Home /News /spiritual /

எண் கணித பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (1 ஜூன் 2022) தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கு மிக சிறப்பான நாள் ஆகும்..!

எண் கணித பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (1 ஜூன் 2022) தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கு மிக சிறப்பான நாள் ஆகும்..!

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | ஜூன் 1 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக் கூடிய அளவில் ஆற்றல் கொண்டவராக இருப்பீர்கள். ஆகவே, சில அடி முன்னெடுத்து வைத்து, வணிகத்தில் ரிஸ்க் எடுங்கள். உங்களுக்கு அனைத்து விதமான சௌகரியம் மற்றும் பணப்பலன் கிடைக்கும். உங்கள் வெற்றியை பார்த்து பலர் பொறாமை கொள்ளக் கூடும். ஆகவே, மாலையில் பால் குளியல் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - சூரியகாந்தி எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் மனவோட்டம் அவ்வளவு சுறுசுறுப்பாக இருக்காது. காதலில் இருப்பவர்கள் உறுதியான பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள சற்று சிரமமான நாள். அலுவலகப் பணி மற்றும் தனி வாழ்க்கை இரண்டுக்கும் இடையே சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவழிக்க மிக சிறப்பான நாள். நிதி முதலீடுகளை பெரிய அளவுக்கு செய்ய வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் வெள்ளை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கு மிக சிறப்பான நாள் இதுவாகும். மாணவர்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆனால், உங்கள் ஆசானுக்கு நன்றி சொல்ல மறக்க வேண்டாம். உங்கள் காதலை திருமணத்திற்கு எடுத்துச் செல்வதற்கு சிறந்த நேரம். நீங்கள் அரசியலில் இருப்பவர் என்றால் கூட்டத்தை ஈர்ப்பதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு பேனா, பென்சில் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் சாஃப்ட்வேர் அல்லது ஹார்ட்வேர் சார்ந்த துறையில் வேலை செய்பவர் என்றால் உங்களுக்கு இன்று பெரிய வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. உடற்பயிற்சிக்கு உரிய நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் சோலார் மின் உற்பத்தி, பட தயாரிப்பு, சமையல் போன்ற பணிகளில் இருப்பவர் என்றால் சாதனங்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட உறவுகளில் ஒரு ரொமாண்டிக் பந்தம் ஏற்பட இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானமாக கொடுக்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வாழ்க்கையில் அமைதி நீடிக்க வேண்டும் என்றால் உறவுகளில் நேர்மையாகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்க வேண்டும். குழுக்களில் இணைந்து பணி செய்பவர்கள் இன்று தலைமை பண்பை உணருவீர்கள். உங்கள் சுதந்திரத்தை எந்த வகையிலும் தவறாக உபயோகிக்க வேண்டாம். உடன் பணியாற்றுபவர்கள் குறித்து கவனமுடன் இருக்க வேண்டும். ரகசியம் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - குழந்தைகளுக்கு செடிகளை தானமாக வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர்காலம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்றால் சவால்களையும், வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். குழந்தைகளைக் கண்டு பெற்றோர் பெருமை அடையும் தருணம் இது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - வெள்ளை நிற நாணயத்தை தானமாக கொடுக்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு பண பரிவர்த்தனைகளை தவிர்க்கவும். மருத்துவப் பரிசோதனைகள் செய்ய பரிந்துரை செய்யப்பட்டால் அதை மேற்கொள்ளவும். இன்று சூழ்நிலைக்கு தகுந்த தியாகங்கள் மற்றும் சமரசங்கள் தேவைப்படுகின்றன. எதிர் பாலினத்தவரின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். வழக்கறிஞரின் அறிவுரையை கேட்டால் பணத்தை சேமிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவில்களில் மஞ்சள் நிற நாணயம் தானமாக வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் வணிகத்தை மாற்றியமைக்க பணம் என்னும் சக்தியை பயன்படுத்தவும். சட்ட ரீதியான வழக்குகளுக்கும் தீர்வு கிடைக்கும். உங்கள் பண இருப்பை கண்டு உங்கள் பார்ட்னர் ஆச்சரியம் அடைவார். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் இன்றைக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் புத்திகூர்மை சிறப்பாக உள்ளதால் உங்கள் முடிவுகள் கச்சிதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு காலணிகளை கொடுக்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர்காலத்திற்கு திட்டமிட சிறப்பான நாள் ஆகும். அரசு ஒப்பந்த ஆவணங்கள் மிக எளிமையாக கையெழுத்தாகும். எதிர்கால அரசியல் தலைவர்களுக்கு இன்று புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். பொதுக்கூட்ட பேச்சு, நேர்காணல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளவும். மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு விருது கிடைக்க இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - சிவப்பு நிற பருப்பு தானமாக வழங்கவும்.

ஜூன் 1 அன்று பிறந்த பிரபலங்கள் : மாதவன், தினேஷ் கார்த்திக், நர்கிஸ், இஸ்மாயில் தர்பார், ரஜாத் படிதார்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி