் வேறுவிதமாக மாறும். சோர்வாக இருந்தால், ஓய்வு எடுக்கலாம். நீங்கள் தொலைதூர உறவு அல்லது நட்புடன் உரையாடல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.


  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பூக்கள் வடிவம்


  மகரம்


  பார்ட்னர்ஷிப் அல்லது மற்றவர்களுடன் ஒத்துழைப்பின் மூலம் புதிய வாய்ப்பிற்கு நீங்கள் தயாராகலாம். உங்கள் பாதை தெளிவாகவும் நேராகவும் தோன்றினாலும், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கீழ் பணிபுரிபவர் வழிகாட்டுதல்களின் படி நடக்காமல் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது.


  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கான்வாஸ் ஷூ


  கும்பம்


  நேரடியாக விஷயங்களை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருந்தால் இது மிகவும் எளிதான நாள். சோர்வாக உணருவது இயல்பானது, சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பணியை மதிப்பிடுவதற்கு முன் உங்கள் உண்மைகள் சரியானவை என்பதை உறுதிப்படுத்தவும்.


  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீர் நிலை


  மீனம்


  ஒரு நல்ல நண்பருக்கு குடும்ப விஷயங்களில் உதவி தேவைப்படலாம். உங்களுக்கு அதிகம் தெரியாத யாரையும் அதிகம் விமர்சிக்காமல் முயற்சி செய்யுங்கள். சேமித்து வைத்த பணம் இப்போது உதவியாக இருக்கும். சரியான முடிவெடுப்பதற்கு உங்களுக்கு சில பயிற்சிகள் தேவைப்படலாம்.


  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய வாஸ்  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Oracle Speaks

  அடுத்த செய்தி