ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 05, 2022) பணிகளுக்கு தகுந்த பாராட்டு கிடைக்கும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 05, 2022) பணிகளுக்கு தகுந்த பாராட்டு கிடைக்கும்..!

Deiviga Vakku

Deiviga Vakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

நீங்கள் ஏற்கனவே எடுத்த முடிவை இப்போது மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். தன்னலமின்றி மற்றவர்களுக்கு உதவி செய்யத் தோன்றும். உங்களிடம் உதவி பெற்ற ஒருவர், உங்களுக்கு சாதகமான விஷயத்தை செய்யக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆப்ரிகாட் மரம்

ரிஷபம்:

உங்கள் ஆழ்மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான நாள் இதுவாகும். இதற்கு முன்பு இதுபோன்று வெளிப்படையாக பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்காது. இன்றைக்கு மனதின் பாரம் குறைந்து விடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளாஸ்

மிதுனம்:

கடினமான வேலையையும் உங்கள் பக்குவம் மிகுந்த மனதால் சமாளிப்பீர்கள். உங்கள் வாழ்க்கை வளர்ச்சி சார்ந்த அறிகுறிகள் தென்படும். இந்த முறை உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சணல் பை

கடகம்:

சில விஷயங்களை செய்யும்போது நீங்கள் சோர்வடையக் கூடும். பணியிடத்தில் பாசிட்டிவான முன்னேற்றம் தென்படும். ஆனால், அது வழக்கத்தை விட கொஞ்சம் குறைவான வாய்ப்புதான். நீங்கள் பின்வாங்க வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இதழ்

சிம்மம்:

ஆழமான, அர்த்தமுள்ள விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான நாள் இதுவாகும். அதை நீங்கள் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்து செயல்படுவதன் பலனை விரைவில் பெறுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மயில் இறகு

கன்னி:

பிறருடைய தவறுகள் உங்கள் மனதில் சில தழும்புகளை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அவற்றை மன்னித்து, மறக்க வேண்டும். பழைய நண்பரிடம் இருந்து ஆச்சரியம் மிகுந்த செய்தி வரலாம். மனதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மாணிக்க கல்

துலாம்:

உங்களை பற்றிய ஏதோ ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இதுவரையிலும் நீங்கள் சந்திக்காத நபரையும் கூட அது சென்று சேர்ந்துள்ளது. இதற்கு யார் காரணம் என கண்டறியுங்கள். பணி சார்ந்த பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிரமீடு

விருச்சிகம்:

தற்போதைய மந்தமான சூழல்களுக்கு இடையே புது வாழ்க்கை முறை தோன்ற இருக்கிறது. உங்கள் பணிகளுக்கு தகுந்த பாராட்டு கிடைக்கும். நீங்கள் காதலிக்கும் நபருடன் அதிக நேரம் செலவிட இருக்கிறீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படிகக்கல்

தனுசு:

நீங்கள் தீர்வு காண முடியாத விஷயத்தை விட்டு விடுங்கள் அல்லது மறந்து விடுங்கள். காதல் உணர்வு கொண்ட ஒரு நபரை நீங்கள் சந்திக்கக் கூடும். புத்தாக்க சிந்தனைகளில் உங்கள் மனம் மூழ்கியிருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தந்தம்

மகரம்:

நீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் புத்துணர்ச்சியாக உணருகிறீர்கள். புதிய வாய்ப்புகள் தோன்றும், அவற்றை பரிசீலனை செய்யலாம். உங்கள் நெருங்கிய நண்பருக்கு நிதி நெருக்கடி ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டு நூல்

கும்பம்:

இறுதியாக உங்களுக்கான புதிய வாய்ப்பு வர இருக்கிறது. அதை கவனமுடன் பரிசீலனை செய்யவும். ஏதோ ஒரு விஷயம் குறித்து உங்கள் பெற்றோர் உங்களுடன் விவாதிக்க நினைக்கின்றனர். விருந்தினர்களை எதிர்பார்க்கலாம். பண வரவு உண்டு.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கடிகாரம்

மீனம்:

எளிமை மற்றும் சமரசமில்லாத அணுகுமுறை ஆகியவற்றால் உங்கள் பணி எளிதாகும். பிறரிடம் அதிக எதிர்பார்ப்பு கொண்டிருந்தால் சில சமயம் நீங்கள் புண்பட நேரிடும். உங்களை கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புறா

First published:

Tags: Oracle Speaks