ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 18, 2022) விரும்பிய வேலையை செய்ய நல்ல வாய்ப்பு அமையும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 18, 2022) விரும்பிய வேலையை செய்ய நல்ல வாய்ப்பு அமையும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைக்கு மகிழ்ச்சி பொங்கும் நாளாக அமையும். உங்களுடைய அலுவலகத்தில் அதிக வேலை மற்றும் பிற பொது வேலைகள் காரணமாக நீங்கள் கொஞ்சம் சோர்வாக இருப்பது போன்ற உணரக்கூடும். சில அணுகுமுறைகளால் புதிய திட்டத்தை நீங்கள் நிர்வகிப்பீர்கள். உங்களது வாழ்க்கையில் ஏதாவது ஒரு வழியில் வரவிருக்கும் கொண்டாட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டிய நாள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீல பச்சை வண்ணம் கொண்ட ரத்தின கல்

ரிஷபம்:

இன்றைக்கு உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. ஏதாவது ஒரு பணியை முடிக்க வேண்டும் என்று நினைப்பில் தொடங்கினாலும் எந்தவித சூழ்நிலையையும் மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது. பல்வேறு பணிகள் காரணமாக உங்களுக்கு மன குழப்பங்கள் ஏற்படக்கூடும். எனவே நிதானமாக செயல்படுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு பீங்கான் கிண்ணம்

மிதுனம்:

இன்றைய நாளில் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். வாழ்க்கையில் உங்களுக்கென்று புதிய உறுதிமொழியை உருவாக்குவதோடு, எந்த நாளில் வேலையை செய்துமுடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை அமைக்கவும். உங்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் முடிப்பதற்கான ஆற்றல் கிட்டும் நாளாக அமையும். வெளிநாட்டிலிருந்து ஒரு நேர்மறையான செய்தி அல்லது உரையாடல் உங்களது மனதிலை பாசிட்டிவ் எனர்ஜியோடு வைத்திருக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரே வண்ணமுடைய பை

கடகம்:

இன்றைக்கு நல்ல நாளாக அமையக்கூடும். தேவையற்ற வாக்குவாதத்தால் உங்களது வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உறவு வலுவடையும் என்றாலும் படிப்படியாக சில சிக்கல்களை நீங்கள் அடையக்கூடும். எனவே இது போன்ற சூழலில் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும் போது நிபுணரை அணுகவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு பரிசு

சிம்மம்:

குடும்பத்துடன் மகிழ்ச்சியானத் தருணங்கள் இன்றைக்கு ஏற்படக்கூடும். உங்களின் பணியில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டாலும் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். நிலுவையில் இருந்த சில சட்ட சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அலங்கரிக்கப்பட்ட அறை

கன்னி:

இன்றைக்கு வேலையில் திடீரென்று ஏற்படும் முன்னேற்றம் உங்களது நாளை பிரகாசமாக்கும். உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படுங்கள். உங்கள் அவசரத்தைக் குறைத்தால் அனைத்துப் பணிகளும் சிறப்பாக முடியக்கூடும். இருந்தப் போதும் முன்கூட்டியே திட்டமிட ஆரம்பிக்க வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய விளக்கு

துலாம்:

இன்றைய நாளில் எடுக்கும் முடிவு உங்களை நிதானமாகவும், தளர்வாகவும் வைத்திருக்க முடியும். குடும்பம் மற்றம் நண்பர்களுக்கு உங்களைப் பற்றிய புதிய பிம்பவம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஏதாவது ஒன்றிற்காக உரையாடலை ஒத்திவைத்திருந்தால், அதை இப்போது செய்து முடிக்க வேண்டியிருக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிவான வானம்

விருச்சிகம்:

இன்றைக்கு வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களுக்குத் தெரிந்த சிலர் உங்களைப் பற்றி தேவையில்லாமல் பேசக்கூடும் என்றாலும் அதைப் பொருட்படுத்தாதீர்கள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க முயலுங்கள். வேலையில் ஒரு புதிய பங்கில் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் குடும்ப நண்பர் உதவி கிடைக்கும்

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பொன்னிற பொருள் ( amber stone)

தனுசு:

நீங்கள் வைத்திருக்கும் பழைய புகைப்படங்கள் நீண்ட காலமாக மறைக்கப்பட்ட நினைவுகளைத் தூண்டும். சில நிதி விஷயங்கள் உங்களுக்கு நம்பிக்கைக்குரியதாக மாறும். தெளிவான மனநிலையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தக் காரியம் நிறைவேறக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மரகதம்

மகரம்:

இன்றைக்கு சக்தி வாய்ந்த நாளாக உங்களுக்கு அமையும். இருந்தப்போதும் சிக்கலான விஷயங்களில் உங்களது அணுகுறையை நேர்த்தியாக கையாள வேண்டும். தீர்க்கப்படாத பிரச்சனைகளை மறுபரிசீலனை செய்யுங்கள். பணியைத் தொடங்குவதற்கு முன்னால், மன அமைதிக்காகத் தியானம் செய்ய முயலுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு உதவக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஏரி

கும்பம்:

இன்றைய நாளை உங்களது நண்பர்கள் சிறப்பாக மாற்றுவார்கள். நீங்கள் அனுபவிக்கக்கூடிய இனிமையான மனநிலைத் தோன்றும். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால் வெளியில் சாப்பிடுவதில் உங்களது ஆர்வத்தைக் கட்டுப்படுத்துங்கள். வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அடையாள பலகை

மீனம்:

இன்றைய நாளில் நீங்கள் பொறுமையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம். ஒரு புதிய உறவு வளர நேரம் எடுக்கும். அவசரம் தேவையில்லை. நீங்கள் புதிய தகவல் தொடர்புகளைத் தொடங்க இது ஒரு நல்ல நாளாக அமையக்கூடும். உங்களுக்கு வராத பணிகளைச் செய்வதற்கு முயற்சிக்க வேண்டாம். மனதைக் கட்டுக்குள் வைத்திருக்க மட்டும் முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி கம்பி

First published:

Tags: Oracle Speaks