ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 13, 2022) வாழ்க்கையில் புதிய வாய்ப்பு தேடி வருகிறது..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 13, 2022) வாழ்க்கையில் புதிய வாய்ப்பு தேடி வருகிறது..!

Deviga Vakku

Deviga Vakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

சின்னதொரு கொண்டாட்ட நிகழ்வு வர இருக்கிறது. புதிய உறவுகள் மலர இருக்கின்றன. நீண்ட காலமாக தேவையின்றி இருக்கும் விஷயங்களை முடித்து விடுங்கள். செல்ஃபோனில் பேசும்போது கோபத்தை கட்டுப்படுத்தி அமைதி காக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆடை ஒப்பனையாளர்

ரிஷபம்:

கடந்த காலங்களில் நீங்கள் நிறைய துன்பங்களை சந்தித்துள்ளீர்கள் என்றால், இப்போது கொஞ்சம் விடிவுகாலம் கிடைக்கும். பழங்கால பாரம்பரியங்கள் சில நமக்கு மகிழ்ச்சியை தருவதைக் காட்டிலும் கட்டுப்பாடு கொண்டதாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முன்மாதிரி நபர்

மிதுனம்:

திட்டங்களில் ஏற்படும் திடீர் மாற்றம் காரணமாக இந்த வாரமே மாற்றங்களால் நிரம்பிவிடும். கலாச்சார விழாவில் கலந்து கொள்வீர்கள். செல்வாக்கு மிகுந்த நபரை சந்திப்பீர்கள். அது உங்களுக்கு பலன் தருவதாக அமையும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளி மோதிரம்

கடகம்:

புதிதாக ஒரு விஷயத்தை தொடங்கும் முன்பு நீங்கள் பதற்றம் அடையக் கூடும். ஆனால், முழுமையான ஆற்றல் உங்களிடம் இருக்கிறது. சில முடிவுகளை எடுக்கும் முன்பாக குழப்பம் ஏற்படலாம். ஆனால், வாய்ப்பு தவறும் முன் தெளிவாக முடிவு செய்யவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஜா செடி

சிம்மம்:

கடும் முயற்சி எடுத்து காரியங்களை சாதிப்பதற்கான நாள் இதுவாகும். சிலர் உங்களை முந்திச் செல்லக் கூடும். ஆனாலும் நம்பிக்கையை விட்டு விடாதீர்கள். இன்றைய செயல்களுக்கு விரைவில் பாராட்டு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரிய உதயம்

கன்னி:

இன்றைய நாள் சற்று மந்தமாக தொடங்கினாலும், மதியத்திற்கு மேல் வேகம் எடுக்கும். பணி நெருக்கடி இருப்பதை உணருவீர்கள். கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு தீர்வு காண முயற்சி செய்யுங்கள். நண்பருடன் குதூகலமான நேரம் செலவழிப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கட்டடம்

துலாம்:

பல ஆண்டுகளாக நீங்கள் முதிர்ச்சி அடைந்துள்ளீர்கள். அதனால், சூழ்நிலையை ஆராயும் திறன் உங்களிடம் இருக்கிறது. உங்களுக்கு நெருக்கமான நபர் ஒருவர் துன்பத்தில் இருக்கிறார். நீங்கள் எதிர்பார்க்கும் சிறப்பான விஷயம் நடந்தேறும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பணப்பை

விருச்சிகம்:

உங்களுக்காக காத்திருக்கும் நபர் குறித்து உங்கள் சிந்தனை இருக்கும். ஆனால், உங்களுக்கு நேரம் இல்லை என்பதால் இருவருக்கும் இடையே வெறுப்பு உண்டாகலாம். பொதுவாழ்க்கையில் தொடர்புடையவர்களுக்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - எமரால்டு

தனுசு:

இன்றைக்கு மாபெரும் வாய்ப்புகள் கிடைக்கும். அவை சாதாரணமாகத் தோன்றினாலும், ஆர்வத்தை தூண்டுவதாக அமையும். நிலுவையில் உள்ள முடிவுகளை பரிசீலனை செய்யவும். மெசேஜ் மற்றும் ஃபோன் கால் மூலம் தொடர்பில் இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்கநிற தையல்

மகரம்:

இன்றைக்கு சிறப்புக் கவனம் எதுவும் தேவையின்றி நல்ல நாளாகவே அமையும். இன்றைய நாளில் ஷாப்பிங் செய்யவும். திடீரென்று வரும் நண்பர் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். உடல்நலன் குறித்து அக்கறை வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உப்புநீர் ஏரி

கும்பம்:

யாரோ சிலரை தொலைத்துவிட்டதாக நீங்கள் உணருவீர்கள். அந்த நபருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கவும். புதிய வாய்ப்பு தேடி வருகிறது. அது உங்கள் வாழ்க்கையை புதிய கோணம் மற்றும் திசையில் கொண்டு செல்லும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கலர் பை

மீனம்:

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால் மனம் புண்படக் கூடும் என்று நினைப்பீர்கள். வெளிப்படுத்தவில்லை என்றால் கவலைகள் அதிகரிக்கும். உங்கள் ரகசியங்களை அறிந்த நெருங்கிய நண்பர் மூலமாக ஆறுதல் கிடைக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆறு

First published:

Tags: Oracle Speaks