Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (13 ஜூன் 2022) ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யவது நல்லது.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (13 ஜூன் 2022) ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யவது நல்லது.!

Numerology

Numerology

Numerology | ஜூன் 13 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு அலுவலகம் மற்றும் குடும்பத்தில் உள்ள சீனியர்களின் ஆலோசனையை இன்று பெற வேண்டும். சொத்து வாங்குவது மற்றும் சொத்து விற்பது என இரண்டும் சுமுகமாக இருக்கும். விவசாயம், டீலர்ஷிப்கள், கட்டுமானம், புத்தகங்கள், மருந்துகள் மற்றும் நிதி ஆகிய வணிகங்கள் இன்று சீராக இருக்கும். குழந்தைகள் ஆசிரியர்கள் அல்லது பயிற்சியாளர்களிடமிருந்து பாராட்டுகளை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு
அதிர்ஷ்ட எண் - 3

தானம் - பிச்சைக்காரர்களுக்கு மஞ்சள் பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நான் சொன்னதால் தான் இது நடந்தது என்று பிறரிடம் உங்கள் கருத்துக்களை முன் வைப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். பண பொறுப்புகள் இன்று குறையும். உங்கள் மனம் மற்றும் மரியாதையை புண்படுத்தும் ஒருவரை இன்று நீங்கள் சந்திப்பீர்கள் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். மன அமைதிக்காக தியானத்தை பயன்படுத்த வேண்டிய நாள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று புதிய உயரங்களை காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெரியவர்களின் ஆசி இன்று உங்களுக்கு உண்டு. மாணவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இன்று அதிக வெற்றி மற்றும் வளர்ச்சி பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் குறிப்பாக நீங்கள் இசைக்கலைஞர்கள் அல்லது எழுத்தாளர்களாக இருப்பின் பெரும் சாதகமாக மாறும். அரசாங்க உத்தியோகஸ்த்தர்கள் எல்லாவித காரியங்களிலும் நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - வீட்டில் வேலை செய்யும் பெண் உதவியாளருக்கு குங்குமப்பூ தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உறவுகளில் இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் இன்று ஏமாற்றத்திற்கு இலக்காகலாம். பணவரவு அதிகமாக இருக்கும் என்றாலும் புதிய முதலீடு திட்டம் இன்று வேண்டாம். குறிப்பாக அரசியல் மற்றும் கேளிக்கை துறையில் உள்ளவர்கள் இன்று பயணம் செய்ய சாதகமற்ற நாள். இன்று அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - சனி
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரருக்கு போர்வை தானம் செய்வது அவசியம்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் விரக்தியாக உணர்ந்தால் கூட கடந்த கால சிறிய இழப்புகளை மறந்து விடுங்கள். ஏனென்றால் இன்று உங்களுக்கு ஒரு பிரகாசமான நாள் காத்திருக்கிறது. கடந்தகால செயல்பாட்டின் அங்கீகாரத்தையும் பலன்களையும் பெறும் நாள். மாணவர்கள் இன்று தங்கள் கல்வியில் சாதனைகளை செய்வார்கள் இதன் மூலம் பாராட்டுகளை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5

தானம் - கஷ்டப்படுவோருக்கு பச்சை இலைக் காய்கறிகளை தானம் செய்ய வேண்டும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தகராறுகளை தீர்த்து கொள்ள, ஆடம்பரச் செலவுகள் செய்ய. வீடு மற்றும் பங்குகளை வாங்க, பயணம் செய்ய, போட்டிகளில் பங்கேற்க, வெற்றியைக் கொண்டாட இன்று ஒரு சிறந்த நாள். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது உங்கள் நாளை மகிழ்ச்சியாக்கும். புதிய தொழிற்சாலை அமைக்க சொத்து தேடுபவர்களுக்கு நல்ல இடம் இன்று அமையும். நடிகர்கள் மற்றும் ஊடக பிரிவினர் வெற்றியை கொண்டாடுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு இனிப்புகளை தானம் செய்ய வேண்டும்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

யாராவது உங்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள் ஆனால் அவர்களது முயற்சி வெற்றி பெறாது. விளையாட்டு மற்றும் கல்வியில் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக பெரியவர்களின் ஆசி இருக்கும். எதிர் பாலினத்தவர்களுடனான நட்பு மற்றும் உறவு மூலம் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். இன்று மென்மையான மற்றும் கனிவான வார்த்தைகள் உங்களுக்கு வெற்றி தேடி தரும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களது நீண்ட கால ஆசைகள் குறிப்பாக பணத்துடன் தொடர்புடைய ஆசைகள் இன்று நிறைவேறலாம். குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கத்தை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் பொறுமையால் நாள் முடிவில் உங்களுக்கு வெகுமதி கிடைக்கும். பொது பிரமுகர்கள் மாலைக்குள் பண பலன்களை அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிச்சைக்காரருக்கு சிட்ரஸ் பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் வேலைகளுக்கு நடுவே கொஞ்சம் நெகிழ்வாக இருங்கள். இன்று அரசு உத்தரவுகளை அணுக ஒரு நல்ல நாள். விளையாட்டு வீரர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு அற்புதமான நாளாக அமையும். நடிகர்கள், ஆடிட்டர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் அதிர்ஷ்டத்தை இன்று அனுபவிக்க உள்ளனர்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - குழந்தைகளுக்கு சிவப்பு பேனாவை தானம் செய்யுங்கள்

ஜூன் 13-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: பியூஷ் கோயல், ராஜ் குமார் ராவ், திஷா பதானி, தருண் ஆதர்ஷ், ராஜ் ரெட்டி
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி