ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 10, 2022) எதிர்வரும் நாட்களில் வணிக வாய்ப்புகள் கிடைக்கும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 10, 2022) எதிர்வரும் நாட்களில் வணிக வாய்ப்புகள் கிடைக்கும்..!

Deiviga Vakku

Deiviga Vakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

கடந்த கால துயரம் மிகுந்த சிந்தனைகளை விட்டுவிடுங்கள். அது இனி உங்கள் வாழ்க்கையில் தொடர்புடையதாக இருக்காது. பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வழக்கறிஞர்கள் வெற்றி காண்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குருவி

ரிஷபம்:

தேர்வு முடிவுகளுக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அது உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் செயல்களுக்கான பாராட்டுக்கள் கிடைக்கும். டிசைனிங் தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காளான்

மிதுனம்:

உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அனைத்தும் தீர வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் சுயநலத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். நீண்ட கால பந்தங்களில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மயில்

கடகம்:

நீங்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையின் காரணமாக முடிவு எடுக்க தயங்குவீர்கள். இந்த விஷயத்தை இப்போது ஒதுக்கி வைப்பது நல்லது. வணிகம் தொடர்பான அறிவுரைகளை நீங்கள் மறு பரிசீலனை செய்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மாலை நேர குழப்பம்

சிம்மம்:

உங்கள் மனதில் இப்போது கோபம் தலைதூக்கி நிற்பதால் நாள் முழுவதும் நீங்கள் எரிச்சல் அடையக் கூடும். நல்லதோ, கெட்டதோ ஒரு துணையை தேடுவதே உங்களுக்கு மன அமைதியை தரும். உங்களுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்க இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஸ்

கன்னி:

எந்தவொரு ரகசியத்தையும் நீங்கள் வெகு காலத்திற்கு பாதுகாக்க முடியாது. நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள் என்று தெரிந்தாலே, சிலர் ஃபோன் செய்து என்னவென்று கேட்பார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விஷயத்தை இப்போது முன்னெடுத்துச் செல்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படகு

துலாம்:

கடந்த சில நாட்களாக நீங்கள் கடும் மன உளைச்சலில் இருந்து வரும் நிலையில், அதிலிருந்து வெளிவருவதற்கான நேரம் இது. சில தொந்தரவுகள் ஏற்படக் கூடும். பெற்றோருடன் மனம் விட்டு பேசுவது முக்கியம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உலோக உருவம்

விருச்சிகம்:

கொஞ்சம் சோர்வாக உணரக் கூடும். ஆனால், எதிர்வரும் நாட்களில் சவால் மிகுந்த பணிகள் இருப்பதால் அவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவும். உங்கள் முதுக்கு பின்னால் உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்கு

தனுசு:

உங்களை பற்றி விவாதிக்கப்படும் எந்தவொரு விஷயத்தையும் மனதில் போட்டுக் கொள்ள தேவையில்லை. உணர்ச்சிகரமான மனநிலையில் இருந்து வெளிவந்து யதார்தம் என்ன என்பதை புரிந்து கொள்ளவும். நிதிப் பலன்கள் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மலர்கள்

மகரம்:

கடந்த காலத்தில் யாருடனாவது விரோதம் கடைப்பிடித்து வந்தீர்கள் என்றால், அதற்கான எதிர்வினையை எதிர்கொள்ள இருக்கிறீர்கள். திடீரென்று பயணம் செய்ய நேரிடலாம். சொத்து, நிலம் தொடர்பாக நிலுவையில் உள்ள விஷயங்கள் சாதகமான திசையை நோக்கி நகரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்கு நிழல்

கும்பம்:

நீங்கள் கனவு கண்டு கொண்டிருப்பதற்கு முரணாக எல்லாமே யதார்த்தமாக நடைபெறுவதை உணருவீர்கள். இன்றைக்கு எடுத்துக் கொள்ளும் அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். மாலையில் கொண்டாட்டங்கள் உண்டு.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மியூஸிக்

மீனம்:

சில வெற்றியும், சில இழப்புகளும் ஒருசேர வர இருக்கிறது. புதிய இலக்கை செய்து முடிப்பதற்கான உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். எதிர்வரும் நாட்களில் வணிக வாய்ப்புகள் கிடைக்க இருக்கின்றன. நெருங்கிய உறவினருக்கு உங்கள் அறிவுரை தேவைப்படுகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளி

First published:

Tags: Oracle Speaks