ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவு

சபரிமலை

சபரிமலை

Sabarimalai News: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று பள்ளி உணர்ந்தார், நிர்மால்ய பூஜை, அபிஷேகம் நடைபெற்ற பிறகு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்து நெய்யபிஷேகம் போன்ற வழிபாடுகள் செய்தனர். ஞாயிறு வார இறுதி நாள் இன்று சபரிமலையில் மதியம் வரை பக்தர் கூட்டம் மற்ற நாட்களை விட குறைவாக காணப்பட்டது.

உச்சபூஜை முடிந்து மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

பின்னர் 1 மணி வரை 27 ஆயிரத்து 766 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர். மண்டல காலம் தொடங்கிய பின் முதல் ஞாயிறான இன்று எதிர்பார்த்ததை விட பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். காலையை விட மாலையில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இதையும் படிங்க : பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறையாவது எப்போது? - ராமதாஸ் கேள்வி

இந்நிலையில், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 9 மணிக்கு அத்தாழ பூஜை, 10. 50 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன் 11 மணிக்கு நடை சாத்தப்படும், பின்னர் மீண்டும் நாளை அதிகாலை 3 மணிக்கு வழக்கம்போல் நடை திறந்து 4 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

ஐந்தாவது நாளான இன்றைய நாள்  வரை தரிசனம் செய்த மொத்த பக்தர்களின் எண்ணிக்கை இன்று இரவோடு 3 லட்சத்தை நெருங்கும் என கூறப்படுகிறது. மேலும் சுகாதாரம், பாதுகாப்பு உஷார்படுத்திய தேவசம்போர்டு மற்றும் கேரளா அரசு பம்பா முதல் சன்னிதானம் வரை 19 இடங்களில் அவசர மருத்துவ சிகிச்சை மையங்களை அமைத்துள்ளது. அதேபோல் பாரம்பரிய வன பாதையில் பல்வேறு இடங்களில் வனத்துறை உதவியுடன் கல்லிடாம் குன்று, கரியிலாம் தோடு உட்பட  பல்வேறு இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைந்துள்ளன.

மேலும் பம்பையில் இருந்து மலை ஏறும்போது நீலிமலை, அப்பாச்சிமேடு போன்ற கடினமான செங்குத்தாக உள்ள மலை ஏறும்போது ஐயப்ப பக்தர்களுக்கு மூச்சு திணறல், நெஞ்சுவலி ஏற்பட்டால் அலட்சியமாக நினைக்காமல்  உடனடியாக இந்த மையங்களில் இருந்து மருத்துவ உதவியை நாடவேண்டும் எனவும், எனவே மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறவேண்டும் எனவும் கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கேட்டு கொண்டார்.

அதேபோல் பாரம்பரிய வன பாதையிலும் வனத்துறையின் உதவியுடன், கல்லிடாம் குன்று, கரியிலாம் தோடு, உட்பட பல இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் செயல்படுவதாகவும் தெரிவித்தார். பக்தர்களுக்கு நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டால் செயற்கை முறையில் ஆக்சிஜன் சுவாசிக்கவும், ஓய்வு எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாரடைப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க பயிற்சி பெற்ற சுகாதார துறை ஊழியர்கள் இந்த மையங்களில் 24 மணி நேரமும் பணிபுரியும். பல்வேறு மொழிகளில் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் பக்தர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் சுகாதார துறை மற்றும் தேவசம் சார்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளையும் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Kerala, Kerala. Sabarimala, Tamilnadu