ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 06, 2022) அலுவலக சூழ்நிலை சாதகமாக இருக்கும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 06, 2022) அலுவலக சூழ்நிலை சாதகமாக இருக்கும்..!

Deiva Vekku

Deiva Vekku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்: 

முடிக்காமல் இருக்கும் வேலைகளை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். நிலுவைத் தொகை ஏதேனும் பாக்கி இருந்தால் அதை செலுத்தலாம். லேசான காய்ச்சல், தொற்று அல்லது தலைவலி ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வாக்குவாதத்தின் போது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் அடையாளம் - பசுமையான தோட்டம்

ரிஷபம்: 

இன்று மிகவும் ஆற்றல் வாய்ந்த தினம். சில புதிய வேலைகளைத் தொடங்க வைக்கும். யாராவது அசாதாரண உதவியைக் கேட்டால், நீங்கள் பணிவுடன் மறுக்கலாம். நிறைய நடை பயிற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் அடையாளம் - ஒரு சாம்பல் நிற இறகு

மிதுனம்: 

நீங்கள் மனதளவில் வலிமையாக இருந்தாலும் இன்று உங்கள் உணர்ச்சி பூர்வமான பக்கத்தை பலரும் தெரிந்து கொள்வார்கள். சமநிலையை அடைய பேச்சுவார்த்தை உத்திகள் தேவைப்படும். சக ஊழியர் உங்கள் உதவியை கேட்கலாம், உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள்.

அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் அடையாளம் - கூழாங்கற்களின் குவியல்

கடகம்: 

இன்று, நீண்ட காலத்துக்கும் முன்பு அறிமுகமானவரை சந்திப்பீர்கள் அல்லது மீண்டும் இணைவீர்கள். வெளிப்புற சந்திப்பை பாதிக்கும் படி வானிலை மாற்றம் ஏற்படலாம். நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தை ஆதரிக்கத் திட்டமிட்டிருந்தால், அதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் அடையாளம் - ஒரு கார்பன் காகிதம்

சிம்மம்: 

விருந்தினர்கள் முன்னறிவிப்பின்றி வீட்டுக்கு வரலாம். இன்று இனிமையான நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள பாக்கிகள் கைக்கு கிடைக்கும். உங்கள் ஊழியர்கள் ஏதேனும் ஒரு குறையைக் கொண்டு வரலாம், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்க்க வேண்டும்.

அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் அடையாளம் - முத்துச் சரம்

கன்னி: 

வேலையில் உள்ள சூழ்நிலை மிகவும் சாதகமாக இருக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் ஆவணங்களை அந்த அந்த இடத்தில் வைத்திருங்கள். நீங்கள் சரிவரத் தூங்கவில்லை என்றால், இன்று நன்றாகத் தூங்க வேண்டும்.

அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் அடையாளம் - எலுமிச்சை வாசனை

துலாம்: 

அக்கறை காட்டுவது உங்களை பலவீனமாக்காது. உங்கள் வலுவான கருத்தை முன்வைக்கவும். புதிதாக ஏதேனும் செய்யவும் இது ஒரு சிறந்த நாள். உங்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் அடையாளம் - ஒரு சிவப்பு தண்டு

விருச்சிகம்: 

கனவுகள் அல்லது கெட்ட கனவுகள் எல்லாம் ஆழ் மனதின் பயம் மட்டுமே, எனவே அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வேலையில் உள்ள ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம். பழைய நண்பருடன் பேசுவதன் மூலம் அந்த நாளை மறக்கமுடியாததாக ஆக்குங்கள்.

அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் அடையாளம் - ஒரு சிவப்பு செங்கல் சுவர்

தனுசு: 

நெருங்கிய ஒருவர் உங்களை மிஸ் செய்கிறார். அனைவரையும் சந்திக்க இன்றே நேரம் ஒதுக்குங்கள். மாலையை நோக்கி ஒரு வெளியூர் பயணம் உள்ளது. தேவைப்பட்டால் வழக்கமான மருத்துவ பரிசோதனை உதவியாக இருக்கும்.

அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் அடையாளம் - ஒரு நியான் ஹைலைட்டர்

மகரம்: 

பழைய நினைவுகள் இன்று உங்களை ஆட்கொள்ள வாய்ப்புள்ளது. உங்களை ஏதேனும் ஒரு விஷயம் சோதிக்கலாம். உங்கள் அம்மாவிடம் மீது அக்கறையாக இருந்தால், அவர் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்பலாம். பழைய அணுகுமுறைக்கு புதிய திட்டத்தை உருவாக்கவும்.

அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் அடையாளம் - ஒரு கண்ணாடி பாட்டில்

கும்பம்: 

உங்கள் பயம் இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இனி கெட்ட கனவுகள் இருக்காது, காலம் மாறிவிட்டது. கடந்த சில மாதங்களில் உங்களுக்கு கிடைத்தவற்றுக்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக உணர்கிறீர்கள். நீங்கள் கூடுதல் பொறுப்பு ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் அடையாளம் - ஒரு பழைய ஆலமரம்

மீனம்: 

நீங்கள் தான் உங்கள் குடும்பத்தின் தவிர்க்க முடியாத ஆதரவு அமைப்பாக செயல்படுகிறீர்கள். கல்வி வல்லுநர்கள் வழக்கத்தை விட அதிக வேலை செய்ய நேரிடும்.

அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் அடையாளம் - மூன்று பறவைகள் ஒன்றாக இருப்பது

First published:

Tags: Oracle Speaks