ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 07, 2022) புதிய வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரலாம்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 07, 2022) புதிய வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரலாம்..!

Deiviga Vakku

Deiviga Vakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

நீங்கள் ஏற்கனவே எடுத்த முக்கிய முடிவை இன்று நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். தன்னலமின்றி மற்றவர்களுக்கு உதவுவதற்கான திடீர் உள்ளுணர்வு உங்களுக்கு ஏற்பட கூடும். உங்கள் உதவியை முன்பு பெற்ற ஒருவரால் இன்று உங்களுக்கு உதவி திரும்ப கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பாதாமி பழம்

ரிஷபம்:

உங்கள் உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள இன்று ஒரு அழகான நாள். இது போன்ற வாய்ப்புகளை நீங்கள் ஏற்கனவே பெற்றிருக்கலாம், ஆனால் இன்று உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு மிகவும் அற்புதமானது. ஒரே நேரத்தில் பல விஷயங்களில் முடிவெடுக்க வேண்டியிருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அப்சிடியன்

மிதுனம்:

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களது முதிர்ச்சியான அணுகுமுறை காரணமாக ஒரு கடினமான வேலையை எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உங்களது நீண்டநாள் திட்டத்தை இன்று விரிவாக்கம் செய்ய அல்லது மேம்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சணல் கூடை

கடகம்:

உங்கள் பணியிடத்தில் இன்று ஒரு நேர்மறையான இயக்கம் இருந்தாலும் அது வழக்கத்தை விட மெதுவாக இருக்க கூடும். சில நேரங்களில் நீங்கள் குறிப்பிட்ட பணியில் சிறந்து விளங்கினாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பத்திரிகை இதழ்

சிம்மம்:

ஆழமான மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு இன்று ஏற்ற நாள் என்பதால் உங்களை நெருக்கமானவர்களிடம் உள்ளுணர்வு எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் மனதை அமைதியாக வைத்திருப்பதற்கான பலன்களை நீங்கள் இன்று பெறுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மயில் இறகு

கன்னி:

கடந்த காலத்தில் செய்த சில தவறுகள் ஆழமான வடுக்களை விட்டு சென்றிருக்கலாம், ஆனால் அவற்றை மன்னிக்கவும் மறக்கவும் வேண்டிய நாள் இது. நீண்ட நாள் உங்களை குழப்பி கொண்டிருக்கும் சில விஷயங்களில் இன்று தெளிவை பெறுவீர்கள். பழைய நண்பர் ஒருவர் உங்களை சர்ப்ரைஸ் செய்யலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள்நிற மாணிக்கம்

துலாம்:

உங்களை பற்றிய செய்திகள் வெகுதூரம் வரை பரவி உங்களை இதுவரை சந்திக்காத ஒருவர் உங்களை தொடர்பு கொள்ள விரும்பலாம். இன்று முக்கியமான நபர்களுக்கு நேரம் ஒதுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் டூல்ஸ் வியாபாரத்தில் இருந்தால் பணியாளர் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பிரமிடு

விருச்சிகம்:

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன்கள் மற்றும் பாராட்டுகளை பெற வாய்ப்புள்ளது. ஒரு குறுகிய பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். உங்கள் காதல் உறவுடன் இன்று நீங்கள் அதிக நேரம் செலவிடுவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமானதாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கருப்பு டூர்மலைன்

தனுசு:

உங்கள் மனம் இன்று புதுமையான எண்ணங்களால் நிரம்பி வழியும். உங்கள் திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் ஆர்வமுள்ள ஒருவரை இன்று நீங்கள் சந்திக்கலாம். தீர்க்க முடியாத சில விஷயங்களை பற்றி யோசிப்பதை விட்டு விட்டு அடுத்தடுத்த பணிகளில் கவனம் செலுத்துவது தான் உங்களது நாளை உற்சாகமாக்கும் என்பதை மறவாதீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ட்ரங்க்

மகரம்:

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுக்காக நீங்கள் நேரம் ஒதுக்க கூடும், இதனால் நீங்கள் நிம்மதியாக உணரலாம். இன்று புதிய வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரலாம், எனினும் கவனமாக தேர்வு செய்வது முக்கியம். உங்கள் உடன்பிறந்தவர்களுக்கு ஏற்படும் சில நிதி சிக்கல்களை தீர்க்க நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டு நூல்

கும்பம்:

உங்கள் வாழ்க்கைக்கு பொருத்தமான ஒன்றை பற்றி உங்கள் பெற்றோருடன் நீங்கள் பேசி விவாதிக்க நினைக்கலாம். இன்று பணவரவு மேம்படும். வெகுநாட்களாக நீங்கள் எதிர்பார்க்கும் புதிய வாய்ப்புகள் இன்று உங்களுக்கு கைகூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டிசைனர் வாட்ச்

மீனம்:

உங்களது எளிமை மற்றும் சிக்கலற்ற அணுகுமுறை பல வேலைகளை இன்று எளிதாக்கும். நீங்கள் இன்று ஒரு சிறிய அளவிலான பார்ட்டியில் கலந்து கொள்ள நேரிடலாம், அங்கு நீங்கள் பிறரது கவனத்தை ஈர்க்கலாம். பிறரிடம் உங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புறா

First published:

Tags: Oracle Speaks