Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இந்த கோடையில் திருமணம் நடக்கும்.. (ஏப்ரல் 07, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இந்த கோடையில் திருமணம் நடக்கும்.. (ஏப்ரல் 07, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | உங்களைப் பாதிக்கும் சூழ்நிலைகளை சரிசெய்ய முயற்சி செய்வர்கள். அதற்கு முன்னர், நீங்கள் உங்களைப் பற்றிய சில விஷயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

மேஷம் :

உங்களுக்கு யாராவது மன வேதனை அல்லது மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தால், அவரை நீங்கள் தைரியமாக எதிர்கொள்ள வசதியான நிலையில் இருப்பார்கள். புதிதாக ஏதேனும் ஒன்றைத் தொடங்கும் போது மெதுவாக தொடங்குங்கள். விரைவில் நம்பிக்கைக்குரியதாக மாறும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – இலவங்கப்பட்டை

ரிஷபம் :

இதுவரை இருந்த தற்காலிக உறவுகள் இப்போது விலகிச் சென்று விடும். இனி வாழ்வில் தடையின்றி முன்னேறிச் செல்ல வேண்டிய நேரம். கடந்த கால பிரச்சனைகள் எல்லாவற்றையும் மறந்து, புதிதாக தொடங்குங்கள். அது உங்கள் வாழ்க்கையை பாதிக்காது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கூடாரம்

மிதுனம் :

நிர்வாகத்தில் மூத்த அதிகாரியுடன் உங்களின் உரையாடல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் தொழில் வாழ்க்கையை பாதிக்கக் கூடிய உண்மைகளை நீங்கள் இதுவரை அறியாமல் இருக்கிறீர்கள். ஒரு மோசமான பழக்கம் உங்களுடைய தினசரி வாழ்க்கையை பாதிக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வானவில்

கடகம் :

இப்போது கொஞ்சம் சவாலான காலம் தான். நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பது விரைவில் மாற்றத்தை உண்டாக்கும். ஒரு காதல் ப்ரோபோசல் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். எதிர்காலம் சார்ந்த சரியில்லாத முடிவுகளை எடுப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஏரி

சிம்மம் :

நீங்கள் ஏதேனும் ஒரு போட்டித் தேர்வு அல்லது நுழைவுத் தேர்வுக்கு காத்திருந்தால், முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த பதட்ட உணர்வும் நீங்கும். வெளி உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஃபெர்ரி படகு

கன்னி :

வரும் வாரத்தைப் பற்றி உங்களுக்கு பல திட்டங்கள் இருக்கும். மேலும், விரைவில்ஒரு பெரிய நிகழ்வை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள். இவை அனைத்தும் பெரிய அளவில் ஒன்று சேரும் வாய்ப்பு உள்ளது. உங்கள் துறையில் நிபுணத்துவம் பெற்ற புதிய வாய்ப்பு உங்களுக்கு விரைவில் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தலைப்பாகை

துலாம் :

வாக்குறுதிகளை அளிக்கும் பலர், அதன்படி நடக்க மாட்டார்கள். இதற்காக நீங்கள் அவர்களிடம் விவாதிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. உங்களுக்கு சாதகமாக விஷயங்கள் இல்லை என்றால், அதற்கு வேறு வழிமுறையை பின்பற்றலாம். தற்போது பண வரவு ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீல டார்மலின்

விருச்சிகம் :

நீங்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் வேலை செய்தால், உங்களுக்குத் தேவையான நிதி கிடைக்கும். சர்வதேச அளவில் வளர்ச்சி பெறும் வாய்ப்புள்ளது. நாஸ்டால்ஜிக் நினைவுகளை மீட்டெடுக்க பழைய நண்பர் உங்களை சந்திக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சிப்பி

தனுசு :

உங்கள் குடும்பம் அல்லது நெருங்கிய உறவினரிடம் இருந்து, உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. திருமணம் செய்ய இருப்பவர்களுக்கு கோடைகால திருமணம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எந்த நாளாக இருந்தாலும், நீங்கள் நேர்த்தியாக இருக்க விரும்புவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஃபேஷன் ஃப்ரூட்

மகரம் :

உங்களின் நீண்ட கால நண்பர்கள், புதிய பார்ட்னர்ஷிப் அல்லது புதிய வணிகத்தில் உங்களை சேர்க்க முயற்சி செய்வார்கள். இவை எல்லாமே, சாலைப் பயணத்தில் நடக்கும் வாய்ப்பு உள்ளது. அரசாங்க அதிகாரிகளுக்கு இப்போது நேரம் மிகவும் சவாலாக இருக்கும். மாணவர்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கிளியர் குவார்ட்ஸ்

கும்பம் :

உங்கள் மீதான குற்றச்சாட்டுக்காக நீங்கள் போராட வேண்டியிருக்கும். மக்களைப் பற்றிய உங்கள் பார்வை நேர்மறையாக மாறுவதன் சாதகமாக மாறலாம். குடும்பத்தாரின் ஆதரவு கூடும். அதிகமாக செலவழிக்கும் பழக்கத்தை உடனே கட்டுப்படுத்த வேண்டும். அதே போல, சேமிக்கும் பழக்கத்தைத் தொடரலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மல்லிகை

மீனம் :

உங்களைப் பாதிக்கும் சூழ்நிலைகளை சரிசெய்ய முயற்சி செய்வர்கள். அதற்கு முன்னர், நீங்கள் உங்களைப் பற்றிய சில விஷயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த நபர் உங்களுக்கு ஒரு நல்ல ஆலோசனையை வழங்குவர். எல்லோரிடமும் எல்லாவற்றையும் விவாதிக்க வேண்டாம், ரகசியங்கள் பாதுகாக்கப்படாது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கூழாங்கல்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி