Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு நீண்ட நாளாக இருந்த கவலை நீங்கும் நாள்... (ஏப்ரல் 01, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு நீண்ட நாளாக இருந்த கவலை நீங்கும் நாள்... (ஏப்ரல் 01, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | நீங்கள் யாரையாவது நேசித்தால், மறைந்திருக்கும் உணர்ச்சியை அடக்காதீர்கள். வெளிப்படுத்தாமல் இருப்பதை விட, சொல்லி நிராகரிப்பைப் பெறுவது நல்லது...

மேஷம்

இந்த நாள் சிறந்த உங்களின், நேர்மறை அதிர்வுகள் மற்றும் மற்றவர்களுடன் சுமூகமாக பழகுவதைக் கொண்டு வருகிறது. ஆனால், நீங்கள் ஓய்வு எடுக்கும் மனநிலையில் இருக்கிறீர்கள். உங்கள் விருப்பங்களை மதிப்பாய்வு செய்து, அதன் பின் முடிவெடுங்கள். உங்கள் வாழ்க்கைத்துணை மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறார் என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – இசைக்கருவி

ரிஷபம்

குடும்ப உறுப்பினர் அல்லது உறவினரிடமிருந்து வரும் செய்தி மனதில் ஒரு சில குழப்பங்களை ஏற்படுத்தலாம். தற்காலிகமானது என்று நீங்கள் நினைக்கும் ஒரு பணியை செய்ய நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் ஆகலாம். நீங்கள் ஒரு வழக்கத்தை பின்பற்ற முடியும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மஞ்சள் ஸஃபையர்

மிதுனம்

நீங்கள் ஒரு தற்காலிக மாற்றத்தை சந்திக்கலாம், அதனால் பெரும்பாலும் உணர்ச்சிவசப்படுவீர்கள். எனவே, உங்கள் கவலை மற்றும் பதில்களை உங்களுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும். இந்த நாள் உங்களை முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளும், ஆனால் நீங்கள் அதை இப்போதைக்கு ஒத்திவைக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தெளிவான கிறிஸ்டல்

கடகம்

ஒரு குடும்பம் ஒன்று கூடுவது அல்லது வெளிநாட்டிலிருந்து யாராவது வருகை தருவது என்பது இன்று உங்கள் மாலைக்கான திட்டமாக இருக்கலாம். அதற்கு முன் உங்கள் பணிகளை முடிக்க வழக்கத்தை விட அதிக ஆற்றல் தேவைப்படும். வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் உங்கள் மனம் தடுமாறக்கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஃப்ளோரல் பேட்டர்ன்

சிம்மம்

உங்களுக்கான விஷயங்களைச் செய்து கொள்ள, உங்கள் தேவைகளை எளிதாக்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தை சிக்கலாக்கி, பின்னர் அந்த விஷயங்களைத் தீர்க்கும் பழக்கம் கொண்டுள்ளீர்கள். உடனடி வேலை விஷயங்களில் பயனுள்ளதாக இருக்கும். ஒரு உண்மையான நபரை நீங்கள் விரைவில் சந்திக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – செர்ரி

கன்னி

நீங்கள் தேவையில்லாமல் எதையாவது தாமதப்படுத்தினால், அதைக் கணக்கிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் உள்ளது. உங்களுக்கான ஏதோ ஒன்று உங்களை அடைய முயற்சிக்கிறது, எனவே நீங்கள் பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத ஆசீர்வாதம் உங்கள் நாளை அழகாக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஆற்றங்கரை

துலாம்

நீங்கள் விருந்தோம்பல் வழங்கவும், அதற்கான பெரிய ஏற்பாடுகளை செய்யும் மனநிலையில் இருக்கிறீர்கள். உங்களுக்காக ஒரு கொண்டாட்டம் காத்திருக்கிறது. சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், லாபகரமான ஒப்பந்தத்தை எதிர்பார்க்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பழக்கூடை

விருச்சிகம்

உங்களின் ஆளுமை மூலம் ஒரு நபரை நீங்கள் எளிதாக காந்தம் போல கவர்ந்திழுக்க முடியும், உண்மையில் பல வழிகள் உள்ளன. உங்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தாலும், மற்ற நபரைப் பற்றி நீங்கள் நிறைய தகவல்களை எளிதாகப் பெறுவீர்கள். திடீர் திருப்பத்தை எதிர்பார்க்கலாம். அது சாதமாகவும் இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட்

தனுசு

கடந்த சில மாதங்களில் உங்களுக்கு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம், அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த முறையில் உங்கள் வேலை மதிப்பீடு செய்யப்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கிளி

மகரம்

இந்த வாரம் குடும்பப் பிரச்சனைகள் தலைதூக்கும். பூனைக்கு யாரும் மணிகட்ட விரும்பாததால், சில காலமாக மூடிமறைக்கப்பட்ட ஒரு பிரச்சனையை நீங்கள் தான் சமாளிக்க வேண்டியிருக்கும். தொலைதூர உறவினர் உங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சிலிகான் டிரே

கும்பம்

உங்களின் சொந்த யோசனையை நிறைவேற்ற உங்களுக்கு உத்வேகம் கிடைக்கும், ஆனால் விளைவுகளைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. அதற்கு நீங்கள் நம்பகமான சிலரிடம் ஆலோசனை கேட்கலாம். பிரபஞ்சம் உங்களுக்கு சாதகமான மாற்றங்களைக் குறிக்கிறது. யாரேனும் ஒருவரை அணுக நீங்கள் பயந்தால், இப்போது அதைச் செய்ய முயற்சி செய்யலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பழைய கேமரா

மீனம்

நீங்கள் யாரையாவது நேசித்தால், மறைந்திருக்கும் உணர்ச்சியை அடக்காதீர்கள். வெளிப்படுத்தாமல் இருப்பதை விட, சொல்லி நிராகரிப்பைப் பெறுவது நல்லது. நிலைமை வேறுவிதமாக, உங்களுக்கு சாதகமாகவும் மாறக்கூடும். உங்கள் தாயின் உடல்நிலை மீது அக்கரை தேவைப்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கண்ணாடி டம்பளர்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி